வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

சட்னி சாம்பார் திரைவிமர்சனம்

 தள்ளுவண்டி கடையில் ஹோட்டல்

நடத்துபவர் நாயகன் அந்த கடையில் இட்லி , தோசை என்று இருந்தாலும் அந்த ஹோட்டல் ஸ்பெஷல் சட்னி அதற்காகவே அந்த கடையில் கூட்டம் வருகிறது.அந்த தொகுதி MLA கூட வாங்கி செல்வார். அவர் நாயகனின் நண்பனும் கூட. 


அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்த நாயகன் அம்மா சொல்லி கொடுத்த

சட்னி செய்யும் secreat  சூட்சமத்தை யாருக்கும் சொல்லாமல் அவர் தான் சட்னி ரெடி செய்வார். அம்மாவும் இறந்த பிறகு ஒண்டி கட்டையாக கடையை நடத்தி வருகையில் அவரை நோக்கி புதியவர்கள் வருகிறார்கள் , வந்தவர்கள் அவரை கடத்தி செல்கிறார்கள்.


ஏன் கடத்துகிறார்கள் ? என்பதை முழுக்க , நகைச்சுவை யாக

சொல்லி சிரிக்க வும் வைக்கின்றனர்.ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு குடும்ப பாங்கான ,சின்ன சின்ன  துரோகம் & சோகம் 

நிறைய காமெடி எல்லாம் கலந்து ஒரு நல்ல வெப் சீரிஸ் சட்னி ,சாம்பார். யோகிபாபு பிரதான நாயகன்.இயக்குனர் ராதாமோகனின் மற்றோரு தரமான படைப்பு. 


இந்த அடி, தடி ஆக்சன் 

படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இரு குடும்ப வாழ்க்கை முறையை அழகாக காட்சி படுத்தி யுள்ளது இயக்குனர் லாவகம்.யோகிபாபு வின் நடிப்பு ரொம்ப யதார்த்தம். இதில் நடித்த அனைவரும் சிறப்பான அளவான நடிப்பு. ரிலாக்ஸ் குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம் உண்டு ருசிக்கலாம்

இந்த #சட்னிசாம்பார்


இவன்

ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக