திருநெல்வேலி பாம்பே தியேட்டர்
நண்பர்கள் சகிதம் சிரித்து, சிரித்து பார்த்து படம் சிம்பு கதாநாயகனாக நடித்த முதல் படம்
காதல் அழிவதில்லை !!!
சிம்பு வின் இன்ட்ரோ ,அவர் பெயரை உச்சரிக்கும் படி BGM, பாடல்கள், fight scene , என தன் பங்குக்கு மசாலா கலந்திருப்பார் டி.ஆர். படத்துக்கு நல்ல ஓப்பனிங் மேலும் வணிக ரீதியாக வசூல் வெற்றி பெற்ற படம்.
அப்படத்துடன் விஜயின் பகவதி, அஜீத் வில்லன் வெளிவந்து இருந்தது இவை அனைத்தும் தீபாவளி ரிலீஸ்.
பகவதி பூர்ணகலா தியேட்டரில் , வில்லன் ரத்னா தியேட்டர் இரண்டுமே கொஞ்சம் பழைய தியேட்டர்கள். இரண்டு படங்களும் பார்த்தாச்சு. சரி இது வரை பார்க்காத தியேட்டரில் சென்று பார்க்கலாம் என்று ஐடியா கொடுத்தேன்.
Latest sound effects DTS சும்மா அதிரும் சிறந்த தியேட்டர் பாரமாரிப்பு, கேண்டின் icecream என எல்லாம் சூப்பர், படம் தான் மொக்க but நண்பர்கள் படை சூழ போனதால் ஒவ்வொரு சீனும் கலாய்த்து ரசித்து பார்த்த படம். #காதல்அழிவதில்லை #
#Bombay #Theatre
#Tirunelveli
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக