செம ஜாலியா , ஜில்லுனு ஒரு காதல் கதையோடு வந்திருக்கிற படம் தான்
"ஓ மணப்பெண்ணே "
OTT வெளியீடு Hot Star
நான் பொண்ணு,
நான் பையன்,
நாயகன், நாயகி இருவரும் சந்திக்கும் முதல் காட்சி அழகிய ஹைக்கூ.
கதாநாயகன் ஹரீஷ் கல்யாண் 2K kid நடிக்கல , வாழ்ந்திருக்கார். நடிப்பு மிக யதார்த்தம் , அவர் கூடவே வரும் நண்பன் பல இடங்களில் சிரிப்பை வர வைக்கிறார்.
Engineering முடிச்சு அரியர்ஸ் எடுத்து வேலைக்கு முயற்சி செய்யும் நாயகன்.
மகன் வேலையை நம்பி தான் குடும்பம் இல்லை ஆனாலும் மகனை வறுத்தெடுக்கும் Elite அப்பா வாக வேணு அரவிந்த், நடிப்பும் செம.
MBA கோல்டு மேடலிஸ்ட் வெளிநாடு செல்ல துடிக்கும் கதாநாயகி பிரியா பவானி சங்கர். இல்லை, இல்லை கல்யாணத்தை முடித்து தன் கடமையை நிறைவேற்ற துடிக்கும் நாயகியின் அப்பா.
இந்த இருவருக்குமான காதல் கை கூடியதா ??
காதல், Breakup, youtube channel, own business என பெரும்பாலான 2K kid's வாழ்க்கை, கனவுகளை திரையில் அழகான திரைக்கதை யால் கோர்த்து ஜாலியாக ஒரு படம்.
நாயகனுக்கும் , நாயகிக்கும் காதல் காட்சிகள் இல்லாமல் காதல் வருவது தான் திரைக்கதையின் வெற்றி
அதற்கு இயக்குனர் கார்த்திக் சுந்தர் க்கு ஒரு சபாஷ்.
2K kid இருந்திருக்க மாட்டோமா என 90's kid சற்று பொறாமை பட வைத்துள்ளது இந்த படம். பாடல்கள் கேட்கும் ரகம் !!!
இவண்
ராஜா.க
#ohmanapenne #reviews #movie #tamilmovie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக