மக்களாட்சியில் நம் பிரதிநிதிகளையும், அவர்களின் தலைவர்
தேர்வையும் புரிந்து கொள்ளலாம்.
நம் நாடு குடிமக்களுக்கு MLA, MP, வார்டு கவுன்சிலர் ஆகியோரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.
ஆனால், முதல்வர், பிரதமர், மேயர், பேரூராட்சி தலைவர் போன்ற தலைவர்களை தேர்ந்தெடுப்பது இவர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்) செய்யும் செயலாகும்.
இது ஒரு நேரடித் தேர்தல் மற்றும் மறைமுகத் தேர்தல் முறையாகப் பாரக்க முடியும். இதற்கு சாதகங்களும், பாதகங்களும் உள்ளன.
சமீபகால நடைமுறைகள்
1. பாஜக முறை:
2014, 2019, 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலும் திரு. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டி நடந்தது. இது இந்திய அரசியலில் புதிய வழக்கமாகக் கருதப்படுகிறது.
2. 2004 காங்கிரஸ் முறை:
காங்கிரஸ் கட்சியானது பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது.
மெஜாரிட்டி MPக்கள் திருமதி சோனியா காந்தி மீது ஆதரவு தெரிவித்தாலும், குடியரசு தலைவர் அனுமதி வழங்கவில்லை.
அதன் பிறகு திரு. மன்மோகன் சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3. தமிழக முறை:
தமிழக அரசியலில் திருமதி ஜெயலலிதா மற்றும் திரு. கருணாநிதி போன்ற தலைவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டனர்.
ஆனால், 2021இல் திரு. ஸ்டாலின் மற்றும் திரு. எடப்பாடி பழனிசாமி பெயர்களை முன்னிறுத்தி நேரடி போட்டி நடைபெற்றது.
மக்கள் பங்கு
குடிமக்கள் தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் உடையவர்கள்.
அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் மக்களின் தேர்வுக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
அம்சம்: தொங்கு சட்டசபை
தொங்கு சட்டசபை அமையும்போது, எதிர்பாராத முதல்வர் அல்லது பிரதமர் தேர்வு செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். இது மக்கள் நேரடியாக தீர்மானிக்காத முடிவுகளை உருவாக்குகிறது.
இந்த கட்டமைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் கருத்து என்ன?
#மக்களாட்சி #இந்தியா #தேர்தல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக