அன்னபூரணி மெஸ் சைவம்
ஹோட்டலின் முகப்பில் வைத்துள்ள அன்னபூரணி படமே நம்மை சாப்பிட அழைப்பது போல உள்ளது.
சாப்பாடு க்கு டோக்கன் சிஸ்டம் போல கல்லா பெட்டியில் அன்னபூரணி போலவே அக்கா ஒருவர் அமர்ந்திருந்தார்கள்.
சாப்பாடு டோக்கன் என்றவுடன், வாழைப்பூ வடை வேணுமா என கேட்க ? வடை என்றாலே வரிந்து கட்டி உண்ணும் நம்மிடம்
வாழைப்பூ வடை என்றால் கேட்க வா வேண்டும் உம் கொட்ட,
பாயாசம் வேணுமா என கேட்க ? பொதுவாக தயிர் தானே extra காசு கேடப்பார்கள் சரி காலம் மாறிடுச்சு போல ,என்ன பாயாசம் என பதிலுக்கு நான் கேட்க ? பால் பாயசாம் என்றவுடன் , ரோஜா படத்தில் ரகுமான் இசையை இப்போதுள்ள headphone இல் கேட்டு பரவசம் அடைவது போல பால் பாயாசம் என்ற வார்த்தை ஒலித்தது.
டோக்கனை பணியாளரிடத்தில் கொடுத்தேன், இலை யில் ஒவ்வொரு ஐயிட்டமாக பரிமாறப்பட்டது,
அந்த வாழைப்பூ வடை என்றேன் ? சாரி சார் என்றார் , திக் கென்று வடை போச்சா என்றது மனது..
வடை ரெடி யாகி கொண்டே இருக்கிறது கொஞ்சம் பொறுங்க சார் என்றார்.
சரி எதுக்கு வம்பு சாம்பார் க்கு உருளைக்கிழங்கு பொறியல் போதுமே sachin & schewag போன்ற நல்ல கூட்டணி ,
சார் வத்த குழம்பு என்றார் சர்வர் அந்த "வாழைப்பூ வடை "
என்றேன் , இரண்டே நிமிடம் சுட , சுட கொண்டு வந்துவிடுகிறேன் என்றார்.
வத்த குழம்பு , அப்பளம் காம்போ நன்றாகவே இருந்தது, திருவிளையாடல் படத்தில் நாகேஷ்
புலம்பவது உனக்கு பொற்காசுகள் கிடையாது , கிடையாது என்று கூறுவது போல வடை கிடையாது , கிடையாது என்றது மனது.
இதோ வந்துட்டேன் என்று மதன் பாப் கூறுவது போல சர்வர் சூடான வடையுடன் வந்து நின்றார்.
செக்க சிவந்து மொறு, மொறு வென்று, லேட்டாக வந்தாலும் டேஸ்டாக வந்தது.
இரசத்துடன் வடை சேர்த்து சாப்பிடுகையில் இரசத்தின் புளிப்பு, வாழைப்பூ வடை காம்போ தோனி-கோலி combo போல பட்டையை கிழப்பியது..
பரவாயில்லை லேட்டாக வந்ததும் நல்லது தான் போல என்று நம்மை நாமே சாமாதானாப்படுத்தி கொள்ள வேண்டும்.
வாழைப்பூ வடை என்றவுடன் இது போல ஒரு ஹோட்டலில் மம்மூட்டி சாப்பிடுகையில் இந்த சுவை ஸ்ரீவித்யா கை பக்குவம் ஆயிற்றே என்று சமையல் அறைக்கே சென்று கண்டுபிடித்துவிடுவார் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் " திரை படத்தில். சமையல் மற்றும் கை பக்குவத்திற்கு என்றுமே தனி சக்தி.
எல்லாம் சுபாமாக முடிந்தது பால்பாயாசம் மட்டும் சுமாரகவே இருந்தது எதன் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்குமோ அதன் தரம் சிறுது குறைந்தாலும் சற்று ஏமாற்றம் அடையலாம்.
எதிரிபார்ப்பை குறைத்தால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.
தாம்பரம் பேருந்து நிலையம் பின்புறம் ஒரு நல்ல உணவகம்
அண்ணபுரணி மெஸ்
sriram stamp paper கடை அருகில் உள்ளது.
இவண்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக