வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

மசால் தோசையும், Arranged Marriage ம்

 சிறு கதை

மசால் தோசையும், Arranged Marriage ம்

காதலர் தினம் அன்று தனது மனைவி ஜானகி உடன் Mount Road-இல் உள்ள தேவி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தான் அருண். நீண்ட நேரம் நடந்ததாலும், பசிக்கத் தொடங்கியதாலும், அருகில் இருந்த ஒரு அடுமனை (பேக்கரி)க்குள் நுழைந்தார்கள்.

இன்முகத்துடன் வரவேற்ற waiter மெனு கார்டை கொடுத்தான். அருண் அதை பிரித்து பார்த்தவுடன், வடிவேலு ஒரு படத்தில் சொல்வதை போல, Veg Roll, Spring Roll, Puff Roll – என புதிது புதிதாக உணவு வகைகள் கண்டுபிடித்து நாட்டை முன்னேற்றிட்டாங்க போலவே என தோன்றியது.

சிறு வயது முதல் இன்று வரை Veg Roll மீது பிரியம் கொண்டவன் அவன். அதை பில்டர் காபியுடன் ஆர்டர் செய்ய நினைத்த போது, ஜானகி waiter-இடம் ஆங்கிலத்தில் உரையாடி, Blueberry Cheesecake மற்றும் Hot Chocolate ஆர்டர் செய்தாள்.

"உங்களுக்கு Blueberry Cheesecake பிடிக்காதா?" என அவள் கேட்டாள்.

"இப்படில்லாம் Cheesecake இருப்பதே இப்போ தான் எனக்கு தெரியும்!" என அருன் சொன்னான்.

"எப்ப பாரு கிண்டல், நக்கல்!" என ஜானகி கிண்டலாக சொன்னாள்.

சாப்பிட்டு முடித்த பின் பில் வந்தது. எடுத்து பார்த்த அருனுக்கு சிறிய அதிர்ச்சி – Cheesecake ₹199!

"ஏய்! ஒரு Cheesecake ₹199 ஆ!!! என்ன ஸ்டேட் govt, என்ன central govt?" என மனசுக்குள் பேசிக்கொண்டான்.

இந்த ரூபாய்க்கு ஒரு A2B hotel-ல் மசால் தோசையும், பில்டர் காபியும் குடிச்சிருக்கலாம் என நினைத்து, அவன் அவ்வாறே வெளியே சொல்ல,

"இப்போ தெரியுது உங்களுக்கு ஏன் 'arranged marriage' ஆச்சு னு!" என ஜானகி கேளிக்கையாக கூறினாள்.

சட்டென கவுண்டர் மகான் போல் கவுண்ட்டர் கொடுக்க முடியாமல்,

"சொல்லால் அடித்த சுந்தரி!" என விஜயகாந்த் ஸ்டைலில் இளையராஜா பாடலை மனதில் பாடிக்கொண்டு, பில்லை கட்டி நடக்க ஆரம்பித்தான் அருண்.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!

#ValentinesDay    

#மசால்தோசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக