வாங்க சாப்பிடலாம்
இம்முறை சென்றது “ஆந்திரா மெஸ்” இந்த பெயரை கேட்டாலே சாப்பாடு பிரியர்களின் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரியும். குறிப்பாக Bachelorகளின் ஆபத்பாந்தவன். நாம் போதும் போதும் என்று கூறும் அளவுக்கு சாதம் பரிமாறுவது இதன் ஸ்பெஷல்.
சென்னையில் பல இடங்களில் இதன் பெயர் பலகையை பார்த்திருப்போம் இந்த மெஸ் இருப்பது சென்னை Parries (பாரிமுனை,ப்ராட்வே).
இங்கு என்ன ஸ்பெஷல் என்று பார்ப்போம்.
சைவ ஹோட்டல்கள் பல இருந்தும் சங்கீதா,சரவணபவன்கள்,வஸந்த பவன் கள் தனித்து தெரிவது போல் பல ஆந்திரா மெஸ் இருந்தும் இதுவும் தனித்து தெரிகிறது( “Pure & Perfect authentic Andhra mess “ )அதன் சுவையே அதனை உணர்த்துகிறது.
சாப்பாடு டோக்கனை வாங்கி கொண்டால் நாம் எங்கு உட்கார வேண்டும் என்பதை ஒருவர் கூறுகிறார் சிறிது நேரம் காத்திருப்புக்கு பிறகு ஒரு அறை முழுவதும் அனைவரும் உட்காரவைக்க படுகிறார்கள்.
முதலில் வாழை இலை வைக்கபடுகிறது முறையே ஒரு பொறியல்,கூட்டு,கோங்ரா சட்னி,சாதம்,பருப்பு பொடி,நெய் என வரிசையான அணிவகுப்புகள்.
சாதத்தையும்,சட்னியையும்
சேர்த்து கொள்ளுங்கள் என உத்தரவு பிறப்பிக்கபடுகிறது அட சாப்பிட சொல்லிகொடுப்பாங்க போலயே என்கிறது “மைண்ட்வாய்ஸ்”. சாதத்துடன்,பொடி,நெய்யுடன் அந்த கோங்ரா சட்னி சேர்கையில் இதன் கூட்டணி முதல் சுற்றில் அசாத்திய வெற்றி பெறுகிறது.
பின் நெய்யின் கூட்டோடு சாம்பாருடன் பொறியல் சேர்த்து இரண்டாவது சுற்றும்,பின் கார கொழம்பு,மோர் குழம்பு என நான்காம் சுற்றை முடித்தால் கிரிக்கெட்டில் நான்கு ரன்கள் எடுத்த திருப்தியுடன் வரலாம். இல்லை,இல்லை எனக்கு சிக்ஸர் அடிக்கும் திறமை உண்டு என்றால் இரசம்,மற்றும் தயிருடன் களத்தில் நின்று ஆடி விட்டு வரலாம்.
இங்குள்ள உள்ள பிரச்சனை என்னவென்றால் பரிமாறுபவர்களின் சிறுது சத்தம் அதிகமாக இருக்கும் மேலும் மதிய நேரம் 1.30 to 3.00 மணி கூட்டம் அதிகம் வருமென்பதால் கொஞ்சம் வேகமாக சாப்பிட வேண்டும்.
சாப்பாடு பிரியர்களின் பேட்டை
இந்த ஆந்திர கோட்டை
சுவையுடன்
ராஜா.க
#Andhramess #Meals #Andhrameals



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக