Food டெலிவரி செய்யும் நாயகன் OCD பேஷண்ட் , வீட்டில் வேலை செய்யும் நாயகி. இவர்கள் இருவருக்கும் காதல். காதலிக்கு ஆபத்து காதலன் உதவி செய்கிறான். பழி காதலன் மீது விழுகிறது.
அதற்கு பின் என்ன நடக்கும் "#அநீதி" தான் படம்.
பணக்காரர்கள் மீது இயக்குனர் அவ்ளோ கோபமா ரொம்ப கொடூரமா காட்சி படுத்த முயல்கிறார் வசந்தபாலன்.
எந்த காலத்தில் இருக்கிறீர்கள் ?
காட்சிகள் பாதிக்கப்பட்டவர்கள் மீது பரிதாப படுவதுக்கு பதில் எரிச்சலை வர வைக்கிறது.
அங்காடி தெருவில் இருந்த இயல்பு இதில் மிஸ்ஸிங்.
நாயகன் கோபம்/வெறி வெயில் பட பசுபதி நினைவு படுத்துகிறது. படத்தில் ஒரே ஆறுதல் flashback காட்சி அப்பா/மகன் செண்டிமெண்ட்.
வெயில் , அங்காடி தெரு இரு படங்களையும் சேர்த்து உங்களை நம்பி படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு நீங்கள் செய்த அநீதி இந்த படம்.
#Aanethi #அநீதி #வசந்தபாலன் #Tamilmovie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக