ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

ராயன் திரை விமர்சனம்

 The Hero's Journey ன்னு ஓர் ஆங்கில படம் அதை மாதிரி ஒரு படம் தமிழில் "தேவர் மகன்" படத்தின் தொடக்கத்தில் Train லிருந்து ஆட்டத்துடன் ஊருக்குள் வரும் இளைஞன் படம் முடியும் போது அந்த ஊரை காத்து அதே train இல் சிறைக்கு செல்வார்.


இப்போ ஏன் இதை சொல்லறேன் னா , நேற்று நான் பார்த்த 

இந்த படத்தின் நடிகர் + இயக்குனர் திரு.தனுஷ் அது போன்றதொரு படத்தை கொடுக்க நினைத்துள்ளார் ? கொடுத்தாரா? பார்க்கலாம் ,உடன் பிறந்தவர்கள் 3 மூன்று பேர் நாயகனோடு சேர்த்து 4 பேர் ,ஒரு லாரியில் (வாழ்க்கை) பயணத்தை தொடங்கி ,பின் படம் முடியும் போதும் அடுத்த பயணம் தொடர்கிறார்கள்.


நம்மால் அவர்களுடன் பயணம் செய்ய முடிகிறதா ?என்று கேட்டால் இல்லை ,  என்று தோன்றியது.ஆம் அண்ணன் ,தம்பி இருவர் , தங்கை ஒருவர். இவர்கள்களுக்கிடேயே ஒரு பாசம் இருப்பது போல வைத்த காட்சிகள் எதுவும் மனதை தொடவில்லை ,அதனால் தான் என்னவோ அவர்கள் மீது கரிசனம் ஏற்படவில்லை.தனுஷ் ஏன் இவ்வளவு  இறுக்கமாக முகத்தை வைத்துள்ளார் ?



Strong ஆன திரைக்கதை இல்லை. அண்ணன்-தங்கை பாசம் மட்டிம் ஓரிரு இடங்களில் எட்டி பார்க்கிறது. படத்தின் அடுத்த பலவீனம் வில்லன் கதாபாத்திரங்கள். பேச்சு மட்டும் Build up மற்றபடி சொல்லி கொள்ளும் படி இல்லை.

தம்பி யும் அவன் காதலியும் தான் ஆறுதல் அதுவும் புட்டுகிச்சு.


ரகுமான் இசை ஆறுதல் , அதுவும் பின்னணி இசை யில். மொத்தத்தில் முதல் பாதி பார்த்த பின் இரண்டாம் பாதி கொஞ்சம் சுமாரா இருக்கும் என நினைத்தால் இரண்டாம் பாதி பார்த்த பின் 

முதல்  பாதி எவ்ளோ மேல் என நினைக்க தோன்றுகிறது.

#Raayan #Dhanush


இவன்

ராஜா.க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக