மோடி ஜி… ஒரு பிறந்தநாள் வாழ்த்து | என் பார்வையில்
2002 முதல் உங்களைப் பின்தொடர்ந்து கவனித்து வருகிறோம்.
ஒரு மாநிலத்தின் முதல்வராக உங்கள் பயணம் தொடங்கியது. தொடர்ந்து மூன்று முறை அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்து, அதன் வளர்ச்சிப் பயணத்தில் உங்கள் தடத்தைப் பதித்தீர்கள். அதன்பிறகு, இந்திய நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றீர்கள். இன்று தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதவி வகிக்கும் அளவுக்கு உங்கள் அரசியல் பயணம் நீண்டிருக்கிறது.
ஒரு சாதாரண பார்வையாளனாக உங்கள் பயணத்தைப் பார்த்த என்னைப் போன்ற ஒருவனுக்கு, இத்தனை ஆண்டுகளின் மாற்றங்களை திரும்பிப் பார்க்கும்போது பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன.
Digital India…
Make in India…
உள்நாட்டு உற்பத்தி…
கட்டமைப்பு வளர்ச்சி…
இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளில் உங்கள் பங்கு இருக்கிறது.
உலக அரங்கில் இந்தியா தன்னம்பிக்கையுடன் நிற்கும் ஒரு காலகட்டத்தை இன்று நாம் பார்க்கிறோம்.
அதேபோல், பல தலைமுறைகளாக கோடான கோடி இந்தியர்களின் மனதில் இருந்த ஒரு கனவு — அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது.
“இது உண்மையில் நடக்குமா?” என்று ஏங்கிய கோடான கோடி மக்களில் அடியேனும் ஒருவன்.
அந்தக் கனவு நிஜமாகிய தருணத்தையும் நாம் பார்த்தோம்.
ஒரு அரசியல் தலைவரின் பயணத்தைப் பற்றி எழுதும்போது, அவருடைய அனைத்து முடிவுகளையும் ஒரே கோணத்தில் பார்க்க முடியாது. ஆனால், ஒரு நாட்டின் நீண்ட அரசியல் பயணத்தில் சில மாற்றங்கள் வரலாற்றில் தடம் பதிக்கின்றன.
அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த உங்கள் பயணத்தை, இத்தனை ஆண்டுகளாக கவனித்து வந்த ஒருவனாக இன்று இந்த பிறந்தநாள் வாழ்த்தை மனதாரச் சொல்ல விரும்புகிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி ஜி! 🎂🇮🇳
உங்களுக்கு ஆண்டவன் அருள் எப்போதும் கிடைக்கட்டும்.
இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கும், அடுத்த கட்ட பாய்ச்சலுக்கும் கொண்டு செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி உங்களுக்கு எப்போதும் துணை நிற்கட்டும். 🙏❤️
Happy Birthday, Narendra Modi Ji! 🇮🇳🎉
இவன்
ராஜா. க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக