சனி, 18 ஜனவரி, 2025

குடும்ப உறவுகளும் கனவுகளும் இணையும் கதை - #FamilyPadam

 #FamilyPadam - குடும்பத்தோடு பார்க்க அழகான படம்

இன்றைய காலத்தில், ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கையை தங்களை மாதிரி வடிவமைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையை ஒரு அழகான குடும்ப பின்னணியில் அமைத்துக் கூறியிருக்கிறது #FamilyPadam.

கதை ஒரு விசித்திரமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அப்பா ஜிம் நடத்துகிறார், அம்மா எல்லாரையும் மனதார ஆதரிக்கிறாள். மூன்று மக்களில் ஒருவன் வக்கீல், ஒருவன் IT வேலையில் பிஸி, மூன்றாவவன் சினிமா டைரக்டர் ஆகும் கனவு காண்கிறான். இந்த வீட்டில் வக்கீலின் மனைவி, குழந்தை உட்பட எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.

இந்த மூன்றாவது பையன் டைரக்டர் ஆகும் பயணமே படம் முழுக்க நகைச்சுவையுடன், செண்டிமெண்ட் மாறி மாறி சுவாரஸ்யமாக நகர்கிறது. குடும்பத்துடன் ரசிக்கிற நல்ல பொழுதுபோக்கு படம்.

படத்தின் சிறப்பம்சங்கள்

1. விவேக் பிரசன்னாவின் கலக்கல் காமெடி

விவேக் பிரசன்னா அவர்களின் டயலாக் டெலிவரி, ஹாஸ்ய நேரம் என்று அசத்திப் போடுகிறார்கள். காமெடி காட்சிகளில் அவரின் வேற லெவல் எக்ஸ்பிரஷன்ஸ் கூடுதல் சுவை சேர்க்கிறது.

2. உணர்ச்சிகள் கவிழ்க்கும் காட்சிகள்

கதையின் நெடுவெளியில் வரும் செண்டிமெண்ட் டச் படத்துக்கு ஜொலிக்க வைத்திருக்கும் சிகப்பு நிறக் கல் மாதிரி. குறிப்பாக தாத்தா சொல்கிற ‘சினிமா ஏன் மூன்றாவது பையனுக்கு பிடிக்குது’ ன்னு விளக்குவது ஒவ்வொருவரின் மனசையும் தொடும்.

3. திருமாறன் டைரக்டரின் அசத்தல் டச்

கதை நகர்த்தும் விதம், ஒவ்வொரு காட்சியையும் எளிமையாக, ஆனால் செரியசாக, சொல்லும் டைரக்டரின் அசத்திய வேலை வெளிச்சமாக தெரிகிறது.

4. குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்

குடும்பம், உறவுகள், சிரிப்பு, உணர்ச்சி எல்லாத்தையும் சேர்த்து ஒரு அழகான கலவை. சுத்தமான சினிமா.

#FamilyPadam ஒரு நல்ல குடும்ப படமாக அனைவரையும் கவரும். உங்கள் கனவுகளை எதிர்பார்க்கும் போது குடும்பத்துடன் உள்ள தொடர்புகளையும் பறிக்காதீர்கள் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு.

இப்போதே Aha-யில் ஸ்ட்ரீம் செய்யலாம்! இந்த அழகான படத்தை மிஸ் செய்யாதீர்கள்.

விமர்சனம்: ராஜா K

#FamilyPadam

#TamilCinema

#OTTRelease

#AhaTamil

#ComedyDrama

#TamilFamilyMovie

#MovieReview

#TamilOTT

#VivekPrasanna

#Thirumaran

#TamilEntertainment

#Tami

lMovies2025

வியாழன், 16 ஜனவரி, 2025

பொங்கல் வாழ்த்து அட்டைகள்: நம் மழலை நினைவுகள்

சிறுவயதில் தீபாவளி என்றாலே சட்டென்று நினைவில் முளைக்கும் மத்தாப்புகள், பட்டாசுகளின் மகிழ்ச்சியை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. காலத்தினாலும், வயதினாலும் அது கொஞ்சம் குறைந்திருந்தாலும், அந்த ஈர்ப்பு முழுமையாக ஓய்ந்ததில்லை.

அதே போல், பொங்கல் என்றவுடன் மனதில் எழும் மகிழ்ச்சியின் நிறம் அடங்கிய நினைவுகள் “பொங்கல் வாழ்த்து அட்டைகள்”! பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன்பே இந்த அட்டைகளின் சீசன் ஆரம்பமாகி விடும்.

எங்கள் ஊரில் உள்ள அன்பு ஸ்டோர், வள்ளுவன் ஸ்டோர், லதா ஸ்டோர் போன்றவை இவற்றுக்கு புகழ் பெற்றவை. கடைகளின் வெளியே பெரிய பலகைகளில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளையும் பரப்பி வைத்து, விற்பனைக்கு வைக்கப்படும்.

அந்த அட்டைகள் மீது முத்தமிழ் உலகின் மொத்த நட்சத்திரங்களும் மலர்ந்து நிற்கும் – MGR தொடங்கி ரஜினி, கமல் என எல்லாரும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள். 50 பைசா முதல் 5 ரூபாய் வரை உள்ள விதவிதமான அட்டைகள், அக்காலத்தை கண்களுக்கு நிறைத்துவிடும்.

சிறுவயதில் நான் ரஜினி ரசிகன். எனது நண்பர்களுக்கு பெரும்பாலும் நான் கொடுப்பது ரஜினியின் பொங்கல் அட்டைகளே. அதே நேரத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகளை கொடுப்பதை தவறமாட்டேன். எனது குழந்தை மனம் அப்போதுதான் நடிப்பு பாணியை தொடங்கியிருக்கலாம்.

அட்டைகளின் மகிழ்ச்சி

நமக்கு மிகவும் பிடித்த, எதிர்பார்த்தவர்களிடமிருந்து வரும் வாழ்த்து அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை பெரிய increment letter கூட தர முடியாது. அப்போதெல்லாம் நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் கிடைத்தது என்ற சிறு போட்டியும் இருக்கும்.

அந்த நாள் vs இந்த நாள்

அந்த நாட்களில் மனமும் நேரமும் நிறைய இருந்தது; பணம் மட்டும் குறைவாக இருந்தது. இன்று பணம் அதிகமாக இருக்கிறது, ஆனால் மனமும் நேரமும் கிடைப்பது கடினம்.

சுஜாதா சொன்னது போல வாழ்க்கையில் rewind பட்டன் இருந்தால், அந்த மழலை நினைவுகளை மீண்டும் அனுபவித்துவிட மாட்டோமா!

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

என் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

மகிழ்ச்சியுடன்,

ராஜா.க

---

திங்கள், 13 ஜனவரி, 2025

MathaGajaRaja - லாஜிக் இல்ல, மாஜிக் தான் - பொங்கலுக்கு பக்கா விருந்து

 #MathaGajaRaja – செம கமர்ஷியல் தள்ளுபடி!

#SundarC சார் இன்னொரு பக்கா கமர்ஷியல் படம் எடுத்துட்டார்! எப்போதும் மாதிரி, லாஜிக்-கு இடம் இல்லை, மாஜிக்குக்கு மட்டும் இடம் தான்.

ஸ்டோரி ரெடி:

ஹீரோ வின் மாஸ் என்ட்ரி in பைக் , 

ஹீரோயின்-கிட்ட 

Love at First Sight 

ஹீரோவின் 3 பிரெண்ட்ஸ் களுக்கு பிரச்சனை.

ஹீரோவின் மாஸ் 

Problem solved 

கடைசியில்... சுபம்!

என்ன கொடுத்திருக்காங்க:

😂 #Santhanam-க்கு காமெடியின் கிங் பட்டம் போடலாம்.

Timing காமெடி வேற லெவல் 

💃 #Anjali & #Varalaxmi-கள் கலக்கலான கமர்ஷியல் ப்ரெஸன்ஸ்

🎶 #VijayAntony-யின் திக்குமுக்காடும் பாட்டுகள்

படத்தின் ஹைலைட்ஸ்:

முதல் பாதி பக்கா காமெடி, ரெண்டு டூயட் , ரொம்ப சுவாரஸ்யம்

இரண்டாம் பாதி வில்லன் என்ட்ரி, ஃபிரெண்ட்ஸுடன் காமெடி, செண்டிமென்ட், குத்து பாட்டு, ஃபைட்... 

கடைசி வரை கொஞ்சம் கூட bore அடிக்காது !

2013-ல் வர வேண்டிய படம் இப்போ 2025-ல் வந்தாலும், கமர்ஷியல் படம் எப்பவுமே டைம் பாஸ் தான்!

🎥 #SundarC சார் சார் கமர்ஷியல் சினிமா மாஸ்டர்-னு மீண்டும் நிரூபிச்சுட்டார்!

🎊 #MathaGajaRaja பக்கா பொங்கல் வெற்றிப்படம்!

#SanthanamComedy #PongalSpecial

#MassEntertainment

#mathakajaraja

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

பாட்ஷா: திரையுலக வரலாற்றை மாற்றிய 30 ஆண்டு சாதனை

 இது போல டிசம்பர் 12 

அன்று சூப்பர் ஸ்டார் பாட்ஷா திரைப்படம் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத படைப்பாக விளங்கும் 'பாட்ஷா' திரைப்படம், இன்று தனது 30வது ஆண்டு கொண்டாடுகிறது. 1995 ஜனவரி 12 அன்று வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான 'பாட்ஷா', ரஜினிகாந்தின் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்ற படங்களில் ஒன்றாகும். அவரது டான் கதாபாத்திரம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினிகாந்தின் நடிப்புக்கு சிறந்த நடிகர் விருதுகள் கிடைத்தன.

'பாட்ஷா' திரைப்படத்தின் பாடல்கள், இசையமைப்பாளர் தேவாவின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவானவை. 'நான் ஆட்டோக்காரன்' போன்ற பாடல்கள், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தன.

இந்த திரைப்படம், ரஜினிகாந்தின் நடிப்பில் மட்டுமன்றி, அவரது வசனங்களாலும் பிரபலமானது. "நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற வசனம், ரசிகர்களின் நினைவில் இன்றும் நிலைத்துள்ளது.

'பாட்ஷா' திரைப்படம், தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக இருந்து, பல படங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அதன் 30வது ஆண்டு நினைவுநாளில், இந்த படைப்பை மீண்டும் நினைவுகூர்வது, தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும், ரஜினிகாந்தின் சாதனைகளையும் பாராட்டும் விதமாகும்.

#Baashha #Rajinikanth #SuperstarRajinikanth #TamilCinema #30YearsOfBaashha #Thalaivar #Blockbuster #SureshKrissna #TamilMovies #ClassicFilm #DevotionalCinema #RajiniDialogues #Kollywood #Movie

Anniversary

வெள்ளி, 3 ஜனவரி, 2025

ரகுமானுடன் சந்திப்பு

 ரகுமானுடன் சந்திப்பு

சமீபத்தில் நான் என் குலதெய்வக் கோயிலான திருச்செந்தூர் அருகே உள்ள குன்றிமலை சாஸ்தா கோயிலுக்கு சென்றேன். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோயில் அழகாக புனரமைக்கப்பட்டிருந்தது. கோயிலின் அமைதியும் அதை சுற்றியுள்ள இயற்கையும் என்னைக் கவர்ந்தன. அங்கு நடந்த சன்னிதி சுற்றுப்பயணத்தின் போது, நான் எதிர்பாராத ஒரு விஷயத்தை சந்தித்தேன்—அதில் தான் அசந்தேன்!

எனக்கு எதிரே உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் AR ரகுமான் நின்றிருந்தார்! அவரது சாதாரணமான தோற்றமும் மெலிதான சிரிப்பும் எப்போதும் போல தனித்துவமாக இருந்தது. கோயிலின் புனரமைப்பு மற்றும் அதின் சுவடுகள் பற்றி அவருடன் பேச ஆரம்பித்தேன். அவர் கேட்டிருந்த வண்ணம் கேட்டு, நான் கூறிய விபரங்கள் அவரை ஆச்சர்யமடையச் செய்தது.

அவருடன் நடந்து கொண்டு கோயிலின் ஒவ்வொரு மூலையையும் பார்க்கும் போது, மனதில் ஒரு குறிக்கோள் வந்தது—"ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா?" என்று. அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, "இல்லை, பிரச்சனை இல்லை" என்று சம்மதித்தார். ஆனால் என் மொபைல் கையில் இல்லை என்பதை உணர்ந்ததும், அவரிடம் உதவி கேட்டேன்.

"சார், உங்க மொபைலில் செல்ஃபி எடுத்து எனக்கு அனுப்புவீங்களா?" என்றேன். அதற்கு அவர் சிரித்து, "உங்க வாட்ஸ்அப் நம்பரை கொடுக்க மாட்டீங்களா?" என்று பதில் சொன்னார். நாங்கள் ஒரு செல்ஃபி எடுத்தோம். அதற்கு பிறகு அவர் என்னோடு இன்னும் சில நிமிடங்கள் உற்சாகமாகப் பேசினார்.

ஆனால்… இந்த சம்பவம் நிஜமில்லை!

---

கனவுகளின் மர்மம்

கனவுகள் எப்போதும் ஒரு மர்மம்தான்! நம்மால் நினைத்து உணர முடியாத விஷயங்களை, சில நேரங்களில் கனவுகள் எளிதில் காட்சிப்படுத்தி விடுகின்றன. நாம் தூங்கும் போது தோன்றும், மறையும் கனவுகள் எப்போதும் வியப்பூட்டுபவை. சில கனவுகள் நம்மை முழுமையாக தன் பிடியில் சிக்கவைத்து மறக்க முடியாத அனுபவமாகிறது.

நேற்றைய கனவில் ரகுமான் சார் எனக்கு நேருக்கு நேர் பேசும் அனுபவம் ஒரு அதிசயமாகவே இருந்தது. இதை உண்மையில் வாழும் நாள் வந்தால் நிச்சயமாக அதை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்வேன்!

@arrahman

#Rahman 

#கனவுகள் #ரகுமானுடன்_சந்திப்பு #திருச்செந்தூர்

திங்கள், 30 டிசம்பர், 2024

உன்னை போல ஒருவன் (சிறு கதை )

 உன்னை போல ஒருவன்

திருச்செந்தூர் கோயிலின் அழகிய சாயங்காலம். அந்த மாலையில் கோயிலின் வாசலில் திண்ணையில் அமர்ந்து, கடல் காற்றை ரசித்து கொண்டிருந்தேன். அந்த அமைதியான தருணத்தில், ஒரு இளம் தம்பி வரிசையாக அங்கிருந்து நடந்து வந்து,

"ஏலே! நல்ல இருக்குய்யா? பார்த்து ரொம்ப நாளாச்சே!" என்றான்.

அவனுடைய மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்ததும் நான் சற்று தயங்கினேன். "நல்லா இருக்கேன்... நீ யார்னு?" என்று கேட்க முனைந்தேன், ஆனால் நான் யாரென சொல்ல ஆரம்பிக்குமுன்பே அவன்,

"நீ வேற! போன முறை நீ என நினைத்து உங்க அண்ணனிடம் பேசினேன் . 

அவரும் பொறுமையா கேட்டுட்டு ,

 'நான் அவன் அண்ணன்'னு சொல்லிவிட்டார்.  

காமெடியா போச்சு என்றான்.

அவன் சொன்ன காமெடிக்கு எனக்கும் சிரிப்பு வந்தது. இந்த முறை அவனை ஏமாற்ற வேண்டாமே என நினைத்து அவனுடன் பழக ஆரம்பித்தேன். எங்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்ததை அறிந்து, பள்ளி நாட்களைப் பற்றிப் பேசினோம். பழைய நினைவுகள் மீண்டும் பூத்தன. "சரி மச்சி, பிறகு பார்க்கலாம்!" என்று அசால்டாக விட்டு, தன் வழி சென்றான் அந்த தம்பி.

இந்த சம்பவத்தை என் தம்பியிடம் கூறினேன். அதற்கு அவர் சிரித்தபடியே,

"உன் நண்பர்கள் ஒன்னும் மிச்சமா இருக்க மாட்டாங்க! நம்ம ஊர்கோயிலுக்கு வந்த ஒருத்தன், உன் கூட படிச்சவன்னு நினைசகிறேன் 

என்னை பார்த்து பேசிட்டு போனான்! அவன் நம்மை யாருன்னு தெரிஞ்சு கூட பேசல என்றார்.

இதனால் என்னவோ ஒரு குறைச்சல் இருந்தாலும், அன்பும் மகிழ்ச்சியும் கொண்ட இந்த சம்பவங்கள் வாழ்க்கையின் சிறு மகிழ்ச்சிகளை நம்மை நினைவூட்டுகின்றன.

வாழ்க்கையில் இவைகளை ரசிக்க தெரிந்தால், ஒவ்வொரு நாளும் ஒரு அற்புதமான நினைவாக மாறும்!!!

சனி, 28 டிசம்பர், 2024

சுலோச்சனா முதலியார் பாலம்

 திருநெல்வேலி - பாளையங்கோட்டை: இரண்டு நகரங்களை பிரித்திருந்த ஆற்றைக் கடக்க, மக்களால் ஒரே வழி பரிசல் மட்டுமே! இதை மாற்ற, மக்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய ஒரு தனி நபர் தனது செல்வத்துடன் நேராக ஆங்கிலேய கலெக்டரின் முன்னால் போனார்.

கலெக்டர் கிண்டலாக, "உன் பணத்தை தண்ணீரில் போடு" என்றார்.

ஆனால் அவர் சொன்னதை, அந்த நபர் அப்படியே செய்தார். ஆனால், தண்ணீரில் பணம் போடவில்லை, ஆற்றின் மீது ஒரு உறுதியான பாலம் கட்டினார்!

அந்த புனித சேவைக்காக, அவரது பெயரையே அந்த பாலத்துக்கு சூட்டினர்:

"சுலோச்சனா முதலியார் பாலம்

!"

இன்று வரை இந்த பாலம் இரண்டு நகரங்களையும் இணைத்து மக்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதுவே ஒரு தனி மனிதரின் தன்னலமற்ற சேவைக்கு நாடகம் மாறிய நிஜம்! ❤️

#திருநெல்வேலி

#பாளையங்கோட்டை

#சுலோச்சனாமுதலியார்பாலம்

#பேரியல்

#தன்னலமற்றசேவை