சனி, 15 ஜூலை, 2023

மாவீரன் திரைவிமர்சனம்

 சென்னையின் கூவம் நதியோரம் தகர கொட்டகைக்குள் வாழும் விளிம்புநிலை மக்கள், அரசின் குடிசை மாற்று வாரியத்தால்  அமைய உள்ள அபார்ட்மெண்ட் க்குள் குடி பெயர்கிறார்கள்.அந்த கட்டிடம் என்னனாது ,மக்கள் என்னார்கள் என்பதை சம கால அரசியல் கலந்து மக்களை காப்பாற்றினானா மாவீரன் ?

தகர கொட்டகைக்குள் வாழ்ந்தாலும் , மாளிகையில் வாழும் இளவரசியை காப்பாற்றும் காமிக்ஸ் கதாபாத்திரங்களை வரையும் 

நாயகனாக சிவகார்த்திகேயன்.

தான் வரையும் கார்ட்டூன்களை தினசரி செய்தித்தாளில் இன்னொருவர் பெயரில் வருவதை ஏக்கத்துடன் பார்ப்பது , பயந்து வாழ்க்கை யில் எல்லாவற்றையும்  adjust செய்து பழகி கொள்ளும் இளைஞன். அம்மா வின் திட்டை பொறுத்து கொள்ளாமல் தற்கொலை க்கு முயல்வதும் அதன் பின் அவருக்கு கேட்கும் அசரீரி குரலால் அடி , தடி யில் இறங்கும் ஆக்க்ஷன் அவதாரம் என அதகளம் செய்கிறார் சிகா. 

பாடல்களில் நடனம் , யோகி பாபுவுடன் காமெடி , அசரீரி குரல் (விஜய் சேதுபதி) கேட்டு சிகா செய்யும் செய்கைகள் விஜய் சேதுபதி யும் படத்தில் நடிப்பது போல உணர்வு. 

இவ்வளவு பலமான ஹீரோக்கு சற்றும் சளைக்காத வில்லன் கதாபாத்திரம். இயக்குனர் மிஸ்கின் எமனாகவே வாழ்கிறார். கோப படுவதும் ,தன் நண்பனிடம் நண்பா என பாசமாக கூறுவதும் சிகா வை அடித்து துவைப்பது ,என பக்கா வில்லன் கதாபாத்திரம். இறுதியில் எனக்கும் 22 வருடமாக குரல் கேட்கிறது என கூறுவது directorடச்.

தன்னை சுற்றி நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும் பெண்ணாகவும், தைரியமில்லாத மகனை திட்டி தீர்க்கும் அம்மா , 

நாயகியின் தாயாக சரிதா அனுபவ நடிப்பில் மிளிர்கிறார்.

நாயகனுக்கு உரிய வேலையை வாங்கி கொடுக்கும் துணிச்சல் மிகு மங்கை நாயகி அதிதி ஷங்கர் ,இவர்கள் இருவருக்கு மிடையே மலரும் நட்பு காதலாக மாறுவது யதார்த்தம். 

விறுவிறு திரைக்கதை , பாடல்கள் , காமெடி அடி தடி என்னும் செல்லும் முதல் பாதி ,

சலிப்பான காட்சிகளால் இரண்டாம் பாதியில் சற்று தொய்வடைந்து அசறீரி குரல் கேட்கை யில் மறுபடியும் படத்தின் வேகம் கூடுகிறது. இறுதியில் நாயகன் வெல்ல போகிறான் என்பதை யூகிக்க முடிந்தாலும்

சிகா வின் பலம் குழந்தைகள் , குடும்ப ரசிகர்கள் அவர்களை

இருக்கையில் இருந்து வெளிவர மனமில்லாமல் இறுதி காட்சி வரை பார்க்க வைத்து விடுகிறான் இந்த மாவீரன்.

இவன்

ராஜா.க

 #Sivakarthikeyan

 #MaaveeranReview

 #Maaveeran

 #MaaveeranMovie 

#MaaveeranBlockBuster

#MaaveeranFromToday

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக