உன்னை போல ஒருவன்
திருச்செந்தூர் கோயிலின் அழகிய சாயங்காலம். அந்த மாலையில் கோயிலின் வாசலில் திண்ணையில் அமர்ந்து, கடல் காற்றை ரசித்து கொண்டிருந்தேன். அந்த அமைதியான தருணத்தில், ஒரு இளம் தம்பி வரிசையாக அங்கிருந்து நடந்து வந்து,
"ஏலே! நல்ல இருக்குய்யா? பார்த்து ரொம்ப நாளாச்சே!" என்றான்.
அவனுடைய மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்ததும் நான் சற்று தயங்கினேன். "நல்லா இருக்கேன்... நீ யார்னு?" என்று கேட்க முனைந்தேன், ஆனால் நான் யாரென சொல்ல ஆரம்பிக்குமுன்பே அவன்,
"நீ வேற! போன முறை நீ என நினைத்து உங்க அண்ணனிடம் பேசினேன் .
அவரும் பொறுமையா கேட்டுட்டு ,
'நான் அவன் அண்ணன்'னு சொல்லிவிட்டார்.
காமெடியா போச்சு என்றான்.
அவன் சொன்ன காமெடிக்கு எனக்கும் சிரிப்பு வந்தது. இந்த முறை அவனை ஏமாற்ற வேண்டாமே என நினைத்து அவனுடன் பழக ஆரம்பித்தேன். எங்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்ததை அறிந்து, பள்ளி நாட்களைப் பற்றிப் பேசினோம். பழைய நினைவுகள் மீண்டும் பூத்தன. "சரி மச்சி, பிறகு பார்க்கலாம்!" என்று அசால்டாக விட்டு, தன் வழி சென்றான் அந்த தம்பி.
இந்த சம்பவத்தை என் தம்பியிடம் கூறினேன். அதற்கு அவர் சிரித்தபடியே,
"உன் நண்பர்கள் ஒன்னும் மிச்சமா இருக்க மாட்டாங்க! நம்ம ஊர்கோயிலுக்கு வந்த ஒருத்தன், உன் கூட படிச்சவன்னு நினைசகிறேன்
என்னை பார்த்து பேசிட்டு போனான்! அவன் நம்மை யாருன்னு தெரிஞ்சு கூட பேசல என்றார்.
இதனால் என்னவோ ஒரு குறைச்சல் இருந்தாலும், அன்பும் மகிழ்ச்சியும் கொண்ட இந்த சம்பவங்கள் வாழ்க்கையின் சிறு மகிழ்ச்சிகளை நம்மை நினைவூட்டுகின்றன.
வாழ்க்கையில் இவைகளை ரசிக்க தெரிந்தால், ஒவ்வொரு நாளும் ஒரு அற்புதமான நினைவாக மாறும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக