ஒரு முறை மஹாத்மா (காந்திஜி)
மஹாத்மா காந்திஜி ஒரு நாளில் கனவில் ஒருவரை கொலை செய்கிறார். சட்டென்று விழித்து, அந்தக் கனவு அவரை மிகவும் வருத்தப்பட வைத்துவிடுகிறது.
அவர் ஆழமாக சிந்திக்கத் தொடங்குகிறார்—"நமக்கு இப்படிப் பட்ட எண்ணங்கள் (கொலை செய்வது போன்றது) கனவில் எப்படி வருகிறது?" என்கிற கேள்வி அவரை தொந்தரவு செய்கிறது.
அதன் பிறகு, சிறையில் இருக்கும் வார்டனை அழைத்து, "நேற்று இரவு எனக்குச் சமையல் செய்தது யார்?" என்று கேட்கிறார்.
வார்டன் பதிலளிக்கிறார், "வழக்கமாக உங்களுக்கு சமையல் செய்வவர் சமைக்கவில்லை. அவருக்கு பதிலாக, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி தான் உங்களுக்குச் சமைத்தார்."
இதைக் கேட்டவுடன், மஹாத்மாவுக்கு புரிகிறது—உண்ணும் உணவு மட்டுமல்ல, அதை யார் தயாரிக்கிறார்களோ, அவர்களின் எண்ணங்கள், மனநிலை, உணர்வுகள் கூட அந்த உணவில் பிரதிபலிக்கிறது.
அதனால் தான் சிலர் வெளியில் சாப்பிடாமல் வீட்டிலேயே சாப்பிட விரும்புகிறார்கள். உணவை நேசத்துடன், மனச்சாந்தியுடன், நன்றியுடன் சமைக்க வேண்டும். சினிமா நடிகர் சூப்பர் ஸ்டார் பேட்டை படத்தில் சொல்வது போல—"Love பண்ணி சமைக்கணும்!"
நாம் உணவை சாதாரணமானதாக நினைக்கலாம், ஆனால் உணவைப் பற்றிய நம்முடைய எண்ணங்களும், அதைத் தயாரிக்கிறவரின் எண்ணங்களும் அதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
அன்புடன், ஆரோக்கியத்துடன் சமைக்கவும், உணவும்!
#PositiveVibes
#FoodEnergy
#MindfulEating
#SpiritualWisdom
#GandhijiThoughts
#CookWithLove
#GoodVibesOnly
#HealthyMindset
#FoodForThought
#LoveAndPeace
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக