இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் –
நினைவில் நிற்கும் ஓர் அற்புத மனிதர்
முதன் முதலில் கே. பாலசந்தர் பற்றியும், அவர் இயக்கிய படங்களை என்னை அறிமுகம் செய்தது என் பெரியப்பா! பொதுவாக நடிகர்களுக்காக தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் போது, ஒரு இயக்குனருக்காகவும் ரசிகர்கள் அமைந்தது இவருக்கு தான்.
மேடை நாடகங்களில் பிரபலமடைந்த ஒரு நட்சத்திரத்தை சினிமா உலகிற்கு கொண்டு வந்தது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவரின் படங்களை முதல் முதலாக நான் பார்த்தது, முழுக்க முழுக்க நகைச்சுவை கொண்ட “பூவா தலையா.” இந்த படத்தில் காமெடிக்கு 100% கிராண்டி.
அதன்பிறகு நான் பார்த்த படம் “அரங்கேற்றம்.” இதில் காபரே டான்சர் பிரமிளா அறிமுகமாகினார். குடும்பப் பெண்ணின் துயரத்தை கண்ணீரோடு சொல்லியிருக்கும் படம். திரைக்கதை, வசனங்களில் கே.பாலசந்தர் காட்டிய நேர்த்தி கண்கலங்க வைக்கும். உதாரணமாக, “மறந்து போய்டுச்சு” என்பதற்குப் பதில் “மறத்து போய்டுச்சு” என்று கதாநாயகி சொல்வதை கவனிக்கலாம் இதன் பிறகு கதையின் போக்கு மாறும்.
சூப்பர் ஸ்டாரை வைத்து “தப்பு தாளங்கள்” உருவாக்கினார். 2002-ல் வந்த “ஆயுத எழுத்து” படத்தில் மோகன்லால்-சோடா பாட்டில் ஃபைட் போன்று, 30 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி ஸ்டைலாக அதை இந்த படத்தில் செய்து காட்டினார். “விலை மாது” கதாபாத்திரம், காதலிக்கும் ரவுடி ரஜினிகாந்த் என எதார்த்தமாக கதையை சொன்னார்.
நான் மிகவும் வியந்த மற்றொரு படம் “தாமரை நெஞ்சம்.” முக்கோணக் காதல் கதையை மிக சுவாரஸ்யமாக சொன்னார். நாகேஷின் கதாபாத்திரம் என்னை அறியாமல் திட்ட வைத்தது. கே.பி.யின் திரைக்கதை மேனக்கேட்டதின் மாபெரும் சாட்சியம் இது.
இன்றும் அடிக்கடி பார்க்கும் படம் “பாமா விஜயம்.” நகைச்சுவைக்கு 100% கிராண்டி. நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதைகள் இன்னும் பொருந்துகின்றன.
தமிழ் சினிமாவிற்கு ஏராளமான கலைஞர்களை உருவாக்கியவர் கே.பாலசந்தர். ரஹ்மான், கிரவாணி, ரஜினி, கமல், விவேக், லாரன்ஸ் மேலும் இயக்குனர் கள் வசந்த், சரண், சுரேஷ் கிருஷ்ணா,சமுத்திரக்கனி என பலர் அவரின் உருவாக்கங்கள்.
இன்று அவரின் நினைவு நாள். தமிழ்சினிமாவின் துரோணாச்சாரியார். அவரின் படைப்புகள் என்றும் அழியாதவை.
#KB_Balachandar #TamilCinema #LegendaryDirector #KBRemembered
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக