ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

சில காட்சிகள் சிலிர்ப்பைத் தாண்டி… — திருச்செந்தூர் சக்கரவர்த்தி தர்பார்

 திருச்செந்தூரில் சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது வெறுமனே மகிழ்ச்சி ஏற்படாது… ஏதோ ஒரு விதமான சிலிர்ப்பு மனதுக்குள் ஓடும்.

அப்படிப்பட்ட ஒரு காட்சி எனக்கு அறிமுகமானது பல வருடங்களுக்கு முன்பு.

என் தந்தையின் நண்பர் ஒருவர். நல்ல பழக்கம். ஒருமுறை அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது,

“வா ராஜா… என் கூட சக்கரவர்த்தியைப் பார்க்கப் போவோம்” என்றார்.

அப்போது எனக்குள் இருந்த மனநிலை வேறு.

கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால் தேடித் தேடி கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் பெரிதாக இருந்ததில்லை. நம்முடைய வாழ்க்கையில் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தாலும், அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துவதில் நான் அவ்வளவு தீவிரமானவன் இல்லை.

ஆனால் அன்று அவர் என்னைக் காண்பிக்க அழைத்துச் சென்ற அந்தக் காட்சி, இத்தனை வருடங்களுக்குப் பிறகும் என்னை ஈர்க்கும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

அவருடன் சென்றேன்.

எங்கள் ஊர் திருச்செந்தூரில் நடைபெறும் திருவிழாவின் ஏழாம் திருநாள்.

மண்டபத்திலிருந்து சக்கரவர்த்தி சண்முகர், தங்கச் சப்பரத்தில் வெளியே வரும் தருணம் அது.

அப்போது அவர் என்னிடம்,

“ராஜா… நல்லா பாரு”

என்றார்.

நானும் கவனமாகப் பார்க்க ஆரம்பித்தேன்.

சப்பரம் மண்டபத்திலிருந்து வெளியே வரும் அந்த நேரத்தில், சூரியக் கதிர்கள் தங்கச் சப்பரத்தின் மீது விழுந்தன.

அந்த ஒளியில் சண்முகர்…

தகதகவென ஜொலித்தார்.

அது வெறும் தங்கத்தின் பிரகாசம் இல்லை.

சூரிய ஒளி, தங்கச் சப்பரம், சண்முகரின் திருமேனி, அதைச் சுற்றியிருந்த பக்தர்களின் பரவசம் — எல்லாமும் சேர்ந்து அந்த நொடிக்கு ஒரு தனி அழகைக் கொடுத்திருந்தது.

அதோடு சப்பரம் அசையும் போது எழும் மணியோசை…

சப்பரம் உலுக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் அந்த மணி ஒலிக்கும்.

அதைப் பார்ப்பதும்…

அந்த ஓசையைக் கேட்பதும்…

அவ்வளவு ரம்யமாக இருக்கும்.

அன்று அந்தக் காட்சியைப் பார்த்தபோது, அவர் ஏன் என்னை “நல்லா பாரு” என்று சொன்னார் என்பது புரிந்தது.

அந்த ஒரு காட்சி மனதில் அப்படியே பதிந்துவிட்டது.

அதன்பிறகு, திருச்செந்தூர் திருவிழா என்றாலே அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஈர்ப்பு எனக்குள் வந்துவிட்டது.

ஒவ்வொரு முறையும் திருவிழா நாட்களில் சென்று அந்தத் தருணத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அப்போது இவ்வளவு கூட்டம் இருக்காது.

நின்று நிதானமாகப் பார்க்க முடியும்.

சூரிய ஒளியில் ஜொலிக்கும் சண்முகரைப் பார்க்கலாம்.

சப்பரத்தின் அசைவைக் கவனிக்கலாம்.

அந்த மணியோசையை மனதுக்குள் வாங்கிக்கொள்ளலாம்.

சில காட்சிகள் அப்படித்தான்.

அவற்றைப் பார்க்கும்போது அந்த நொடி மட்டும் நமக்கு அழகாகத் தெரியாது.

அந்தக் காட்சி நம்முடைய நினைவுகளில் ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.

எனக்கும் திருச்செந்தூரின் இந்தக் காட்சி அப்படித்தான்.

ஒரு நாள் என் தந்தையின் நண்பர், “வா… சக்கரவர்த்தியைப் பார்க்கலாம்” என்று அழைத்துச் சென்றார்.

அன்று அவர் காண்பித்த அந்தக் காட்சி…

இன்று வரை என்னை அழைத்துக்கொண்டே இருக்கிறது.

திருச்செந்தூர் எனக்கு வெறும் ஊர் அல்ல.

அதன் கடலும், கோயிலும், திருவிழாவும், தெருக்களும், அந்த மணியோசையும், சண்முகரின் தரிசனமும் — ஒவ்வொன்றும் ஏதோ ஒரு நினைவோடு இணைந்திருக்கிறது.

அதில் மறக்க முடியாத ஒன்று…

தங்கச் சப்பரத்தில் சூரியக் கதிர்களில் ஜொலிக்கும் எங்கள் சக்கரவர்த்தி சண்முகர்.

வாய்ப்பு இருப்பவர்கள் ஒருமுறை சென்று பாருங்கள்.

அந்தக் காட்சியை புகைப்படத்தில் மட்டும் பார்க்காமல்…

நேரில் நின்று ரசித்துப் பாருங்கள்.

எங்கள் செந்தூர் சக்கரவர்த்தியின் தர்பாரை. 🙏🏻🪷

#ஆவணித்திருவிழா2026

#திருச்செந்தூர்

#சக்கரவர்த்தி

#சண்முகர்

இவன் 

ராஜா க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக