வியாழன், 16 ஜனவரி, 2025

பொங்கல் வாழ்த்து அட்டைகள்: நம் மழலை நினைவுகள்

சிறுவயதில் தீபாவளி என்றாலே சட்டென்று நினைவில் முளைக்கும் மத்தாப்புகள், பட்டாசுகளின் மகிழ்ச்சியை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. காலத்தினாலும், வயதினாலும் அது கொஞ்சம் குறைந்திருந்தாலும், அந்த ஈர்ப்பு முழுமையாக ஓய்ந்ததில்லை.

அதே போல், பொங்கல் என்றவுடன் மனதில் எழும் மகிழ்ச்சியின் நிறம் அடங்கிய நினைவுகள் “பொங்கல் வாழ்த்து அட்டைகள்”! பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன்பே இந்த அட்டைகளின் சீசன் ஆரம்பமாகி விடும்.

எங்கள் ஊரில் உள்ள அன்பு ஸ்டோர், வள்ளுவன் ஸ்டோர், லதா ஸ்டோர் போன்றவை இவற்றுக்கு புகழ் பெற்றவை. கடைகளின் வெளியே பெரிய பலகைகளில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளையும் பரப்பி வைத்து, விற்பனைக்கு வைக்கப்படும்.

அந்த அட்டைகள் மீது முத்தமிழ் உலகின் மொத்த நட்சத்திரங்களும் மலர்ந்து நிற்கும் – MGR தொடங்கி ரஜினி, கமல் என எல்லாரும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள். 50 பைசா முதல் 5 ரூபாய் வரை உள்ள விதவிதமான அட்டைகள், அக்காலத்தை கண்களுக்கு நிறைத்துவிடும்.

சிறுவயதில் நான் ரஜினி ரசிகன். எனது நண்பர்களுக்கு பெரும்பாலும் நான் கொடுப்பது ரஜினியின் பொங்கல் அட்டைகளே. அதே நேரத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகளை கொடுப்பதை தவறமாட்டேன். எனது குழந்தை மனம் அப்போதுதான் நடிப்பு பாணியை தொடங்கியிருக்கலாம்.

அட்டைகளின் மகிழ்ச்சி

நமக்கு மிகவும் பிடித்த, எதிர்பார்த்தவர்களிடமிருந்து வரும் வாழ்த்து அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை பெரிய increment letter கூட தர முடியாது. அப்போதெல்லாம் நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் கிடைத்தது என்ற சிறு போட்டியும் இருக்கும்.

அந்த நாள் vs இந்த நாள்

அந்த நாட்களில் மனமும் நேரமும் நிறைய இருந்தது; பணம் மட்டும் குறைவாக இருந்தது. இன்று பணம் அதிகமாக இருக்கிறது, ஆனால் மனமும் நேரமும் கிடைப்பது கடினம்.

சுஜாதா சொன்னது போல வாழ்க்கையில் rewind பட்டன் இருந்தால், அந்த மழலை நினைவுகளை மீண்டும் அனுபவித்துவிட மாட்டோமா!

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

என் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

மகிழ்ச்சியுடன்,

ராஜா.க

---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக