வெள்ளி, 14 ஜூன், 2024

Maharaja Movie Review



 சாமானியன் ஒருவன் தன் வீட்டில் திருடப்பட்ட ஒரு பொருளை மீட்டு தர வேண்டி காவல் நிலையம் செல்கிறான் , அங்கு அவன் எப்படி நடத்த படுகிறான் ,இழந்த பொருளை மீட்டு எடுத்தானா ? என்பதை சுவராஸ்யமான திரைக்கதை முடிச்சால் அவிழ்த்து நம் மனதை பதை பதைக்க வைக்கிறார் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன்.

முடி திருத்தம் செய்யும் கதை யின் நாயகன் விஜய்சேதுபதி எதிர்பாரா விபத்தில் மனைவி யை இழந்து மகளை கண்ணும் கருத்தாக வளர்க்கிறார். வீடுகளில்  திருடும் இரு திருடர்கள் வீட்டை கொள்ளையடித்து அங்குள்ள வர்களை கொலை செய்து தொடர் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் என்று இரு கதை களம் ,

நாயகன் வீட்டில் திருடர்கள் நுழைந்து என்ன செய்தார்கள் ? விளையாட்டு போட்டிக்கு வெளியூர் செல்லும் மகள் வீட்டிற்கு வந்தாளா ? என்பதை சிறப்பான திரைக்கதை யால் சில ட்விஸ்ட் களுடன் செமயான ஒரு த்ரில்லர் படம் .மக்கள் செல்வன் விஜய்சேதுபதி க்கு 50 வது படம் வாழ்த்துக்கள்.

விஜய்சேதுபதி இயக்குனரின் நாயகன் என மற்றோரு முறை நிருபித்து உள்ளார். அவர் தவிரநட்டி , சிங்கம் புலி , அனுராக் காஷ்யப் என சிறப்பான நடிகர்கள் சிறப்பான நடிப்பால் காலத்துக்கும் 

தமிழ் சினிமா வின் ஆக சிறந்த  படங்களில் ஒன்று 

இந்த படம் அமைந்துள்ளது #மகாராஜா #MahaRaja #MahaRaja

#Moviereview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக