தலைவாசல் – 90களின் கல்லூரி கதை
தலைவாசல் திரைப்படம் 90களில் கல்லூரி வாழ்க்கையை கண் முன்னே கொண்டுவரும் ஒரு சிறந்த திரைப்படம். கமல்ஹாசனின் நம்மவர் படத்திற்கு முன்னோட்டமாக படம் இது, ஒழுக்கக் கேடு நிறைந்த கல்லூரியின் மாற்றத்தை மையமாகக் கொண்டது.
கதைக்களம்:
சென்னையின் நாச்சியப்பன் கல்லூரி ஒழுக்கக் கேடுகளால் கஞ்சா, அடிதடி, தவறான வழிகளில் சென்ற மாணவர்களை திருத்த முதல்வராக வரும் SP.பாலசுப்ரமணியம் அவர்களின் கதாபாத்திரம் முக்கியம்.
நாயகன்:
ஆனந்த் என்றாலும், கதையின் ஆதாரமாக இருக்கும் SP.பாலசுப்ரமணியம் வலிமையான பாத்திரமாக அசத்துகிறார்.
நாயகி:
சில படங்களில் புகழ்பெற்ற சிவரஞ்சினி, தன் இனிமையான நடிப்பால் மையம் கவர்ந்தார்.
வில்லனாக நாசர்:
நாசர் அவர்கள் "பீடா சேட்" கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். நெல்பொலியனின் நிச்சயம் பாராட்டத்தக்க பங்களிப்பு இதில் உள்ளது.
கானா பாடல்களின் வரவேற்பு:
பாலபாரதியின் இசையில்
கானா பாடல்கள் தமிழ்சினிமாவில் முதல் முதலாக முத்திரையிட்டது. கானா பாபு வாக வாழ்ந்து இருப்பார் நடிகர் விஜய் அவர்கள் இதன் பின்னர் தான் "தலைவாசல் விஜய்" என அழைக்கப்பட்டார்.
இயக்குனர் செல்வாவின் வெற்றி:
கல்லூரி மாணவர்களின் சமூகச் சிக்கல்களை துல்லியமாக வெளிப்படுத்திய இந்த படம் கமர்ஷியல் சினிமாவின் வணிக வெற்றி மட்டுமல்லாமல் ஒரு நினைவுப்படமாகவும் திகழ்கிறது.
தலைவாசல் – ஒரு கல்லூரி வாழ்க்கை, சமூகப் பிரச்சினைகள், அரசியல், மற்றும் எமோஷன்களின் சிறந்த கலவையாக தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்துள்ளது.
#தலைவாசல்
#தலைவாசல் #Thalavaasal #90களின்_நினைவுகள் #தமிழ்_திரைப்படம் #கல்லூரி_வாழ்க்கை #SPB #நாசர் #கானா #தமிழ்சினிமா #Nostalgia #Kollywood #ClassicMovies #TamilHits #TamilBloggers #CinemaReview
#MovieReview #TamilNadu #TamilCulture #CinemaNostalgia #TrendingTamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக