திங்கள், 27 ஜனவரி, 2025

திரு. மாணிக்கம் – ஒரு உணர்ச்சிப் பூர்வமான திரைப்படம்: ரிவியூ

 திரு.

மாணிக்கம் – ஒரு உணர்ச்சிப் பூர்வமான திரைப்படம்: 

பஸ் ஸ்டான்டில் புத்தக கடையுடன் லாட்டரியையும் சேர்த்து விற்கும் ஒரு நேர்மையான மனிதர், அவரின் வாழ்க்கையும் குடும்பத்தின் சவால்களும், மனிதரின் உள்ளம் வருடும் கதைதான் திரு. மாணிக்கம்.

கதை சுருக்கம்:

இக்கதையின் மையத்தில் நிற்கும் நாயகன், ஒரு சின்ன லாட்டரி கடை நடத்தி, தனது இரண்டு பெண் குழந்தைகளையும், மருத்துவ சிகிச்சைக்காக போராடும் மகளையும், தனது கடன் சுமைகளையும் சமாளிக்கிறார்.

ஒருநாள், கடனாக ஒரு பெரியவருக்கு லாட்டரி சீட்டொன்றை தருகிறார். அதிர்ச்சியாக அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுகிறது. ஆனால் அந்த பெரியவரின் மகள், வரதட்சணை பிரச்சனை காரணமாக தனது பிறந்த வீட்டிற்கு திரும்பி வரும் சூழல், கதையில் நெகிழ்ச்சியான திருப்பங்களை உருவாக்குகிறது.

நேர்மையான லாட்டரி கடைக்காரர், பரிசு பெற்ற லாட்டரி சீட்டை அந்த பெரியவரிடம் கொடுக்க செல்லும் போது, அவரது குடும்பத்தினரும், காவல் துறையும் தங்களின் செல்வாக்குடன் அவரை தடுக்க முயல்கிறார்கள். இந்நிலையில், அவர் நேர்மையுடன் நிலைத்திருக்க எடுத்த முடிவுகள் பார்வையாளர்களின் நெஞ்சை நெகிழவைக்கும்.

இக் கதாப்பாத்திரத்துக்கு சமுத்திரக்கனியை விட யாரும் சரியாக பொருந்த முடியாது. அவரது நடிப்பு, பார்வையாளர்களை அவரது கதாபாத்திரத்துடன் ஒன்றி வாழ வைக்கிறது. குறிப்பாக, அவர் காட்டும் நேர்மை படம் பார்க்கும் நம்மையும் அவருடைய குடும்ப உறுப்பினர் போலவே அவர் மீது கோபப்பட வைக்கிறது. அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் நன்கு அமைக்கப்பட்டுள்ளது.

ஏன் இவ்வளவு நேர்மை குசும்பு க்கு காரணம்?

அழுத்தமான fLashback, அதுக்கு உயிர் கொடுத்திருப்பார் "நாசர்" அவரின் பரவசமான நடிப்பு, கதை க்கு உயிர் கொடுக்கிறது.

மனித உணர்வுகளை சித்தரிக்கும் கலை:

இத்தகைய திரைப்படங்கள் மனிதர்களின் உணர்வுகளைச் சித்தரிக்கின்றன. உறவுகள், நேர்மை, மனித உணர்வுகளை மனதிற்கு பதியும்படி கொண்டுவந்துள்ளது திரு. மாணிக்கம்.

என்னை கவர்ந்த அம்சங்கள்:

1. நேர்மையின் மீது அழுத்தம் கொடுக்கும் கதை.

2. கதாபாத்திரங்களில் வாழ்ந்து காட்டும் சமுத்திரக்கனியின் நடிப்பு.

3. நாசரின் ஃபிளாஷ்பேக் கதைக்கு கொடுக்கும் காட்சி.

4. நுணுக்கமான உணர்வுகளை சித்தரிக்கும் மனதை வருடும் பின்னணி இசை.

5. படம் சுபமாக முடிந்து Feel Good அனுபவத்தைக் கொடுப்பது.

அந்த நேர்மையும் கண்ணியமும் உள்ள மனிதர்கள் இன்றும் இருக்கின்றனர் என்பதற்கு திரு. மாணிக்கம் ஓர் அழுத்தமான சாட்சியம்.

Zee5 OTT-யில் உள்ளது.

ஓர் feel Good movie படங்களை விரும்புபவர்கள் தவறாமல் பாருங்கள்!

#ThiruManickam #Zee5 #Tamilmovie @thondankani 👏🏻👏🏻👏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக