கூலி – ஒரு ரஜினி ரசிகனின் எதிர்பார்ப்பு!
தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் அல்ல, இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் புதிய படம் ‘கூலி’, 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
ஒரு ரசிகனாக, என் சிறு வயதிலிருந்தே இன்று வரை அவரை மனதார நேசிக்கிறேன். அவரைப் பற்றிய செண்டிமென்ட்கள் எனக்குள்ளும் நிறைய. அவரது வெற்றிப் பாதையில் சிறு சிறு விஷயங்களும் ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமானதாக மாறிவிடுகிறது.
ரஜினி படங்கள் மற்றும் "ஒரு எழுத்து" செண்டிமென்ட்
தமிழ் சினிமாவுக்கு செண்டிமென்ட் அத்தியாவசியம். ரஜினி சினிமாவுக்கும் அது கூடுதலாகவே பொருந்துகிறது. ஆனால், இதில் ஒரு தனிச்சிறப்பு உள்ளது — ரஜினியின் வெற்றிப்படங்கள் பெரும்பாலும் ஒற்றை எழுத்து தலைப்புகள் கொண்டவையாகவே இருக்கின்றன.
📌 உதாரணங்கள்:
முத்து
பாட்ஷா
படையப்பா
சிவாஜி
இவை அனைத்துமே blockbuster-களாக ரசிகர்களின் மனதில் நிறைந்தவை.
பட தலைப்பின் செண்டிமென்ட் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் "அருணாச்சலம்".
அது முதலில் "அருணாசலம்" எனவே இருந்ததாகச் சொல்லப்படுகிறதாம். ஆனால், "ஒற்றை எழுத்து" ராசி சரியாக வரும் என்பதால், "அருணாச்சலம்" என மாற்றியதாம்!
இரட்டை எழுத்து – ஒரு சவால்?
பட தலைப்புகளில் இரண்டு எழுத்து அல்லது இழுத்துப் பெயர்கள் வெற்றியைப் பெறுவது சற்று சிரமம் என்பதே பலரின் நம்பிக்கை.
📉 அதற்கான சில உதாரணங்கள்:
சிவா
வீரா
பாபா
காலா
இந்தப் படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
2002-ல் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிய 'பாபா' படம் எதிர்பார்ப்பைத் தவிர்த்து ரசிகர்களுக்கு சிறிய வருத்தமாகவே அமைந்தது. அதுவும் இரண்டு எழுத்து தலைப்பே.
" கூலி " பழைய செண்டிமென்ட்டை உடைக்குமா?
இந்த முறையும் இரண்டு எழுத்து கொண்ட படம் தான் – ‘கூலி’.
ஆனால் ஒரு வித்தியாசம் — இந்த படம் ஆகஸ்ட் 15 அல்ல, ஆகஸ்ட் 14 அன்று தான் வெளியாகிறது.
அதாவது, ஒரு நாள் முன்னே! ஏன்?
ரசிகர்களிடையே நிலவி வரும் செண்டிமென்ட் மரபை ஒரு வகையில் மாற்றி பார்க்கும் முயற்சி என்று சொல்லலாம்.
எதிர்பார்ப்பு:
“இரண்டு எழுத்து கொண்ட ‘கூலி’ படம் வெற்றி பெற்று, அந்த பழைய செண்டிமென்ட்டை உடைக்குமா?”
ஒரு ரசிகனாக, எனக்கு நம்பிக்கை இருக்கு.
ஒரு சினிமாப் பைத்தியமாக, cinema history கூடக் கேட்குது —
இந்த முறை magic நடக்குமா? 🎬🔥"
#Coolie #Rajinikanth #RajiniSentiment #CoolieFromAug14 #ThalaivarVeriyan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக