சிறு வயது முதலே கதை கேட்பதில் ஆர்வம் உண்டு. அடுத்த கட்டம் School days இல் வரலாறு மீது கொண்ட ஆர்வம் , குடிமையியல் மீதான கேள்விகள் , புவியியல் மீதான ஆச்சரியங்கள் என சமூக அறிவியல் பாடம் மீது அதீத விருப்பம்.
புத்தக பாடத்தை தாண்டி இந்திய அரசியலை பால படமாக கற்று கொடுத்த குரு சாந்தா டீச்சர். அவர்கள் மீதான மதிப்பு அப்படத்தில் மேலும் ஆர்வம் காட்டியது. அப்படி ஒரு முறை கூறிய பாடம் 1975 இல் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு.
Justice Jagmohanlal Sinha சர்வ வல்லமை படைத்த இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று கூறி வரலாற்று தீர்ப்பு எழுதினார் என்று கூறினார். அப்போது தான் தெரியும் இந்திய நீதி துறையின் அதிகாரம் பற்றி படித்து தெரிந்து கொண்டேன்.
இதெல்லாம் இனி வரும் காலங்களில் நடக்குமா என எனக்கு நானே கேள்வி கேட்பதுண்டு. வருடங்கள் உருண்டோடின 30 வருடம் கழித்து 2015 செப்டம்பர் 27இல் அது போன்ற தொரு தீர்ப்பு இம்முறை பண பலம் , அதிகார பலம் என அனைத்தையும் தாண்டி நீதியரசர் குன்ஹா தன் தீர்ப்பை எழுதினார். அதில் PB ஆச்சார்யா விற்கு முக்கிய பங்குண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக