இன்று (22-01-2024) அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை அலுவலக நண்பர் ஒருவருடன் Mobile பார்த்து கொண்டு இருந்தோம். விழாவை பார்த்து கொண்டிருக்கும் போதே அவரை அறியாமல் அவர் கண்களில் கண்ணீர் வந்தது , அவரை தேற்றினேன் பிறகு சகஜ நிலைக்கு திரும்பினார். பிறகு அவரிடம் நான் கூறினேன்.
நான் பல முறை எங்கள் ஊர் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமியை வணங்குகையில் என்னை அறியாமல் சில நேரங்களில் கண்ணீர் சிந்தியது உண்டு , ஆனால் இன்று சக்கரவர்த்தி திருமகன் ஸ்ரீ ராமரை கண்ட பொழுது அந்த மாதிரியான உணர்ச்சி மிக்க வழிபாடு இல்லையே என அவரிடம் கூற அலுவலக நண்பர் (North Indian) உங்களுக்கு இங்கே
நிறைய கடவுள் , கோயில்கள் உள்ளது , சென்னையில் மட்டுமே இவ்வளவு கோயில் நீங்கள் கொடுத்த லிஸ்ட் நான் நினைத்து ஆச்சரியபட்டுள்ளேன். எங்கள் பகுதியில் அப்படி அல்ல ஒன்று சிவன் இல்லையேல் ராமர் மட்டும் தான் என்றார் , அங்கே உங்கள் ஊரில் உள்ளது போல கோயில்கள் இல்லை மிகவும் கம்மியே ,
அவரை புரிந்து கொண்டேன்.சில மணி நேரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு வந்து விட்டார் ஆனால் அவர் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி சிலவற்றை நாம் புரிந்து கொள்ள முயற்சி க்க வேண்டும்இல்லை என்றால் கடந்து விட வேண்டும்.அதை விடுத்து எல்லாம் தெரிந்தது போல மற்றவர்கள் நம்பிக்கையை பகடி செய்வது அபத்தம்.
இவன்
ராஜா.க
#RamMandirPranPrathistha
#RamLallaVirajman
#Rammandhir
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக