திங்கள், 16 டிசம்பர், 2024

மகிழ்ச்சி தரும் மார்கழி

 மகிழ்ச்சி தரும் மார்கழி


அதிகாலை ஆதவன் ☀️ வரும் முன்,

கடிகாரம் உதவியுடன் துயில் கலைந்து, நீராடி, நண்பர்களுடன் “பஜனை” என்ற நம்பிக்கை வழியில் ஒன்று கூடுவோம். அவர்களின் வீட்டில்,

எங்களை அன்புடன் வரவேற்று, தததும்ப தததும்ப நுரையுடன் கூடிய பில்டர் காபி ☕️️ வழங்கப்படும்.

அந்த குளிருக்கு சூடான காபி அவ்வளவு இதமாக இருக்கும்.


பனி பொழியும் அந்த நிமிடம், பக்தி குரலில், "முருகா சரணம்!! சரணம் முருகா!!" எனச் சொல்லிச் உச்சரித்து நடையை தொடங்குவோம்.

இறைவனிடம் எவ்வித பொருட்பாடு இல்லாமல்,

இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்காமல்

பக்தியுடன் சிரமமின்றி இறைப்பாதையில் சென்றோம்.


பயணங்களை கடந்து, (திருச்செந்தூர் )சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று அவரின் அருள் பெறுவோம்.

கோவிலில், கையில் சூடான நெய் சாதமும், அதற்கான துணையாக துவையலும் பிரசாதமாக கிடைக்கும். அதை உண்டு, கடற்கரையில் கால் நனைத்து, ஓடி, ஆடி, விளையாடி, அந்த இனிய காலத்தை அனுபவித்தோம்.


அந்த நினைவுகள் இப்பொழுதும் என் உள்ளத்தில் அசைபோடுகின்றன.


நினைவுகள் தொடரும்... #மார்கழி #மார்கழி_மாதம் #சுப்பிரமணியசுவாமி #பஜனை #பரிவுக்குரியபருவம்

வெள்ளி, 13 டிசம்பர், 2024

மரபும் நவீனமும் இணையும் 'கார்த்திகை'

 என் முதல் சிறு கதை!!

அனைவரும் படிக்க வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻


மரபும் நவீனமும் இணையும் 'கார்த்திகை'


!"


**"ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது"** பாடல் யூடியூப் பில் பார்த்து கொண்டிருந்தான் சுகுமாரன்.


**பாடல் முடியும் தருவாயில்** கையில் காஃபி யை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள் அவன் மனைவி ஜானகி. அவளிடத்தில் புன்னகையை பரிசளித்து காஃபி யை பெற்று கொண்டான் சுகுமார்.


**என்ன சார்?** இன்னிக்கு தங்கை செண்டிமெண்ட் ரொம்ப பலமா இருக்கு? அது என்ன? இன்னும் சிவாஜி பாடல் தானா கேட்பீர்களா, என கிண்டலாக கேட்டாள் ஜானகி.


**சில விஷயங்கள்** எத்தனை வருடங்கள் ஆனாலும் புதியதாக தான் தெரியும், உன்னை கல்லூரி நாட்களில் பார்த்த அதே காதலியாக தான் இன்றும் என் கண்களுக்கு தெரிகிறாய் **"ஜானு"** என்றான்.


**அது சரி** உங்களுக்கு பேச சொல்லி தரனுமா என்ன? **கவிதையாய்** சொல்லி என்னை காதலித்த கரம் பிடித்த கள்வன் ஆயிற்றே.


**ஒரு கவிதை** முன் கவிதை சொல்லவும் சுலபம் தானே என சுகுமார் கூற, **டேய்** இன்னுமுமா என்னை பற்றி கவிதை எழுதுகிறாய் என ஜானகி ஆச்சரியம் கலந்து கேட்க.


**எனக்கு நீ** முதலில் காதலி பிறகு தான் மனைவி என சிரித்து கொண்டே கூற, **உனக்கு இப்போ** நான் என்ன செய்யணும் என ஜானகி கேட்க.


**இன்று கார்த்திகை**, சாயங்காலம் நிறைய நம் வீட்டினுள் நிறைய விளக்குகள் எல்லாம் ஏற்றி ஒளிமயமா வைச்சா நல்லா இருக்கும்.


**இந்தா மாத** கடைசி என்பதால் 1000₹ இதை வைத்து தேவையானவை கள் வாங்கி கொள் என்றான் சுகுமாரன் ஜானகியிடம்.


ஜானகி ஓகே என்று சொல்வது போல சுகுமாரன் whatsapp tone சிரித்தது. ஜானகி அதை எடுத்து பார்த்தாள் அதில் சுகுமாரன் தங்கை சுமதி , நன்றி அண்ணா என்று message அனுப்பி இருந்தாள்.


அதற்கு மேலே அவன் அவள் தங்கைக்கு 1000₹ கார்த்திகை சீர் என்று பணம் அனுப்பி இருந்தான்.


ஜானகி ஒரு வித ஆச்சரியம் கலந்து சுகுமாரனிடம் கேட்டாள், மாச கடைசி சொல்லறீங்க, பணம் இவ்ளோ தான் சொல்லறீங்க, தங்கைக்கு பணம் அனுப்பறிங்க எனக்கு புரியவில்லை என்றாள்.


நம் கடமையை நாம் தவறாமல் செய்ய வேண்டும், பொதுவாக கார்த்திகை க்கு என் தங்கைக்கு அண்ணன் மார்கள் கார்த்திகை சீர் அனுப்புவது வழக்கம். என் அம்மாவிற்கு என் தாய் மாமா நேரில் வந்து கொடுப்பார்.


என் அம்மாவிடம் கேட்டேன் அதற்கு அவர்கள் தான் சொன்னார்கள் கல்யாணம் ஆகி எனக்கு 25 ஆண்டுகள் ஆகிறது இன்றும் என் அண்ணன் இந்த சீரை விடாமல் கொடுக்கிறான். என சிறிது ஆனந்த கண்ணீருடன் கூறினார்கள்.


சில விஷயங்கள் நம் மனதில் பசுமரத்துஆனி போல பதிந்து இருக்கும் அதேபோல் தான் இந்த நிகழ்வு என்றான். இப்போ தான் digital உலகம் ஆகிவிட்டது அதனால் நான் இந்த மாதிரி என் தங்கைக்கு டிஜிட்டல் வழியில் சீர் அனுப்பினேன் என்றான்.


Twitter , Fb , insta ன்னு சோசியல் மீடியா வில் இருக்க அதே நேரத்தில் உன்னோட traditional விட்டு கொடுக்காமல் இருக்க , சிட்டியில் பிறந்து வளர்ந்ததால் தான் என்னவோ இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு. இதெல்லாம் எனக்கோ எங்க அண்ணனுக்கு லாம் தெரியாது என்றாள்.


இதில் என்ன இருக்கு நான் வளர்ந்த சூழல் அப்படி உனக்கு தெரிந்த எத்தனையோ எனக்கு தெரியாது என்றான்.


உன்னோட இந்த குணம் தான் என்னை ஆச்சரிய படுத்தி காதலிக்க வைத்தது என்று கூறி விட்டு சென்றாள் ஜானகி.


ஒரு மணி நேரம் கழித்து சற்று ஆச்சரியம் கலந்த முகத்துடன் சுகுமார் முன் வந்து நின்றாள் ஜானகி. 


அவள் கவனத்தை திசை திருப்ப ஜானு , ஜானு என்று இரு முறை கூப்பிட்டான் சுகுமாரன். என் அண்ணன் எனக்கு 2000₹ அனுப்பி இருந்தான் , என்ன வென்று நான் அவனை மொபைலில் கேட்க ? 


என் அண்ணன் கூறினான் இன்று கார்த்திகை யாம் , உடன்பிறந்த சகோதரிக்கு கார்த்திகை சீர் செய்ய வேண்டுமாம் அவன் என் அம்மாவிடம் கேட்டுள்ளான் அதற்கு  அம்மா ஆமாம் என்று சொல்லி உள்ளார்கள் போல. 


இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் என நான் அண்ணனிடம் கேட்க ? 


இன்று டிவிட்டர் , fB இல் கார்த்திகை சீர் தான் ட்ரெண்டிங் போல அதில் தான் நான் படித்தேன் என கூறினான் என அண்ணன் என்றாள் ஜானகி.


ஓ அப்படியா என்று கேட்டு கொண்டான் சுகுமாரன் , 


அவன் (சுகுமார் ) தான் கார்த்திகை சீர் என்று கட்டுரை எழுதி அதை அவனது புனை பெயரில் (எழுத்தாளன்) வெளி இட்டு இருந்தான். 


இவன்

ராஜா.க


#கார்த்திகைதீபம்

#மரபும்_நவீனமும்

#அண்ணன்_தங்கை_மரபு

#தமிழ்கதை

#கார்த்திகைசீர்

#FamilyTraditions

#SiblingLove

#TamilCulture

#ShortStory

#TraditionAndModernity

சனி, 7 டிசம்பர், 2024

மக்களாட்சி: மக்கள் தேர்வு vs பிரதிநிதிகள் முடிவு

 

மக்களாட்சியில் நம் பிரதிநிதிகளையும், அவர்களின் தலைவர்
தேர்வையும் புரிந்து கொள்ளலாம்.

நம் நாடு குடிமக்களுக்கு MLA, MP, வார்டு கவுன்சிலர் ஆகியோரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.
ஆனால், முதல்வர், பிரதமர், மேயர், பேரூராட்சி தலைவர் போன்ற தலைவர்களை தேர்ந்தெடுப்பது இவர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்) செய்யும் செயலாகும்.

இது ஒரு நேரடித் தேர்தல் மற்றும் மறைமுகத் தேர்தல் முறையாகப் பாரக்க முடியும். இதற்கு சாதகங்களும், பாதகங்களும் உள்ளன.

சமீபகால நடைமுறைகள்

1. பாஜக முறை:
2014, 2019, 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலும் திரு. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டி நடந்தது. இது இந்திய அரசியலில் புதிய வழக்கமாகக் கருதப்படுகிறது.

2. 2004 காங்கிரஸ் முறை:
காங்கிரஸ் கட்சியானது பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது.
மெஜாரிட்டி MPக்கள் திருமதி சோனியா காந்தி மீது ஆதரவு தெரிவித்தாலும், குடியரசு தலைவர் அனுமதி வழங்கவில்லை.
அதன் பிறகு திரு. மன்மோகன் சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. தமிழக முறை:
தமிழக அரசியலில் திருமதி ஜெயலலிதா மற்றும் திரு. கருணாநிதி போன்ற தலைவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டனர்.
ஆனால், 2021இல் திரு. ஸ்டாலின் மற்றும் திரு. எடப்பாடி பழனிசாமி பெயர்களை முன்னிறுத்தி நேரடி போட்டி நடைபெற்றது.

மக்கள் பங்கு

குடிமக்கள் தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் உடையவர்கள்.
அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் மக்களின் தேர்வுக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

அம்சம்: தொங்கு சட்டசபை
தொங்கு சட்டசபை அமையும்போது, எதிர்பாராத முதல்வர் அல்லது பிரதமர் தேர்வு செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். இது மக்கள் நேரடியாக தீர்மானிக்காத முடிவுகளை உருவாக்குகிறது.

இந்த கட்டமைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் கருத்து என்ன?

#மக்களாட்சி #இந்தியா #தேர்தல்

புதன், 4 டிசம்பர், 2024

தேவந்திர பட்னாவிஸ்: அரசியல் விடாமுயற்சியின் வாழும் உதாரணம்

 

தேவந்திர பட்னாவிஸ்: அரசியல் விடாமுயற்சியின் வாழும் உதாரணம்


2014 முதல் 2019 வரை மகாராஷ்டிராவின் முதலமைச்சராகச் சிறப்பாக செயல்பட்ட தேவந்திர பட்னாவிஸ், அடுத்தகட்ட அரசியலின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொண்டவர். பொதுவாக, முதல்வராக இருந்தவர் பின்னர் துணை முதல்வராக ஆவதே அவ்வளவாக நடக்காது. ஆனால், பட்னாவிஸ் தனது தனித்துவமான அரசியல் நெரிசலை சாமர்த்தியத்துடன் சமாளித்தார்.

2019 மாநில தேர்தலின் பின்னர், பாஜக கூட்டணி வெற்றி பெற்றபோதும், சிவசேனாவின் துரோகத்தால், வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். அதன்பிறகு எதிர்க்கட்சியாக செயல்பட்டார். சிவசேனா பிளவுக்கு பிறகும், முதலமைச்சர் பதவிக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், பாஜகவின் தேசிய தலைமை நம்பிக்கை ஏற்று மக்களுக்காக துணை முதலமைச்சராக பணியாற்ற தயாராகினார்.

2024 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி எதிர்நீச்சலுக்குள்ளானது.
அதையடுத்து தனது துணை முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ய முன்வந்த பட்னாவிஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா நம்பிக்கையுடன் கையிலேந்தினர்.

பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக அணி ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. எதிர்க்கட்சியே இல்லாமல், மக்களிடம் பாராட்டும் ஆதரவும் பெற்றது.

இன்று, அவருடைய அரசியல் முயற்சி மற்றும் நேர்மையான பணியாற்றலுக்கான வெற்றி என்ற வகையில், தேவந்திர பட்னாவிஸ் மீண்டும் மகாராஷ்டிராவின் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

#Fadnavis #MaharashtraCM #LeadershipVictory
#BJP #Shivsena
#MaharashtraElection2024

ஞாயிறு, 10 நவம்பர், 2024

Golam திரைவிமர்சனம்

ஒரு சின்ன ஆபீஸ் ரூம் அங்கே உள்ள ரெஸ்ட் ரூம் இல்  இறந்து போகிறார் MD, normal death or கொலை யா? இவ்ளோ தான்.ரொம்ப ஸ்வரஸ்யமா திரைக்கதை வைச்சு ஒரு தரமான crime திரில்லர்.

இதுக்கு மேல் இந்த படம் பற்றி விமர்சனம் எழுதினா spoiler ஆயிடும். அவ்ளோ Interstng writing, இப்டி லாம் நடக்குமா? நடக்கும் என்கிறது விஞ்யானம். 


என்னமா யோசிச்சு படம் எடுக்கறாங்க 😲

#Golam #AmazaonPrime #movie #review 

வெள்ளி, 8 நவம்பர், 2024

லக்கிபாஸ்கர் திரைவிமர்சனம்

ஒரு மிடில் கிளாஸ் மனிதன் தன் குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க எந்த கட்டத்துக்கும் செல்லுவான், பிறகு அதில் இருந்து வெளியில் வர முடியுமா?

ஒரு நேர்மையான வங்கி ஊழியர் எப்படி கோடிஸ்வரன் ஆக முடியும்? முடியும் அவன் சந்திக்கும் அவமானம், அவனை உதாசீனம் செய்த மனிதர்கள்.

Finance crime பற்றின ஒரு தரமான படம்.
90s காலக்கடத்தில் நடக்கிறது,
மும்பையை அப்டிகண் முன்னே நிறுத்தி excellent making.
ஹர்வத்மேத்தா character சரியா கனெக்ட் பண்ணி திரைக்கதையை ஷார்ப்.
@dulQuer நடிப்பு அடி பொலி,
வசனம் லாம் ஆட்டோ க்கு பின்னாடியே எழுதலாம்.
Writting 👏🏼👏🏼
#LuckyBaskhar


வியாழன், 31 அக்டோபர், 2024

அமரன் திரைவிமர்சனம்

 2014 க்கு முன்பு வரை காஷ்மீரில் உள்ள பிரிவினை வாதிகள் , அவர்களின் தலைவனை அழிக்கும் மேஜர்.இரண்டு அக்கா , அப்பா , அம்மா என்று வாழும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து 

பள்ளி வயதிலேயே இந்திய இராணுவம் மீது  கொண்ட ஈடுபட்டால் ராணுவத்தில் சேர முயல்கிறான் கதையின் நாயகன்

முகுந்தன்.


கூச்ச சுபாவம் உள்ள நாயகி க்கு தைரியம் கொடுத்து கல்லூரி போட்டி யில் வெற்றி பெற வைத்து அவளுடன் காதல். மொத்த கதை யும் தாங்குவது லா என்னமோ பலமான ஹீரோ வாகவே வாழ்கிறார் சிவ கார்த்திகேயன்.

சாய் பல்லவி இடையே நல்ல கெமிஸ்ட்ரி. காதல் காட்சிகள் காஷ்மீர் போல சில்லுனு உள்ளது.


பரபரப்பான action காட்சிகள் பஞ்சமில்லாமல் படம் முழுவதும் பயணிக்க முடிகிறது , @gvprakash பின்னணி இசை மிக பெரிய பலம்.  இறுதி காட்சி யில் நம்மை அறியாமல் கண்கள் கலங்கின. 

சிவகார்த்திகேயன் #Amaran அசுரன் வெற்றி வாகை சூடுகிறான்.

#Amaran


இவன் 

ராஜா.க


சனி, 12 அக்டோபர், 2024

வேட்டையன் திரை விமர்சனம்

 


இன்றைய தமிழகத்தில் அதிகரித்துள்ள மது , போதை பொருட்களால் சிக்கி சீரழியும் மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் என்று படம் தொடங்குகிறது ,சட்டத்தில் உள்ள ஓட்டகளை பயன்படுத்தி வெளியில் உலாவும் கிரிமினல்களை தன் துப்பாக்கி தோட்டாக்களால்  வேட்டையாடும் கதையின் நாயகன் , 


அரசு பள்ளிகளில் போதை பொருட்களை பாதுகாத்து வைக்கும் கும்பலை துணிவாக நாயகனிடத்தில் புகார் தெரிவிக்கும் ஆசிரியை. போதை பொருள் கும்பலை Encounter செய்கிறார் நாயகன்.சிறிது காலத்துக்கு பிறகு ஆசிரியை படு கொலை செய்யப்படுகிறார் ,  ஆசிரியை கொன்றவர்கள் யார் ? எதற்காக ?க்ரைம் த்ரில்லர் தர முயற்சி செய்துள்ளார்.



இயக்குனர் ஞானவேல் அவர்கள். இன்னொரு நாயகன் பகுத்பாசில் , காமெடி க்கு guarantee அவரின் நடிப்பு அடி பொலி. 

முதல் பாதி சூப்பர் ஸ்டார் தயவால் சிறப்பாக செல்கிறது. 

இரண்டாம் பாதியில் திரைக்கதை யில் சிறுது

தடுமாற்றம் இந்திய அரசு டிஜிட்டல் தொழில் நுட்ப கல்விக்கு முக்கியத்துவம் 

மாநில அரசு தயவோடு கொடுக்க நினைக்கிறது.



மாநில அரசு தனியார் உதவியுடன் நிறைவேற்ற முயல்கிறது தவறான தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் மாணவர்கள் நிலைமை என்ன ஆகும் என்கிறதை சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர். 

தான் இயக்குனர் நாயகன் தான் என்பதை நிரூபித்து உள்ளார் சூப்பர்ஸ்டார்.


Encounter ஆபத்தையும் பதிவு செய்கிறார் இயக்குனர்.நடிகர்  அமிதாப் ,  மஞ்சு வாரியர் தன் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். மொத்தத்தில் #வேட்டையன் 

இன்னொரு சூப்பர் ஹிட் Movie for Super Star and ஞானவேல் !!

#VettaiyanReview 

#VettaiyanTheHunter


வெள்ளி, 6 செப்டம்பர், 2024

GOAT திரை விமர்சனம்

 சாதாரணமான கதை ,

special anti-terrorist squad  leader விஜய் தன் குடும்பத்தையும் , அவர் நண்பர்களையும் எப்படி காப்பாற்றுகிறார் ? 

விஜய் போன்ற மாஸ் ஹீரோ களுக்கு கதையை விட திரைக்கதை முக்கியம். அதிரடி சண்டை காட்சி யுடன் ஹீரோ அறிமுகம் ,ஆடல் , பாடல் , காமெடி என முதல் பாதி செல்கிறது.


கல்லூரி மாணவனாக விஜய் கலக்கிய காலம் போய் , இன்று கணவனாக கலக்கி உள்ளார் 

விஜய்-சினேகா கெமிஸ்ட்ரி கண்களுக்கு குளிர்ச்சி.

தன் மகனை பறிகொடுத்த தந்தை யின் வலியை விஜய் நடிப்பால் உணர்த்துகிறார். வேலையை உதறி தள்ளுகிறார். தன் உயர் அதிகாரி  கொலை செய்யப்படுகிறார்.


அதை கண்டு பிடிக்க தொடங்குகிறது இரண்டாம் பாதி. 

வில்லன் vs விஜய் நல்லாவே உள்ளது.சில ,பல ட்விஸ்ட் களுடன்

இயக்குனர் வெங்கட்பிரபு படத்தை நகர்த்துகிறார். 

ATM க்கு பிறகு விஜய் க்கு நெகடிவ் role நடிப்பில் 2K kids ஆதர்ஸ நாயகனாக score செய்கிறார்.அவர்களுக்கும் பிடித்த மாதிரி பின்னி பெடல்

எடுக்கிறார் தளபதி.


நடிகர் அஜீத் வைத்து VP  இயக்கிய மாங்காதா இன்றும் பேச பட காரணம் அஜீத் நெகடிவ் ரோல். அது போல விஜய் க்கும் ஓரு 

படம் எடுக்க நினைத்து வெற்றி பெற முயன்று உள்ளார். 

இரண்டாம் பாதி கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம். மற்றபடி one more பக்கா கமர்ஷியல் movie. #GOAT

#விஜய் #Vijay #GOAT 




வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

சட்னி சாம்பார் திரைவிமர்சனம்

 தள்ளுவண்டி கடையில் ஹோட்டல்

நடத்துபவர் நாயகன் அந்த கடையில் இட்லி , தோசை என்று இருந்தாலும் அந்த ஹோட்டல் ஸ்பெஷல் சட்னி அதற்காகவே அந்த கடையில் கூட்டம் வருகிறது.அந்த தொகுதி MLA கூட வாங்கி செல்வார். அவர் நாயகனின் நண்பனும் கூட. 


அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்த நாயகன் அம்மா சொல்லி கொடுத்த

சட்னி செய்யும் secreat  சூட்சமத்தை யாருக்கும் சொல்லாமல் அவர் தான் சட்னி ரெடி செய்வார். அம்மாவும் இறந்த பிறகு ஒண்டி கட்டையாக கடையை நடத்தி வருகையில் அவரை நோக்கி புதியவர்கள் வருகிறார்கள் , வந்தவர்கள் அவரை கடத்தி செல்கிறார்கள்.


ஏன் கடத்துகிறார்கள் ? என்பதை முழுக்க , நகைச்சுவை யாக

சொல்லி சிரிக்க வும் வைக்கின்றனர்.ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு குடும்ப பாங்கான ,சின்ன சின்ன  துரோகம் & சோகம் 

நிறைய காமெடி எல்லாம் கலந்து ஒரு நல்ல வெப் சீரிஸ் சட்னி ,சாம்பார். யோகிபாபு பிரதான நாயகன்.இயக்குனர் ராதாமோகனின் மற்றோரு தரமான படைப்பு. 


இந்த அடி, தடி ஆக்சன் 

படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இரு குடும்ப வாழ்க்கை முறையை அழகாக காட்சி படுத்தி யுள்ளது இயக்குனர் லாவகம்.யோகிபாபு வின் நடிப்பு ரொம்ப யதார்த்தம். இதில் நடித்த அனைவரும் சிறப்பான அளவான நடிப்பு. ரிலாக்ஸ் குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம் உண்டு ருசிக்கலாம்

இந்த #சட்னிசாம்பார்


இவன்

ராஜா.க

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

அந்தகன் திரை விமர்சனம்

 கண் பார்வை தெரியாத கதாநாயகன்(பியோனா player)ஒரு நடிகரின் வீட்டுக்கு பியோனா வாசிக்க செல்கிறார் , அங்கே நடிகர் இறந்து கிடக்கிறார்.அங்கே என்ன நடந்தது?யார் கொலை செய்தார்கள்?

அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இந்த அந்தகன்.


நீண்ட இடைவெளிக்கு பிறகு   நாயகனாக பிரசாந்த் Smart ஆக உள்ளார்.ஆர்ப்பாட்டம் இல்லாத Introduction , action role இல்லாமல் படம் முழுவதும் படு யதார்த்தமாக நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் ,வந்து செல்கிறார். 



நடிகராக கார்த்திக் சிறிது நேரம் வந்து #90s காலகட்டதுக்கு அழைத்து செல்கிறார். அவரின் மனைவியாக சிம்ரன் மிக முக்கிய 

கதாப்பாத்திரம் ,முடிந்த வரை score செய்ய முயல்கிறார் என்னை பொறுத்தவரை வேறு யாராவது செய்திருந்தால் இன்னும் ரொம்ப நல்லா வந்துருக்கும். யோகிபாபு-ஊர்வசி- KS.Ravikumar காமெடி செய்ய முயன்று உள்ளனர் ஆனால் workout ஆகல. முதல் பாதி Thriller இரண்டாம் பாதி இழுவை. ஒரு முறை தாராளமாக பார்க்கலாம்


இவன்

ராஜா.க


ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

ராயன் திரை விமர்சனம்

 The Hero's Journey ன்னு ஓர் ஆங்கில படம் அதை மாதிரி ஒரு படம் தமிழில் "தேவர் மகன்" படத்தின் தொடக்கத்தில் Train லிருந்து ஆட்டத்துடன் ஊருக்குள் வரும் இளைஞன் படம் முடியும் போது அந்த ஊரை காத்து அதே train இல் சிறைக்கு செல்வார்.


இப்போ ஏன் இதை சொல்லறேன் னா , நேற்று நான் பார்த்த 

இந்த படத்தின் நடிகர் + இயக்குனர் திரு.தனுஷ் அது போன்றதொரு படத்தை கொடுக்க நினைத்துள்ளார் ? கொடுத்தாரா? பார்க்கலாம் ,உடன் பிறந்தவர்கள் 3 மூன்று பேர் நாயகனோடு சேர்த்து 4 பேர் ,ஒரு லாரியில் (வாழ்க்கை) பயணத்தை தொடங்கி ,பின் படம் முடியும் போதும் அடுத்த பயணம் தொடர்கிறார்கள்.


நம்மால் அவர்களுடன் பயணம் செய்ய முடிகிறதா ?என்று கேட்டால் இல்லை ,  என்று தோன்றியது.ஆம் அண்ணன் ,தம்பி இருவர் , தங்கை ஒருவர். இவர்கள்களுக்கிடேயே ஒரு பாசம் இருப்பது போல வைத்த காட்சிகள் எதுவும் மனதை தொடவில்லை ,அதனால் தான் என்னவோ அவர்கள் மீது கரிசனம் ஏற்படவில்லை.தனுஷ் ஏன் இவ்வளவு  இறுக்கமாக முகத்தை வைத்துள்ளார் ?



Strong ஆன திரைக்கதை இல்லை. அண்ணன்-தங்கை பாசம் மட்டிம் ஓரிரு இடங்களில் எட்டி பார்க்கிறது. படத்தின் அடுத்த பலவீனம் வில்லன் கதாபாத்திரங்கள். பேச்சு மட்டும் Build up மற்றபடி சொல்லி கொள்ளும் படி இல்லை.

தம்பி யும் அவன் காதலியும் தான் ஆறுதல் அதுவும் புட்டுகிச்சு.


ரகுமான் இசை ஆறுதல் , அதுவும் பின்னணி இசை யில். மொத்தத்தில் முதல் பாதி பார்த்த பின் இரண்டாம் பாதி கொஞ்சம் சுமாரா இருக்கும் என நினைத்தால் இரண்டாம் பாதி பார்த்த பின் 

முதல்  பாதி எவ்ளோ மேல் என நினைக்க தோன்றுகிறது.

#Raayan #Dhanush


இவன்

ராஜா.க


வெள்ளி, 19 ஜூலை, 2024

Teenz Movie Review

 டீனேஜ் பருவத்துக்கு இனிமேல் போக முடியாது அதனால் #Teenz படத்துக்காகவது போவோமே என்று போய் பார்த்தா @rparthiepan என்கிற கலைஞனின் நல்ல ஓரு படைப்பை பார்த்த உணர்வு. அந்தந்த  காலகட்டத்தில் ஒட்டிய இளைஞர்களோடு பழகி Update ஆக இருந்தால் என்றும் இளமையாக இருக்கலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இயக்குனர் திரு. பார்த்திபன் 


Teenz படம் அப்டி ஒரு கதைக்களம் , ரொம்ப இயல்பாக இக்கால பள்ளி மாணவர்கள் பேச்சு , சிந்தனை களை வைத்து வந்துள்ள படம்.



பள்ளி படிக்கும் பிள்ளைகள் தாங்கள் #Teenz பருவம் எட்டி விட்டோம் என்று தெரிய படுத்த தனியாக ட்ரிப் செல்ல முயல்கிறார்கள். அந்த trip என்ன ஆனது ? சென்றவர்கள் உயிர்க்கு என்ன ஆபத்து ? அவர்களை யார் காப்பாற்றினர் ?


என்பதை science fiction கலந்து ரசிக்கும் படி நடித்தும் கொடுத்துள்ளார் படைப்பாளி.

திரு.பார்த்திபன் @rparthiepan 👏🏼👏🏼 தமிழ் சினிமா என்றும் இளமையாக இருக்க இது போன்ற கதை களம் கண்ட படங்கள் கண்டிப்பாக வெளி வர வேண்டும்.இது போன்ற படங்களை இப்போது கொண்டாடாமல் பத்து வருடம் கழித்து அப்போவோ எப்டி எடுத்துள்ளார் என்கிற வசனம் கேட்டு சலித்து விட்டது. அனைவரும் காண வேண்டிய படம்

இந்த #Teenz 


இவன் 

ராஜா.க





வெள்ளி, 14 ஜூன், 2024

Maharaja Movie Review



 சாமானியன் ஒருவன் தன் வீட்டில் திருடப்பட்ட ஒரு பொருளை மீட்டு தர வேண்டி காவல் நிலையம் செல்கிறான் , அங்கு அவன் எப்படி நடத்த படுகிறான் ,இழந்த பொருளை மீட்டு எடுத்தானா ? என்பதை சுவராஸ்யமான திரைக்கதை முடிச்சால் அவிழ்த்து நம் மனதை பதை பதைக்க வைக்கிறார் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன்.

முடி திருத்தம் செய்யும் கதை யின் நாயகன் விஜய்சேதுபதி எதிர்பாரா விபத்தில் மனைவி யை இழந்து மகளை கண்ணும் கருத்தாக வளர்க்கிறார். வீடுகளில்  திருடும் இரு திருடர்கள் வீட்டை கொள்ளையடித்து அங்குள்ள வர்களை கொலை செய்து தொடர் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் என்று இரு கதை களம் ,

நாயகன் வீட்டில் திருடர்கள் நுழைந்து என்ன செய்தார்கள் ? விளையாட்டு போட்டிக்கு வெளியூர் செல்லும் மகள் வீட்டிற்கு வந்தாளா ? என்பதை சிறப்பான திரைக்கதை யால் சில ட்விஸ்ட் களுடன் செமயான ஒரு த்ரில்லர் படம் .மக்கள் செல்வன் விஜய்சேதுபதி க்கு 50 வது படம் வாழ்த்துக்கள்.

விஜய்சேதுபதி இயக்குனரின் நாயகன் என மற்றோரு முறை நிருபித்து உள்ளார். அவர் தவிரநட்டி , சிங்கம் புலி , அனுராக் காஷ்யப் என சிறப்பான நடிகர்கள் சிறப்பான நடிப்பால் காலத்துக்கும் 

தமிழ் சினிமா வின் ஆக சிறந்த  படங்களில் ஒன்று 

இந்த படம் அமைந்துள்ளது #மகாராஜா #MahaRaja #MahaRaja

#Moviereview

வெள்ளி, 31 மே, 2024

Hit list movie Review

 சென்னை யின் பிரபல ரவுடி யை Warning செய்யும் கமிஷனர் அவரை பொருட்படுதாமால் அவர் டிவிஷன் க்குள் அடுத்த கொலை செய்யும் அந்த ரவுடி , பதிலுக்கு கமிஷனர் என்ன செய்தார்?  உயிர்களை நேசிக்கும் நாயகன் , அசைவ உணவை தவிர்த்து வாழ்பவன் ஆட்களை கொலை செய்கிறான் ,

ஏன் ? எதற்கு ?


என்பதை முதல் பாதியில் சுவராஸ்யமா சொல்ல முயன்று வெற்றி பெற்று , இரண்டாம் பாதியில் கதை யின் முடிச்சுகளை சுவாரஸ்யமாக அவிழ்த்து நல்ல ஒரு படம் பார்த்த feel.

கமிஷனராக @realsarathkumar , 

Fitness செம , குரலில் கர்ஜிக்கிறார்.

நாயகனாக Vijay Kanishka அப்பாவி , ஆக்ரோஷமாக

என கலந்து கட்டி நடிக்கிறார்.



 ரவுடி க்கும் நாயகனுக்குமான சண்டை காட்சிகள் அருமை.

நாயகனை கொலை செய்யும் தூண்டும் Mask Man யார் ? என்பதை சுவாரஸ்யமாக சொல்லி நல்ல thriller படம் பார்த்த உணர்வு. செண்டிமெண்ட் , action ,பழிவாங்கல் என இயக்குனர் சூர்யா & கார்த்திகேயன் கலந்து


கட்டி ஒரு பக்கா கமர்சியல் , த்ரில்லர் படம் பார்த்த உணர்வு. 

@ksravikumardir தயாரிப்பாளர்  கண்டிப்பாக நல்ல படமாக தான் இருக்கும் என்கிற நம்பிக்கை யை பூர்த்திசெய்தார் இயக்குனர் & தயாரிப்பாளர் #KSRavikumar


இவன் 

ராஜா.க



வெள்ளி, 24 மே, 2024

சாமானியன் திரை விமர்சனம்

அந்த காலத்த்தில் சொல்லுவாங்க ராமராஜன் படம் னா நல்ல கதை இருக்கும் , குடும்பத்துடன் படம் பார்க்கலாம் என்று.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த மாதிரி நல்ல கதை களத்துடன் வந்து உள்ளார் ராமராஜனின் சாமானியன். வங்கியை துப்பாக்கி , வெடி குண்டு முனையில் கடத்துகிறார்கள் அங்குள்ள பொது ஜனம்

என்ன ஆனது , ஏன் அந்த வங்கி யில் ?என்பதை சுவராஸ்யமா சொல்ல முயன்று உள்ளார்கள். திரைக்கதை அமைப்பு சற்று நாடகம் பார்ப்பது போல அமைந்தது ஆனால் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.60வயது கடந்தவராக படத்தில் நாயகன் ராமராஜன் வருகிறார் ,அதனால் தான் என்னவோ action காட்சிகளை ஏற்று கொள்ள முடியவில்லை

மற்ற படி சமூகத்திற்கு நல்ல ஒரு message சொல்ல முயன்று இருக்கிறார்கள் இதுவே ரஜினி யோ/கமலோ இந்த கதை களத்தில் நடித்து இருந்தால் வேற லெவல்ரீச் ஆகியிருக்கும்.தனியார் வங்கிகள் அத்துமீறல்கள் தகுதி க்கு மீறி கடன் வாங்கினால் ஏற்படும் விளைவுகளை கூறி சாமானியன் வெற்றி பெற முயற்சி செய்துள்ளான்


இவன்

ராஜா. க




ஞாயிறு, 19 மே, 2024

இங்க நான் தான் கிங் விமர்சனம்

 மும்பை யில் நடந்த குண்டு வெடிப்பு போல , சென்னையிலும் நடத்த திட்டம் திட்டுகிறார்கள் தீவிரவாதிகள் அவர்கள் திட்டம் நிறைவேறியதா?  கல்யாணம் நடக்காமல் தள்ளிப்போகும் 90s kid கதையின் நாயகன்  அவனுக்கு கல்யாணம் நடந்ததா?நாயகன் தீவிரவாதிகளின் செயலை முறியடித்தானா ? என்பதை முழு நீள காமெடி படமாக கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.



நாயகன் சந்தானம்  oneline காமெடி நல்லworkout ஆகி உள்ளது , இமானின் இசையில் இரண்டு பாடல்கள் இதம் , @Bala_actor ,தம்பி ராமாய்யா ,காமெடி நன்றாக வந்துள்ளது.

எந்த லாஜிக் இல்லாமல் சிரிக்க மட்டுமே முயன்று அதில் வென்றுள்ளது
படக்குழு


ஞாயிறு, 12 மே, 2024

ஸ்டார் movie review

 சினிமா நம்ம எல்லாருக்கும் பிடிச்ச ஒன்னு , காரணம் நாம் ரியல் life இல் செய்ய முடியாத சில விஷயங்களை நாம கற்பனை பண்ணி , இப்படி நடந்தா நல்லா இருக்குமே என்று மகிழ்ச்சி அடைவோம். இது தான் சினிமாவும் கூட. 


நம்மை போன்ற ஒருவன் , நாம் சந்திந்த சமூகத்தை அப்படியே திரையில் காணும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நாயகன் திரைபடத்தில் வெற்றி பெறும் போது. அப்டி ஓரு படம் தான் கவின் நடித்த ஸ்டார்.


சிறு வயது முதல் நடிக்கணும் என்கிற நாயகன் ஆர்வம் அதற்கு பக்கபலமாக இருக்கும் அவன் குடும்பம் இருந்தும் அவனால் அவ்வளவு எளிதில் அவன் இலக்கை ஏன் அடைய முடியவில்லை என்பதை வெகு இயல்பாக சொல்லி உள்ளார் இயக்குனர்.


நாயகன் பள்ளி பருவம் , கல்லூரி பருவம் என்று வரும் முதல் பாதி கோடைகாலத்தில் ஜில்லுன்னு AC room இல் இருப்பது போல ஒரு feel. கவின் யதார்த்த மாகவும் , மாஸ் நடிப்பு. சமூகத்தோடு ஒட்டி செல்லனும் என்பதற்காக எல்லோர் போல  engineering படிப்பு அங்கே கேம்பஸ் interview வில் சினிமா பற்றிய கனவு சொல்வதும் அதற்கு அந்த interviewer செய்வது அழகிய ஹைக்கூ.


யுவனின் இசையில் பாடல்கள் பின்னனி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம், இரண்டு நாயகிகள் கதைக்கும் பலம் நாயகனுக்கும் பலம், கவின் அப்பாவாக வரும் லால் நடிப்பு செம. கவினின் நடிப்பு மேலும் மேருகேறி உள்ளது. 



சினிமா வை ரசிக்கும் ரசிகர்கள், தன் பேஷன் நிறைவேற்ற துடிக்கும் இளைஞர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும்.


இவன்

ராஜா.க





ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

The Family Star movie Review

 The Family Star: A Heartfelt Blend of Comedy, Sentiment, and Romance".


In a time where the younger generation seems more engrossed in their personal lives than in the magic of cinema, "The Family Star" emerges as a refreshing reminder of the power of storytelling to captivate hearts and minds alike.


At its core, the film follows the journey of its protagonist, whose unwavering commitment to his craft sets him apart in a world where priorities often seem misplaced. Amidst this backdrop, a chance encounter with the charming and spirited heroine ignites a spark of romance, as she finds herself drawn to his genuine character and passion for his craft.


However, as is often the case in matters of the heart, misunderstandings lead to a heartbreaking breakup, leaving audiences on the edge of their seats, wondering what fate has in store for our lovelorn hero. It is here that the brilliance of the screenplay shines, seamlessly weaving together moments of comedy, familial bonds, and raw emotion to deliver a narrative that is as poignant as it is entertaining.


As the story unfolds, viewers are treated to a rollercoaster of emotions, as our hero finds himself confronting not only external adversaries but also the demons of his own heart. Yet, through it all, one thing remains constant: the unbreakable bonds of family and the enduring power of love.


With its stellar performances, vibrant cinematography, and a script that effortlessly balances laughter and tears, "The Family Star" is a testament to the timeless appeal of cinema. It's a movie that not only entertains but also resonates on a deeply personal level, reminding us of the importance of chasing our dreams and cherishing the ones we hold dear.


In conclusion, "The Family Star" is a triumph of storytelling, a cinematic gem that sparkles with humor, heart, and humanity. It's a movie that leaves a lasting impression, reminding us that, in a world filled with chaos and uncertainty, the magic of cinema has the power to unite us all.


புதன், 10 ஏப்ரல், 2024

Rebel Movie Review

 




தமிழகத்தில் இருந்து கேரளா சென்று அரசு கலை கல்லூரி யில் படிக்கும் தமிழக மாணவர்கள் அனுபவிக்கும் சித்ரவதை களை எந்த சமரசமும் இல்லாமல் காட்சி படுத்தியுள்ள படம் #Rebel 

@gvprakash ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு , அநியாயத்திற்கு எதிராக பொங்கி எழும் காட்சிகளில் action அவதாரம் எடுக்கிறார்.


காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் களின் கோர முகத்தை காட்சி படுத்தி யுள்ள இயக்குனர் Nikesh க்கு சுபாஷ். பரியேறும் பெருமாள் படத்துக்கு கொடுத்த ஆதரவை இந்த படத்துக்கு நம் மக்கள் என் கொடுக்க வில்லை ?

ஒரு வேளை அடக்குபவன் கம்யூனிஸ்ட் /காங்கிரஸ் இருந்தால் அடங்கி தான் போகணும் போல. 



நம் தமிழக மாணவர்கள் வேஷ்டி கட்டிவிட்டான் என்பதற்காக அவர்கள் வேஷ்டி யை அவிழ்த்து விடும் காங்கிரஸ் பின்புலம் கொண்ட மாணவர்கள் , மாணவிகள் ஆடும் போது அவர்கள் ஆடைகளை களையும் கம்யூனிஸ்ட் மாணவ அமைப்புகள் என்று இருவரின் முகத்திரை காட்சி களால் விவரிக்கையில் இயக்குனர் மிளிர்கிறார்.

#Rebel



பின்னணி இசையில் /  இசை / கதாநாயகன் என படம் முழுவதும் தன் கொடி பறக்க விடுகிறார் . நண்பன் இறந்ததும் அவனுக்காக அழும் காட்சி ஆகட்டும் , காதல் காட்சி என சிறப்பான நடிப்பு

 @gvprakash அனைவரும் காண வேண்டிய படம் #Rebel #AmazonPrimeVideo



இவன்

ராஜா.க 

ஞாயிறு, 3 மார்ச், 2024

Singapore Saloon Movie - Review

 Singapore Saloon" offers a touching portrayal of the struggle between pursuing one's dreams and meeting familial expectations. 

The protagonist's journey, inspired by his childhood admiration for a hometown hairstylist, unfolds with heartfelt sincerity and relatability.


Navigating through parental pressure to pursue engineering, the protagonist encounters love and disappointment, adding depth to his character. 

Despite setbacks, his determination to pursue hairstyling remains unwavering, showcasing the resilience of the human spirit.



Lead actor Rj Balaji

delivers a compelling performance, embodying the protagonist's emotional journey with authenticity and depth. His chemistry with the supporting cast, particularly (Laal , thali vasal vijay and satyaraj)adds layers to the narrative, making each interaction resonate with genuine emotion.


Director Gokul  narrative unfolds seamlessly, blending moments of humor, romance, and introspection. While the pacing may feel sluggish at times, the film's emotional payoff makes it a worthwhile watch.The depiction of Chennai's landscape adds authenticity to the story, grounding it in a familiar setting. Additionally, supporting performances, notably by RJ Balaji, enhance the overall viewing experience, injecting moments of levity and poignancy.



However, the film's climax, marked by a tragic turn of events, may polarize audiences. While it adds a layer of realism, it leaves some loose ends unresolved, detracting from the overall satisfaction of the narrative.Despite its flaws, "Singapore Saloon" remains a poignant exploration of personal ambition and resilience. With its heartfelt performances, relatable themes, and authentic portrayal of human emotion, it's a film that resonates long after the credits roll.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

2006 விஜயகாந்த் , 2026 விஜய் ?

 2006 விஜயகாந்த் , 2026 விஜய் ?



2006 -2011 நடந்த தமிழகத்தில் நடந்த ஆட்சி கிட்டத்திட்ட  கூட்டணி ஆட்சி தான் ஆம் அது தான் முதன் முறை.காரணம்  2006 தேர்தலில் விஜயகாந்த் தேமுதிக தனியாக களம் கண்டு ஒரு தொகுதி யில் வெற்றி பெற்று அவர் மட்டும் விருத்தாசலம் தொகுதி வெற்றி மேலும் 7-8% வாக்குகள் பெற்றது. அதனால் தான் என்னவோ ஆளுங்கட்சி மீதான

எதிர்ப்பு ஓட்டுகள் சிதறியது.


அதிமுக 66 சீட்டுகள் பெற்றது ,  முதல் முறையாக எதிர்க்கட்சி யாக அமர போகும் ஒரு கட்சி யின் அதிக எண்ணிக்கை. 

ஆளுங்கட்சி அறியணையில் அமரும் திமுக 96 இடங்கள் , கலைஞர் சாதுர்யமான அரசியலால் அன்றைய டெல்லி காங்கிரஸ் சமாளித்து மத்தியில் கூட்டாச்சி ,

மாநிலத்தில் சுயாட்சி என்று அந்த ஐந்து ஆண்டு ஆட்சி யை நடத்தினார். 




காங்கிரஸ் இல்லாவிட்டாலும் அன்று பாமக ,கம்யூனிஸ்ட் வை வைத்து சமாளித்து கொண்டு இருப்பார் என்பது வேறு விஷயம்.

வரலாறு தொடருமா ? 

2024 இல் கட்சி ஆரம்பித்து உள்ளார் நடிகர் விஜய். அந்த கட்சி எதிர் கொள்ள உள்ள முதல் சட்டமசபை தேர்தல் 2026.

விஜயகாந்த் வருகை 2006 சட்டசபை தேர்தலில் எதிரொலித்தது அதே போலவே திரு.விஜய் வருகை  2026 இல் சட்டசபை தேர்தலில் 

எதிரொலிக்குமா என்பது #TVK கட்சி யின் செயல்பாடு பொறுத்து அமையும். வாழ்த்துக்கள் விஜய்.


#தமிழகவெற்றிகழகம் 

#விஜய் #TVK #தவெக

#DMK #ADMK

திங்கள், 22 ஜனவரி, 2024

ராமரும் , முருகனும் !!

 இன்று (22-01-2024) அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை அலுவலக நண்பர் ஒருவருடன் Mobile பார்த்து கொண்டு இருந்தோம். விழாவை பார்த்து கொண்டிருக்கும் போதே அவரை அறியாமல் அவர் கண்களில் கண்ணீர் வந்தது , அவரை தேற்றினேன் பிறகு சகஜ நிலைக்கு திரும்பினார். பிறகு அவரிடம் நான் கூறினேன்.



நான் பல முறை எங்கள் ஊர் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமியை வணங்குகையில் என்னை அறியாமல் சில நேரங்களில் கண்ணீர் சிந்தியது உண்டு , ஆனால் இன்று சக்கரவர்த்தி திருமகன் ஸ்ரீ ராமரை கண்ட பொழுது அந்த மாதிரியான உணர்ச்சி மிக்க வழிபாடு இல்லையே என அவரிடம் கூற அலுவலக நண்பர் (North Indian) உங்களுக்கு இங்கே


நிறைய கடவுள் ,  கோயில்கள் உள்ளது , சென்னையில் மட்டுமே இவ்வளவு கோயில் நீங்கள் கொடுத்த லிஸ்ட் நான் நினைத்து ஆச்சரியபட்டுள்ளேன். எங்கள்  பகுதியில் அப்படி அல்ல ஒன்று சிவன் இல்லையேல் ராமர் மட்டும் தான் என்றார் , அங்கே உங்கள் ஊரில் உள்ளது போல கோயில்கள் இல்லை மிகவும் கம்மியே ,



அவரை புரிந்து கொண்டேன்.சில மணி நேரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு வந்து விட்டார் ஆனால் அவர் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி சிலவற்றை நாம் புரிந்து கொள்ள முயற்சி க்க வேண்டும்இல்லை என்றால் கடந்து விட வேண்டும்.அதை விடுத்து எல்லாம் தெரிந்தது போல மற்றவர்கள் நம்பிக்கையை பகடி செய்வது அபத்தம்.


இவன்

ராஜா.க 



#RamMandirPranPrathistha

#RamLallaVirajman

#Rammandhir



வியாழன், 18 ஜனவரி, 2024

ஹாஸ்டலும் , பொங்கலும்

 இப்படி சொல்லலாம் , 

ஹாஸ்டல் னா எல்லா ஊர் காரர்களும் இருப்பாங்க எப்போதும் அமளி , துமளி யா இருக்கும் , கல கலன்னு இருக்கும் .ஏதாவது பண்டிகை க்கு எல்லாரும் அவங்க அவங்க சொந்த ஊர் க்கு போயிடுவாங்க. 


ஹாஸ்டல் சில பேர் இருக்க தான் செய்வாங்க , கொஞ்சம் அமைதி யா இருக்கும் , முதல் நாள் அட இது

நல்லா இருக்கே னு நினைக்க வைக்கும் ,கூட்டம் இல்லை ஆரவாரம் இல்லை என்று மகிழ்ச்சி படுத்தும். இரண்டாவது நாள் நல்லா போற மாதிரி இருக்கும். மூன்றாவது நாள் என்னப்பா ஆட்களே இல்லாமல் ஓரு மாதிரி இருக்கே என்று அங்கே இருப்பவர்களுக்கு வெறுமை ஏற்படும்.




அன்று இரவு ஊருக்கு சென்ற நபர்கள் வர தொடங்குவார்கள். நான்காவது நாள் ஊருக்கு சென்ற முக்கால்வாசி பேர் வந்து விடுவார்கள் , மறுபடியும் ஹாஸ்டல் தன் அடையாளத்திற்கு வந்து விடும்.வழக்கம் போல பரபரப்பாக இயங்க ஆரம்பித்து விடும். 

அந்த ஹாஸ்டல் தான் சிங்கார சென்னை தமிழ் நாட்டு மக்களுக்கு.#சென்னை Back to Normal ❤️ afte Pongal holidays.


இவன்

ராஜா.க