நாமும், விநாயகரும்
சிறுவயதிலிருந்தே மற்ற கடவுள்களை விட பிள்ளையாருடனே நமக்கொரு நெருங்கிய தொடர்பு இருக்கும். காரணம் எங்க பார்த்தாலும் பிள்ளையார் கோயில் இருக்கும். அது ஏன்? எதற்கு? என்ற வரலாறு (STD) க்கு போகாமல், நேராக என் கல்லூரிக்கே போவோம்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளின் முகப்பில் பிள்ளையார் கோயில் இருக்கும். அதற்கு விதிவிலக்கல்ல என் கல்லூரியும்.
ஒரு முறை, செமஸ்டர் exam க்கு முந்தின நாள் மாலை, நண்பன் ஒருவன் "டேய் பிள்ளையார் கோயிலுக்கு போயிடுவோமா?" என்றான். "சரி போயிடுவோம்" என்றேன். அடுத்த நாள் பரீட்சை கேள்வித்தாள் கொஞ்சம் எளிமையாக இருந்தது. படிச்சதுக்கு சுமாரான நம்பிக்கை வந்தது – தேறிவிடுவோம்னு.
அப்போ மனசுக்குள் ஒரு அல்ப ஆசை வந்துச்சு – "அடுத்த exam க்கும் இப்படியே நடக்குமா?" என்று. சரி, முயற்சி பண்ணிப் பார்ப்போமா என்று, அடுத்த exam க்கு முந்தின நாளும் நண்பனோட சேர்ந்து பிள்ளையார் கோயிலுக்கு போயிட்டேன். மறுநாள் அதுவும் நல்லாப் போச்சு.
அந்த அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கிட்டேன் என்றால் –
எதிலாவது நம்பிக்கை வைக்கணும். அதே நேரத்தில் நம்ம கடமையையும் செய்யணும். அப்போ வெற்றி நிச்சயம் நமக்கே.
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்! 🎉🙏
#VinayagarChaturthi #HappyGaneshChaturthi
இவன்
ராஜா. க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக