எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.
முதல்வன் திரைப்படத்தில் வரும்
" குருக்கு சிறுத்தவளே " பாடல். இன்று வரை அடிக்கடி முனுமுனுக்கும் பாடலும் கூட.
பஞ்ச பூதங்களில் (நீர்,நிலம்,காற்று, நெருப்பு, ஆகாயம்) நடப்பது போல் இப்பாடல் படமாக்க பட்டிருக்கும்.
கேமரா மேன் மற்றும் இயக்குனர் ஷங்கர் ரொம்பவே மெனக்கிட்டுருப்பார்கள்.
மனசு கொஞ்சம் கனமாக இருக்கையில் இந்த பாடலை
கேட்கையில் ரொம்ப லேசாகி விடும். அப்படி ஒரு அருமையான மெலடி பாடல்.
இப்பாடல் புல்லாங்குழலின் மெல்லிய இசையுடன் தொடங்கும்.
இப்பாடல் உருவாக காரணமானவர்கள் தாய், தந்தை(இசை, வரிகள்)யாக ரஹமான்,வைரமுத்துவும்.
பாடல் வரிகள் கிராமத்து பெண்ணை மனதில் வைத்து எழுதியிருப்பார் வைரமுத்து.
(பெண்: கம்பசங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நுழைஞ்சு உறுத்திரியே,
ஆண்: மஞ்சள் தேச்சு குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே,
உம்போல சிவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல )
ரகுமான் இசை அப்படியே நம்மை மெய்மறக்க செய்யும் குறிப்பாக புல்லாங்குழல் தனித்துவமாக தெரியும். இசை வாத்தியங்கள் நம்மை தாலாட்டு modeக்கு கொண்டு செல்லும்.
இப்பாடலுக்கு தன் குரலால் உயிர் கொடுத்திருப்பார்
பாடகர் ஹரிஹரன். (குறிப்பாக குங்குமத்தில் கரைச்சவளே என்பதில் ஒரு அழத்தம் கொடுப்பார் ) மனுஷன் ரசிச்சு பாடியிருப்பார். இன்று வரை முதல் முறை கேட்பது போல ஒரு உணர்வுக்கு அக்குரல் முக்கிய காரணம்..
இப்பாடல் ஒரு குழந்தையை போன்றது எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம்.
இவன்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக