மாம்பலம் — நினைவுகளால் நிரம்பிய ஒரு துவக்கம்.
மாம்பலம் — சென்னை நகரத்தின் ஒரு சிறிய மேடானாலும், எனக்குப் பெரிய நினைவுகளோடு நிறைந்தது.
சென்னையில் முதன்முதலாக என்னை வரவேற்ற இடம்.
என்னை மட்டும் இல்ல — இந்தியாவின் பல கோணங்களிலிருந்து வாழ்க்கையை கட்டிக்கொள்ள வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் முதல் தங்கும் முகமாய் இருந்த இடம்.
இங்கே இருக்கும் மேன்ஷன்கள் தான் ஆரம்பத்தில் நாங்கள் சொந்தமாகக் கூறிய முகவரி.
10x10 சதுர அடியில் நெருக்கமாய் வாழ்ந்தோம் — அந்த இடங்களில் நட்பு வளர்ந்தது, எதிர்காலத்துக்கான நம்பிக்கை உருவானது.
மேன்ஷன்கள், மெஸ் ஹோட்டல்கள், நடைபாதைக் கடைகள் — ஒவ்வொன்றும் ஒரு தொடக்கத்துக்கு இடம் கொடுத்தது.
வேடந்தாங்கல் பறவைகள் வந்துப் போவது போல், இங்கேயும் பல இளைஞர்கள் தங்கள் கனவுகளோடு வந்து, தங்கள் பாதையைத் தேடிச் செல்கிறார்கள்.
மாம்பலம் — இதுவும் ஒரு அடையாளம் தான்.
வாழ்க்கையை தொடங்கிய இடம் என்பதற்கான அடையாளம்.
---
இப்போ இருக்கற பசங்க யாரும் அதிகம் மேன்ஷன்ல தங்குற மாதிரி தெரியல. ப்ளாட் பிடிச்சு ஷேரிங் போயிடுறாங்க.
திருவல்லிக்கேணி காசி விநாயகா மெஸ் ஞாபகங்கள் அலைமோதுது...
---
இது ஒரு விதமான பொருளாதார வளர்ச்சி ன்னும் சொல்லலாம்.
மேலும் சௌகரியமாக வாழ்கின்ற இந்த இளந்தலைமுறைக்கு இந்த மேன்ஷன்கள் செட் ஆகாது.
Because இவர்கள் இதற்கு முன் இருந்த கல்லூரி hostel களிலும் அனைத்து விதமான சவுகரியமா இருந்துட்டு,
அதைவிட comfort இருக்கணும் என்று நினைப்பது தான் மனித இயல்பு.
நிறைய மாற்றங்கள் நடக்கிறது.
என்னோட அந்த காலத்தில் shopping என்றாலே T.Nagar தான் இருந்தது.
அந்த தெருவெங்கும் கூட்டம் நிரம்பி வழியும்.
ஒரு நாளில் அங்கே உள்ள கடைக்காரர் பேசும் போது தெரிந்து கொண்டேன் –
அவர்கள் இப்படி பேசும் அளவுக்கு நேரம் அமைந்ததே பெரிய விஷயம்.
"ஆம், கூட்டம் இப்போது முந்தி போல அல்ல" என்கிறார்.
அவருடன் பேசி விட்டு எப்போதும் busy இருக்கும் கனகா துர்கா ஆந்திரா மெஸ்க்கு சென்றேன்.
அடுத்த மேசைகள் காலியா இருந்தது.
இதற்கெல்லாம் ஞாயிறு மதியம் தான்.
அவரும் அதே பல்லவி பாடினார்.
நான் பல நேரங்களில் நினைப்பது –
IT இல் மாதம் சம்பளம் வாங்கும் நாம் நம்மை update ஆக்கி கொண்டே இருக்கணும்.
"Business நிரந்தரம், அவர்கள் நல்லா படியாக பார்த்து கொண்டு இருந்தால் போதும்" என்று நினைப்பது முற்றிலும் தவறு.
அவர்களும் update ஆகி கொண்டே இருக்கணும் போல.
இப்போ எல்லா இடங்களிலும் எல்லாமே கிடைக்கும் படி அமைந்துள்ளது நகர வாழ்க்கை.
அதற்கு ஏற்றபடி தொழில் அபிவிருத்தி செய்து கொண்டே ஆக கூடிய சூழ்நிலையில் உள்ளார்கள்.
நீங்க சொன்ன திருவல்லிக்கேணி மேன்ஷன்கள் அப்படியே காதல் மன்னன் படம் வந்த காலகட்டத்தில் அங்கே அதிக மேன்ஷன்கள் இருந்ததாகவும்,
அது அப்படியே மாம்பலம் (T. Nagar) நோக்கி move ஆனது என தெரிந்து கொண்டேன்.
---
மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று.
பயணிப்போம்!…
#ChennaiDiaries #மாம்பலம் #Nostalgia #CityLife #TamilBlog #UrbanChange #Memories #YouthJourney #HostelDays #TNGar #TamilWriter #LifeInChennai #MensonMemories
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக