தூள் !!!
பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்பே படம் ரிலீஸ்.
#நெல்லை பூர்ணகலா தியேட்டரில் நண்பர்களுடன் பார்க்க சென்றாகிவிட்டது. Online இல்லாத காலகட்டம் மேட்னி ஷோக்கு கூட்டம் அப்படி, இப்பிடி னு நண்பன் டிக்கெட் வாங்கிவிட்டான்.
#தில் இன் தில்லான வெற்றிக்கு பின் தரணி-#விக்ரம் இணைகிறார் கள் இரண்டாவது முறை ஏகப்பட்ட எதிர்பார்ப்பு,
#வித்யாசாகர் துள்ளாளன இசை, பாட்டு எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
கேசட்டுகள் புழக்கத்தில் இருந்த நேரம்.
கொடுவா மீசை,
சோக்கே சோக்கே பாடல் ,ஆசை ஆசை , சிங்கம் போல நடந்து வராண்டி பாட்டுடன் கூடிய சண்டை காட்சி, என அனைத்து பாடல்களும் ஹிட்.
ஜோ,ரீமாசென் இரண்டு கதாநாயகிகள், விவேக் காமெடி, பசுபதி , சொர்ணக்கா மிரட்டல் வில்லத்தனம், ஷகிலா வின் கெஸ்ட் அப்பியிரன்ஸ்
தரணி யின் சின்ன,சின்ன டிவிஸ்டிங்க் திரைக்கதை, என பக்கா மசாலா திரைப்படம். அதனால் தான் என்னவோ நான்கு நாட்களுக்கு
பின்பு பொங்கல் க்கு வெளி வந்த அன்பேசிவம், வசீகரா என்ற இரண்டு நல்ல படங்களும்
#தூள் என்னும் சுனாமியால் அடித்து வெளியேறப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் #சீயான் தமிழ்சினிமாவின் வசூல் தாதா, இந்த படத்தின் நூறு நாட்கள் வெற்றி க்கு பிறகு #சாமி என்னும் படம் வெளியாக தயாராக இருந்தது #சீயான் #விக்ரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக