குபேரன் மீ
ட்டெடுத்த செல்வத்தின் நாள் – வளர்பிறை துவாதசி!
மாசி மாதம் வளர்பிறை துவாதசி நாளில், குபேரன் பெருமாளை போற்றி தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதாக தல வரலாற்றில் கூறப்படுகின்றது.
இந்த ஆண்டில் அந்த புனித நாள் மார்ச் 10, 2025 அன்று வருகிறது.
செல்வம் பெருக & கடன் தொல்லை நீங்க
இந்நாளில், திருக்கோளூர் ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயிலில் வழிபடுவது சிறப்பு.
இது நவ திருப்தி ஸ்தலங்களில் எட்டாவது திருத்தலமாகும்.
குபேரனுக்கே கடன் தொல்லையை நீக்கி காட்சியளித்த தலம் என்பதால், இங்கு சென்று செல்வ வளம் வேண்டியும், இழந்ததை மீட்டெடுப்பதற்கும் வழிபடலாம்.
சிறப்பாக, இது செவ்வாய் குரிய தலம் என்பதால் செவ்வாய் கிழமை வருகை புரிந்து வழிபட்டால் கடன் தொல்லைகள் குறையும் என நம்பப்படுகிறது.
திருக்கோயில் அமைவிடம்
திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில், ஆழ்வார் திருநகரியிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது.
செல்வம் வேண்டுவோர், கடன் தொல்லை தீர விரும்புவோர் இந்த நாளில் பெருமாளை வழிபட்டு அருளைப் பெறுங்கள்!
#VaithamanidhiPerumal #Thirukkolur #Kuberan #DebtRelief #Wealth #VaarapiraiDwadashi #Navathirupathi #Perumal #Spirituality #TempleTour
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக