அறிமுக காட்சி முதல் இறுதி காட்சி வரை நான் இயக்குனரின் நடிகன் என்று நிருபணம் செய்த “super star” சினிமாவில் தன் வெறுப்பாளர்களை
“க்ளீன் போல்ட்” செய்திருக்கிறார்.
கரிகாலனின் அடுத்த தலைமுறைக்கான பார்வையை அகிம்சை,வன்முறை,சுயநலம் என்று மகன்கள் கதாபாத்திரத்தால் இன்றைய சமூகத்தின் இயக்குனர் பார்வை “நச்”.
மனைவி,முன்னாள் காதலி கதாபாத்திரத்தின் வலிமையை நகைச்சுவையாக,கவிதையாக,நேர்த்தியாக காட்சிபடுத்திய விதம் அழகிய “ஹைகூ”.
கதையில் வில்லனின் பலத்தை பொறுத்து நாயகனின் பலம் புலப்படும். அந்த வகையில் தன் நடிப்பால்,வசனங்களால் ஒரு காட்சியில் நாயகனை தன் நடிப்பால் அடித்து தன் அசுரபலத்தை (இராவணன்) நிருப்பிக்கிறார் நானா படேகர்.
கதையுடன் கூடிய பாடல்கள்,பிண்ணனி இசை படத்திற்கு பலம்.
விஷமிகளின் விமர்சனங்களை துறந்து,
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,
பற்றற்று பார்க்கையில்
“காலா என்கிற கருப்பு” மேலும் அழகாகிறது.
ரசிகன்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக