ஞாயிறு, 29 ஜூலை, 2018

சாப்பிட போலாம் வாங்க

சாப்பிட போலாம் வாங்க

இந்த ஹோட்டலை பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது. இந்த ஹோட்டலை பற்றி FB இல் வீடியோவெல்லாம் வந்துள்ளது. சரி,ஒரு நாள் சென்று விடுவோம் என நினைத்திருந்தேன்.

அதற்கு ஏற்றாற் போல் காலம் அமைந்தது. சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் இரவு நேரங்களில் சாப்பாடு (meals) கிடைப்பது அரிது.இங்கு மதியம்,இரவு இரண்டு நேரங்களிலும் சாப்பாடு தான். எனக்கு இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிட மிகவும் பிடிக்கும்.

Google map உதவியுடன் அந்த இடத்திற்கும் சென்றாயிற்று
நன்றாக பசித்தது. ஹோட்டலினுள் நுழைந்தேன். சார் 7.30 PM மணிக்கு தான் ஆரம்பமாகும் 10 நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள் சூடான சாப்பாடு ரெடியாகிவிடும் என்றார் கனிவாக. உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்று மனதிற்குள் கூறிகொண்டேன்.

ஹோட்டலினுள் சிறு பூஜையெல்லாம் நடந்திருந்தது,சாம்பிராணி மணம் கமழ சரியான நேரத்தில் உள்ளே நுழைந்தோம். Limited meals 70₹ நெய் வேண்டும் என்றால் மேலும் 5₹ என்று அறிவிப்பு பலகை கூறியது. நெய் இல்லாமல் தான் நம்மால் சாப்பிட முடியாதே என்று இரண்டு டோக்கன்களை பெற்று கொண்டேன்.

வரிசையாக table இருந்தது ஒரு வரிசையில் தான் உட்கார வேண்டுமாம் (எங்கள் ஊர் பஜனை மடம் ஞாபகம்  தான் வந்தது). அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்லீப்பர் செல்கள்  போல் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை,இரண்டு வரிசை நிரம்பி ஆயிற்று.

சாதம்,ஒரு பொறியல்,ஒரு கூட்டு,
பருப்பு பொடி,நெய் அதை வைத்து முதல் ரவுண்டு, பிறகு சாம்பார் முறையே 
ரசம்,மோர் என்று மூன்று ரவுண்டு அப்பளம், ஊறுகாய் சகிதம் ஒரு full கட்டு. மனதும்,வயிறும் முழு திருப்தி.
சாப்பாடு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு  அட்சய பாத்திரம்.

உபரி தகவல் எப்போதும் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு இந்த சாப்பாடு வித்யாசமாகவும்,நன்றாகவும் இருக்கும்.என்றைக்காவது ஹோட்டலில் சாப்பிடனும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து கொள்ளவும்
(வீட்டு சாப்பாடு போல் உள்ளதால்

நன்றி மீண்டும் வருக 🙏🏻🙏🏻🙏🏻 என்றது 
காசி விநாயகா மெஸ்
திருவல்லிக்கேணி 

சுவையுடன்

ராஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக