வெள்ளி, 24 ஜனவரி, 2025

“தி ரயில்வே மேன்” - ஒரு மனிதநேய பயணம்!

 "தி ரயில்வே மேன்" வெப் சீரிஸ் 

1984 இல் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள Union Carbide India Limited (UCIL) தொழிற்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து அனைவரின் மனதிலும் நிற்கும். Methyl Isocyanate (MIC) காற்றில் கலந்து அப்பகுதி மக்களை ஒய்வு எடுக்காமல் தாக்கியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். அந்த கொடிய நாளில், போபால் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரின் துணிச்சலான செயல் பல உயிர்களை காப்பாற்றியது. இதையே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது "தி ரயில்வே மேன்" வெப் சீரிஸ்.

இந்த கதையின் மையமாக ஸ்டேஷன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் கே. கே. மேனன், ஜெனரல் மேனேஜராக ஆர். மாதவன், திருடனாக திவ்யேந்து, துடிப்பான இளைஞனாக பபில் கான் ஆகியோர் தங்கள் நடிப்பால் கவர்கிறார்கள் . இந்திய ரயில்வே நெட்வொர்க்கின் அமைப்பு, அதை இயங்கச் செய்யும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, இன்றும் உலகை பிரமிக்க செய்கிறது. இந்த வெப் சீரிஸ் பார்க்கும் போது நாம் உணர்வோம்.

கதை உணர்ச்சிப்பூர்வமாக செல்கிறது. ரயில்வே அதிகாரிகளின் சாதனைகள் மட்டுமல்ல , கலவரக் குழுவிடமிருந்து சீக்கியர்களை காப்பாற்றும் மனிதர்களின் கதை நம்மை நெகிழச் செய்கிறது. அதேபோல், MIC விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்ய வரும் ஜெர்மன் விஞ்ஞானி மற்றும் சில அதிகாரிகளின் முயற்சிகள் இன்னும் மனிதநேயத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன.

இந்த வெப் சீரிஸ் சமூகத்தின் நல்லவர்களால் தான் இன்றும் மனிதகுலம் தொடர்வதை மீண்டும் நினைவூட்டுகிறது. ஒரு வெற்றி மிக்க திரைக்கதை, சிறந்த நடிப்பு, உணர்ச்சிமிக்க காட்சிகள்.

இந்தக் கதை முடிந்தவுடன், ரயில்வே துறையின் பெருமை நம் மனதில் உயர்ந்து நிற்கும்.

இந்த வெப் சீரிஸை கண்டிப்பாக பார்க்கலாம் 

available in #Netflix 

“தி ரயில்வே மேன்” - ஒரு மனிதநேய பயணம்!

#Netflix #Therailwayman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக