வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

அந்தகன் திரை விமர்சனம்

 கண் பார்வை தெரியாத கதாநாயகன்(பியோனா player)ஒரு நடிகரின் வீட்டுக்கு பியோனா வாசிக்க செல்கிறார் , அங்கே நடிகர் இறந்து கிடக்கிறார்.அங்கே என்ன நடந்தது?யார் கொலை செய்தார்கள்?

அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இந்த அந்தகன்.


நீண்ட இடைவெளிக்கு பிறகு   நாயகனாக பிரசாந்த் Smart ஆக உள்ளார்.ஆர்ப்பாட்டம் இல்லாத Introduction , action role இல்லாமல் படம் முழுவதும் படு யதார்த்தமாக நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் ,வந்து செல்கிறார். 



நடிகராக கார்த்திக் சிறிது நேரம் வந்து #90s காலகட்டதுக்கு அழைத்து செல்கிறார். அவரின் மனைவியாக சிம்ரன் மிக முக்கிய 

கதாப்பாத்திரம் ,முடிந்த வரை score செய்ய முயல்கிறார் என்னை பொறுத்தவரை வேறு யாராவது செய்திருந்தால் இன்னும் ரொம்ப நல்லா வந்துருக்கும். யோகிபாபு-ஊர்வசி- KS.Ravikumar காமெடி செய்ய முயன்று உள்ளனர் ஆனால் workout ஆகல. முதல் பாதி Thriller இரண்டாம் பாதி இழுவை. ஒரு முறை தாராளமாக பார்க்கலாம்


இவன்

ராஜா.க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக