திங்கள், 25 ஆகஸ்ட், 2025

Why Captain Vijayakanth Will Always Live in Our Hearts

 கேப்டன் விஜயகாந்த் CaptainVijayakanth

என் சிறு வயதில் தியேட்டர்ல போய் பார்த்த முதல் விஜயகாந்த் படம் சின்ன கவுண்டர். 

அந்த நினைவுகள் இன்னும் மனதில் பதிந்தே இருக்கின்றன.

Super Star ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இரு வித்தியாசமான ஆளுமைகளுக்கு நடுவில், தென்னக ரசிகர்களின் பேராதரவை தனியாகப் பெற்றவர் – நம்ம கேப்டன்.

சினிமாவில் கலரான கதாநாயகர்கள் கோலோச்சிய தருணத்தில் , கருப்பு தங்கமாக மதுரையிலிருந்து தெற்கே முழுவதும் ஒரு நாயகன் உருவானார்.

வைதேகி காத்திருந்தாள் படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. அந்த படத்தில் அவர் நடித்த விதமும், “ரசாத்தி உன்னை” பாடலும் – இன்னும் பல இழசுகள் முனுமுனுக்கும் பாட்டு.

அதன் பின் வந்த பல படங்கள் கேப்டனின் தனித்துவத்தை காட்டின. குறிப்பாக, அவரின் fight scenes-க்கு தனியே ரசிகர் பட்டாளம் இருந்தது. 

புலன் விசாரணை – அப்போது பாடல்களே இல்லாமல் வெற்றி பெற்ற படம் என்பதில் சினிமா வரலாற்றில் தனி இடம் பெற்றது.

100வது படம் box office-ல் சரியாக போகாது என்ற ஒரு ‘செண்டிமெண்ட்’ இருந்தது. அந்த மூடநம்பிக்கையை உடைத்தவர் விஜயகாந்த்.

அவரின் 100வது படம் கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அதன் பின் தான் ரசிகர்கள் அவரை செல்லமாக “கேப்டன்” என்று அழைக்க ஆரம்பித்தனர்.

அந்த தருணத்திலிருந்து தமிழகம் முழுக்க அவர் ரசிகர்களின் பேரரசு ஆச்சரியமாக வளர்ந்தது.

அந்த காலத்தில் வந்த 

சின்ன கவுண்டர் பாட்டுகளும், சண்டை காட்சிகளும், உரையாடல்களும் – இன்னும் பட்டி தொட்டி repeat ஆகிக் கொண்டே இருக்கின்றன.

இந்த வெற்றிகள் சூப்பர் ஸ்டாரையும் கவர்ந்தது. அதனால் தான் ரஜினிகாந்த், சின்ன கவுண்டர் இயக்குனர் R.V. உதயகுமாரிடம் “நானும் உங்க படம் பண்ணணும்” என்று கூறி, பிறகு வந்தது எஜமான்.

செந்தில்-கவுண்டமணி காமெடி, செண்டிமெண்ட், பாடல்கள் – அத்தனை பேருக்கும் பிடித்த பக்கா கமர்ஷியல் படம்.

விஜயகாந்த் – P.வாசு காம்போவில் வந்த பொன்மனைசெம்மல் ஒரு முத்திரை பதித்த படம். அண்ணன்-தம்பி-தங்கை பாசத்தோடு, இளையராஜாவின் இசை – இன்னும் கேட்க bore ஆகாதவை. “பொட்டு வைச்ச தங்க குடம்” பாடல் இன்றும் trending-ல் தான்.

பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களுடன் போட்டியிட்டும், இயக்குனர் ஷங்கரின் முதல்வன், தாஜ்மஹால் போன்ற படங்களோடு, கேப்டனின் கண்ணுப்பட போகுதய்யா தீபாவளியில் வெளியானது.

B & C செண்டர்களில் சொல்லி வைத்த மாதிரி ஹிட்டு அடிச்சது. சிம்ரனுடன் நடித்த மூக்குத்தி முத்தழகு – எப்போதுமே favourite ❤️

அதன்பின், ஆளவந்தான், ஷாஜகான், நந்தா படங்களோடு தீபாவளியில் போட்டியிட்ட தவசி. அந்த நாள் வின்னர் யாருன்னா – கேப்டன்தான். பிரதியுஷாவுடன் அவர் ஆடிய பாடல், ரசிகர்களுக்கே அந்த படம் நினைவு வர காரணம்.

ஆனா என்னோட மனசுக்குள் special இடம் பிடிச்ச படம் வல்லரசு.

அதில் வரும் காவிரி நீர் காட்சி மறக்க முடியாதது.

“சென்னைக்கே வர்றது, தமிழ்நாட்டுக்கு காவிரி தரக்கூடாது”னு பாராளுமன்றத்தில் சொன்ன MP. அவரை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் கேப்டன்.

கடைசியில் அந்த MP, “உன் ஒருவனுக்காவது காவிரி தண்ணீர் தரச் சொல்றேன்”னு சொல்வது – காமெடியா இருந்தாலும் goosebumps தரும் dialogue. தியேட்டர்ல கைகள் தட்ட வைக்க வைத்த iconic scene அது.

இன்று ஆகஸ்ட் 25. கேப்டனின் பிறந்த நாள்.

இன்று அவர் நம்மோடு இல்லை. ஆனாலும், அவரது படங்களும், ரசிகர்களின் அன்பும், அவர் விட்டுச்சென்ற நினைவுகளும் – எப்போதுமே நம்மோடு இருக்கும்.

🙏 என்றும் நினைவில் – கேப்டன் விஜயகாந்த்

#HBDVijayakanth 

#Vijayakanth73 #கேப்டன்விஜயகாந்த்

By

Raja K.S

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக