வியாழன், 13 மார்ச், 2025

காரடையான நோன்பு & ஹோளி

 காரடையான நோன்பு & ஹோளி

– ஒரே தேதியில் இரண்டு பண்டிகைகள்!

சத்யவான் - சாவித்ரி கேள்விப் பட்டிருப்போம். தனது கணவனின் உயிரை எமதர்ம ராஜனிடம் இருந்து வாதிட்டு மீட்டுக் கொண்ட சாவித்ரி – அந்த தினத்தின் நினைவாகவே ஒவ்வொரு பங்குனி மாதமும் பெண்கள் "காரடையான நோன்பு" கடைப்பிடித்து மஞ்சள் சரடு (கயிறு) கட்டிக்கொள்கிறார்கள்.

இதிலிருந்து மணிரத்னம் அவர்கள் எப்படி ஒரு சினிமா மாஸ்டர் பீஸ் உருவாக்கினார் தெரியுமா? ரோஜா (1992) – இந்த படத்தில், மதுபாலா தனது கணவர் அரவிந்த் சாமி

உயிரை மீட்கும் போராட்டம், சரியாக சாவித்ரியின் கதையுடன் ஒத்துப்போகும். audience-க்கு direct reference இல்லாமே ஒரு feel கொடுத்தார்.

ஆண்மிக பதிவில் ‘சினிமா போஸ்டர்’ தேவையா?’

சிலர் இப்படிச் சொல்லலாம். ஆனா, "எல்லாவற்றிலும் மசாலா வேண்டும்" என்பதே நம்ம பொது மனநிலை! அதனால்தான் வழக்கமான கதையையும், மண்ணின் நம்பிக்கையையும், சினிமா அழகாக உயிர்ப்பிக்கிறது.

இன்றைய தினம் இந்தியாவின் தெற்கில் காரடையான நோன்பு கொண்டாடப்படும்போது,

வட இந்தியாவில் ‘ஹோளி’ உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நேர்மையும், நல்லதே வெல்லும் என்பதற்கான அடையாளமாக பொய்யின் மீது உண்மை வென்றதை குறிக்கும் பண்டிகை.

வண்ணங்களை தூவி கொண்டாடும் ஹோளி – உறவுகளோடு நேரம் செலவிடும் காரடையான நோன்பு… இரண்டும் ஒன்றையே உணர்த்தும். நல்லதே வெல்லும்!

#KaaradayaanNombu #Holi2025 #TamilCulture #FestivalVibes #SavithriSatyavan #ColorsOfIndia #TamilFestivals

திங்கள், 10 மார்ச், 2025

குபேரன் மீட்டெடுத்த செல்வத்தின் நாள் – வளர்பிறை துவாதசி!

 குபேரன் மீ

ட்டெடுத்த செல்வத்தின் நாள் – வளர்பிறை துவாதசி!

மாசி மாதம் வளர்பிறை துவாதசி நாளில், குபேரன் பெருமாளை போற்றி தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதாக தல வரலாற்றில் கூறப்படுகின்றது.

இந்த ஆண்டில் அந்த புனித நாள் மார்ச் 10, 2025 அன்று வருகிறது.

செல்வம் பெருக & கடன் தொல்லை நீங்க

இந்நாளில், திருக்கோளூர் ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயிலில் வழிபடுவது சிறப்பு.

இது நவ திருப்தி ஸ்தலங்களில் எட்டாவது திருத்தலமாகும்.

குபேரனுக்கே கடன் தொல்லையை நீக்கி காட்சியளித்த தலம் என்பதால், இங்கு சென்று செல்வ வளம் வேண்டியும், இழந்ததை மீட்டெடுப்பதற்கும் வழிபடலாம்.

சிறப்பாக, இது செவ்வாய் குரிய தலம் என்பதால் செவ்வாய் கிழமை வருகை புரிந்து வழிபட்டால் கடன் தொல்லைகள் குறையும் என நம்பப்படுகிறது.

திருக்கோயில் அமைவிடம்

திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில், ஆழ்வார் திருநகரியிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

செல்வம் வேண்டுவோர், கடன் தொல்லை தீர விரும்புவோர் இந்த நாளில் பெருமாளை வழிபட்டு அருளைப் பெறுங்கள்!

#VaithamanidhiPerumal #Thirukkolur #Kuberan #DebtRelief #Wealth #VaarapiraiDwadashi #Navathirupathi #Perumal #Spirituality #TempleTour

புதன், 26 பிப்ரவரி, 2025

செங்கண்மாலீஸ்வரர் சிவன் கோவில் – விஷ்ணுவும் சிவனும் இணைந்த புனிதத் தலம்!

 செங்கண்மாலீஸ்வரர் சிவன் கோவில் – சிவன் அருள்  

புனிதத் தலம்

மஹா சிவராத்திரி என்பது பக்தியும், தியானமும், இறை உணர்வும் ஒன்றாக இணையும்விதமாக கொண்டாடப்படும் புனிதமான நாள். இந்த சிறப்புநாளில், சிவன் அருள் நிறைந்த ஒரு தரிசனம் வழங்கும் செங்கண்மாலீஸ்வரர் சிவன் கோவில் பற்றிய வரலாற்றை அறிவோம்.

📍 கோவில் அமைவிடம்

செங்கண்மாலீஸ்வரர் சிவன் கோவில், தமிழ்நாட்டின் செங்கண்மால் கிராமத்தில் அமைந்துள்ளது. சென்னை மகாபலிபுரம் சாலையில் (OMR) திருப்போரூர் அருகே சுமார் 2 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது.

🔱 கோவில் சிறப்பு – சிவன் & விஷ்ணுவின் பிணைப்பு

இக்கோவில் மூலவர் செங்கண்மாலீஸ்வரர், மற்றும் அம்மன் பெரியநாயகி (பிருஹன்னாயகி) அம்மன்.

"செங்கண்மால்" என்பது விஷ்ணுவின் பெயர். புராணக் கதைகளின்படி, மகாவிஷ்ணு இங்கு 1008 தாமரை மலர்களால் சிவனை வழிபட்டார். இறுதித் தாமரை மலர் காணாமல் போனபோது, தனது ஒரு கண் தாமரை மலராக அர்ப்பணித்து வழிபாட்டை முடித்தார். அதனால், சிவன் "செங்கண்மாலீஸ்வரர்" என்ற பெயரை பெற்றார். இதுவே இக்கோவிலின் தனிப்பட்ட சிறப்பாகும்.

கோவில் கட்டிடக்கலை & அமைப்பு

கிழக்கு நோக்கிய கோவில் வாயிலில், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் சிற்பங்கள் உள்ளன. கோவில் அமைப்பில் பாலிபீடம், த்வஜஸ்தம்பம், நந்தி மண்டபம் உள்ளன. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம் ஆகியவை தரிசனத்திற்காக கட்டமைக்கப்பட்டுள்ளன.

🙏 இறைவன் அருள் பெற...

மஹா சிவராத்திரியில், இந்த புனிதத் தலத்தில் சிவனின் திருவிளையாடல்களை எண்ணி வழிபட்டால், அருளும், ஞானமும், நன்மையும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

"ஓம் நமசிவாய!" 🔥🙏

கோவில் நேரங்கள்

காலை: 7:00 AM – 12:00 PM

மாலை: 4:30 PM – 8:30 PM

#மகாசிவராத்திரி #சிவன் #செங்கண்மாலீஸ்வரர் #Shiva #Mahashivratr

i #SivanArul

#Haraharamahadev

திங்கள், 24 பிப்ரவரி, 2025

Dragon Movie Review

 96% Mark, 48 Arrear, 100% Mass – #Dragon Fire! 🔥🐉

D. Ragavan +2வில் 96% எடுத்தவர்… 

ஆனால் crush சொன்னாள் – "நல்ல பையன் வேண்டாம்!" 😐

நம்ம ராகவன் D. (அவளை) தூக்கி, "D-Ragon" ஆகி 48 arrear-ோட college விட்டே வெளியேறினார்! 🎓➡🔥

படம் முழுக்க பிரதீப் single-handed-ஆ தாங்கி இருக்கிறார்! மொத்தமா comedy, love, sentiment, mass vera level! 😂❤️🔥

Climax twist நம்ம fool ஆக்கிடுச்சு! 😲

"எண்டி விட்டு போன" பாடல் ❤️‍🔥 – Feel, Lyrics, STR Voice 💯

George Marian அப்பா role – climax-ல ஒரு haiku… theatre silent! 😍👏

"Don" compare பண்ணினாங்க… Dragon totally different! எங்கோ மேல! 🚀

🔴 Final Verdict: 2025-ன் first mass BLOCKBUSTER! 🏆🔥

இதை theatre-ல பாருங்க, இல்லனா later "அடங்க.." சொல்லுவீங்க! 😆

#DragonReview #PradeepRanga

nathan #Blockbuster

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

தமிழ் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இன்று

 தமிழ் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்

இன்று (பிப்ரவரி 19) தமிழர் கலாச்சாரம், இலக்கியம், பாரம்பரியத்தை பாதுகாத்த மகான் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த நாள். தமிழ் மொழிக்கு மறுவாழ்வு அளித்த மிகப்பெரிய பண்டிதர் என்பதால், இவரை "தமிழ்த் தாத்தா" என்று அழைக்கிறோம்.

தமிழறிஞனாக உருவான பயணம்

1845ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த உ.வே.சா, சிறுவயதிலேயே தமிழ் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டார். அந்த ஆர்வம் அவரை பல்வேறு பழைய நூல்களை சேகரிக்க, பதிப்பிக்க வைக்கும் பக்கம் அழைத்துச் சென்றது. அந்த காலத்தில் தமிழ் இலக்கியம் பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்தது. இதை உணர்ந்த அவர், தமிழின் தொன்மை மங்காமல் இருக்க பாடுபட்டார்.

தமிழ் காப்பியங்களை மீட்டெடுத்த சாதனை

சுவாமிநாத ஐயர் 

தம் வாழ்நாளையே "சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பெரியபுராணம்" உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை மீட்டெடுக்கவே அர்ப்பணித்தார். கல்லில் செதுக்கியிருந்த கல்வெட்டுகள், பழமையான ஓலைச்சுவடிகள், நாசமாகும் தருவாயில் இருந்த நூல்கள்—இவை அனைத்தையும் தேடி, தொகுத்து, பதிப்பித்து அனைவரும் படிக்க வழிவகுத்தார்.

தமிழுக்கு தந்த ஒளி

உ.வே.சாமிநாத ஐயரின் அரும்பணி இல்லையென்றால், இன்று நாம் தமிழ் இலக்கிய மரபுகளை இவ்வளவு விரிவாக அறிந்து கொள்ள முடியாது. அவர் ஒரு பேராசிரியராக மட்டுமின்றி, தமிழ் மொழியின் உயிரோட்டமாக விளங்கியவர்.

புகழார்ந்த மரபு

தமிழுக்கு அளித்த அற்பணிப்பிற்கு அவருக்கு "தமிழ்த் தாத்தா" என்ற பெருமைமிக்க பட்டம் வழங்கப்பட்டது. தன் வாழ்க்கையை முழுவதுமாக தமிழ் வளர்ச்சிக்கு அர்ப்பணித்த இந்த மாமனிதரை நாம் என்றும் நினைவுகூர வேண்டும்.

இன்றைய தினம், அவரது பிறந்த நாளில், அவரது தொண்டுக்கு மரியாதை செலுத்துவோம்!

"தமிழுக்கு அவர் ஏற்ற ஒளி, காலம் கடந்தும் அழியாத மெருகு!"

தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த தினம் இன்று. 🙏🏻 

#தமிழ்த்தாத்தா #UVeSwaminathaIyer #தமிழ்மரபு

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

காதலிக்க நேரமில்லை – review

 காதலிக்க நேரமில்லை –

காதல் இருக்குது , 

காஸ்டு(caste) இருக்குது , 

ஆனா Logic இல்ல!

🎬 Story Summary:

நித்யா மேனன் – ஒரு independent architect, வாழ்க்கையை தனியா முன்னோக்கி நடத்துற modern woman.

அவளோட fiancé அவளை ditch பண்ணுறான் – அது எப்படி தெரியுமா?

அவனும், நித்யா மேனனின் best friend-உம் ஒன்றாக bed share பண்ணுறாங்க!

இதெல்லாம் English படத்துல பார்த்தது, இப்போ Tamil-லயும் trend- போல?

நித்யா – "Mayakkam Enna" Dhanush மாதிரி shock-ஆயிடுறாங்க!

"Men are trash" moment வருது!

ஆண்கள் காதல் தோல்வி அடைந்தால் என்ன செய்வர்களோ, அதெல்லாம் செய்கிறார்!

(குடி, சிகரெட், self-realization package!)

Love, Marriage – இதை விட Life-ல Strong Decisions-ஏ எடுக்கலாம்!

அதனாலே Sperm donor மூலமாக குழந்தை பெற திட்டம்!

இந்த பக்கம் Ravi & Co:

Ravi, Vinay, யோகி பாபு – Best Friends!

Ravi – "No Marriage, No Kids" பாஸிடிவ் பாலிசி!

Vinay – Gay Representation (Good, but no depth!)

யோகி பாபு – கவுடா, அதனாலே Family man tag! (Director-க்கே தெரியாது, இது எதுக்கு? 🤷‍♂️)

💉 Sperm Donation Drama:

Vinay – Gay ஆனாலும் குழந்தை வேண்டுமாம், So Sperm Donate பண்ணறார்!

Ravi & யோகி பாபு கூட Donate பண்ணறாங்க!

Ravi-யோட GF-க்கு இது digest ஆகல! So, Breakup!

🤝 Meet Cute – But with Logic Issues!

நித்யா – "எனக்கு donor யாருன்னு தெரிஞ்சுக்கணும்"னு Hospital-க்கு போறாங்க!

அங்கே Ravi-யை meet பண்ணறாங்க!

ஒரே நாளில் bond ஆகி, Ravi வீட்டுக்கு invite பண்ணறாங்க!

Dinner முடிச்சுட்டு, சென்னைக்கு போயிடறாங்க! (Logic? Leave the chat!)

Fast Forward – 8 Years Later

நித்யா – ஒரு பையனை single-ஆ வளர்த்து, தனியா lead பண்ணுறாங்க.

Hero Ravi enters – பையனோட bond ஆகுறார்.

Biggest Twist? Sperm donor-வே ரவிதான்!

மொத்தத்தில், 

காதல்-அவ்டு , காஸ்டு-அவ்டு, ஆனா Logic-ஓட Problem!

🤡 Bhramin Appreciation Segment:

"Just cinema bro!"-னு Cool-ஆ enjoy பண்ண தெரிஞ்சவங்க – Bhramin audience-தான்!

மற்ற சமுகம் representation-ல problem! So, Safe play பண்ணிருக்காங்க இயக்குனர்!

❤️ Ravi + Nithya Menon Son - Best Pair in the Film!

அப்பா - பையன் செண்டிமெண்ட் super!

Love story-ய விட, இந்த father-son bonding தான் படத்துக்கு real strength!

இந்த emotional moments-ஏ படம் carry பண்ணும்!

இந்த chemistry-க்கு extra star!

🎵 AR Rahman Music – Feel but No Fire!

BGM – Super!

One song okay – மறக்கலாம்!

🔥 Special Mention – Nithya Menon Beauty!

"Kaadhalikka Nithya Menon illaina eppadi?"

Screen-ஐ அழகு பண்ணிடுறாங்க, இது பெரிய plus!

📢 Final Verdict:

✅ Caste privilege-ஏ impact பண்ணாதவங்க – இந்த movie-ய pure-ஆ enjoy பண்ணலாம்!

✅ Director logic-ஐ improve பண்ணலாம் – Representation with sense venum!

✅ Ravi + Nithya Menon Son – Best part of the film!

⭐ Rating: 3.5/5 – "Elite Love Story, Non-elite Logic!

#KaadhalikkaNeramIllai #NithyaMenen #Ravi #Vinay #ARRahman #TamilCinema #Kollywood #MovieReview #Cinema #TamilMovies #Trending

#FilmTwitter #TamilTwitter #Movies #MovieBuff #FilmReview #CinemaLover

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

மசால் தோசையும், Arranged Marriage ம்

 சிறு கதை

மசால் தோசையும், Arranged Marriage ம்

காதலர் தினம் அன்று தனது மனைவி ஜானகி உடன் Mount Road-இல் உள்ள தேவி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தான் அருண். நீண்ட நேரம் நடந்ததாலும், பசிக்கத் தொடங்கியதாலும், அருகில் இருந்த ஒரு அடுமனை (பேக்கரி)க்குள் நுழைந்தார்கள்.

இன்முகத்துடன் வரவேற்ற waiter மெனு கார்டை கொடுத்தான். அருண் அதை பிரித்து பார்த்தவுடன், வடிவேலு ஒரு படத்தில் சொல்வதை போல, Veg Roll, Spring Roll, Puff Roll – என புதிது புதிதாக உணவு வகைகள் கண்டுபிடித்து நாட்டை முன்னேற்றிட்டாங்க போலவே என தோன்றியது.

சிறு வயது முதல் இன்று வரை Veg Roll மீது பிரியம் கொண்டவன் அவன். அதை பில்டர் காபியுடன் ஆர்டர் செய்ய நினைத்த போது, ஜானகி waiter-இடம் ஆங்கிலத்தில் உரையாடி, Blueberry Cheesecake மற்றும் Hot Chocolate ஆர்டர் செய்தாள்.

"உங்களுக்கு Blueberry Cheesecake பிடிக்காதா?" என அவள் கேட்டாள்.

"இப்படில்லாம் Cheesecake இருப்பதே இப்போ தான் எனக்கு தெரியும்!" என அருன் சொன்னான்.

"எப்ப பாரு கிண்டல், நக்கல்!" என ஜானகி கிண்டலாக சொன்னாள்.

சாப்பிட்டு முடித்த பின் பில் வந்தது. எடுத்து பார்த்த அருனுக்கு சிறிய அதிர்ச்சி – Cheesecake ₹199!

"ஏய்! ஒரு Cheesecake ₹199 ஆ!!! என்ன ஸ்டேட் govt, என்ன central govt?" என மனசுக்குள் பேசிக்கொண்டான்.

இந்த ரூபாய்க்கு ஒரு A2B hotel-ல் மசால் தோசையும், பில்டர் காபியும் குடிச்சிருக்கலாம் என நினைத்து, அவன் அவ்வாறே வெளியே சொல்ல,

"இப்போ தெரியுது உங்களுக்கு ஏன் 'arranged marriage' ஆச்சு னு!" என ஜானகி கேளிக்கையாக கூறினாள்.

சட்டென கவுண்டர் மகான் போல் கவுண்ட்டர் கொடுக்க முடியாமல்,

"சொல்லால் அடித்த சுந்தரி!" என விஜயகாந்த் ஸ்டைலில் இளையராஜா பாடலை மனதில் பாடிக்கொண்டு, பில்லை கட்டி நடக்க ஆரம்பித்தான் அருண்.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!

#ValentinesDay    

#மசால்தோசை