நண்பர்களும்... புரிதலும்!
இன்று நண்பர்களுக்கிடையே நடக்கும் பல குழப்பங்களுக்கு,
இந்த "புரிதல்" இல்லாததே தான் முதல் காரணம் என்பது என் அவதானிப்பு.
அந்த புரிதல் இருந்திருந்தால், நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும் ,
என்றும் மனதில் அழியாத காட்சியாகவும் நினைவில் இருக்கும்.
அப்படி ஒரு அழகான, மற்றும் அழுத்தமான நினைவுகள், என் கல்லூரி காலத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் — இந்த "புரிதலுக்கான" சிறு சான்றுகள்!
சம்பவம் 1: சுவர் மீதி சிரிப்பும் – கீழே விழுந்த புரிதலும்
செல்வராஜ் , டேவிட் — இவர்கள் இருவரும் என் நெருக்கமான நண்பர்கள்.
கல்லூரி காலம் முதல் இன்று வரை!
யார் எவ்ளோ சொல்லியும் கேக்காமல்,
கல்லூரி Final year-ல்,
கல்லூரி விடுதியை விட்டு வெளியே தங்க முடிவெடுத்தோம்.
சிவகாசி அருகில் உள்ள சசி நகர் ஒரு அழகான வீடு.
அதுல ECE-dept 7 பேரும் , நாங்கள் CSE-யில் படித்த 3 பேரும் — மொத்தம் 10 பேர் சேர்ந்திருந்தோம்.
விடுதியில் கிளிகளாக இருந்த எங்களுக்கே ,
இந்த வீடு ரெக்கை கட்டி பறக்கும் பறவைகள் போல ஒரு உற்சாகத்தை தந்தது.
அந்த வீட்டை சுற்றி ஒரு compound சுவர் இருந்தது.
அதில் குட்டி சுவர் மேலே ஏறி, வெட்டி கதை பேசி மகிழ்ந்த நாட்கள்.
ஒருநாள் அந்த சுவரில் உட்கார்ந்திருந்தபோது,
ECE நண்பர்கள் ஏதோ serious-ஆ பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல,
செல்வாவும், டேவிடும் சிரிச்சாங்க.
அதைப் பார்த்த ஒரு நண்பன்,
உற்ற் முகத்துடன் ,
"நாங்க இங்க serious பேசுறோம்... உங்களுக்கு புரியாது!" என்று சொன்னான்.
நான் அந்த சுவரிலிருந்து கீழே குதித்தேன்.
அதே நேரத்தில், மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்த சத்தம்!
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து , புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.
அடுத்த 2 மணி நேரத்தில், சுறுக்கிய முகம் கொண்ட அந்த நண்பன் பேசியது ஒரு புறம்,
நான் கிளம்ப தயாரானது ஒரு புறம்.
ஆனால் என் வாயில் வாராமல், என்னுடன் வந்துவிட்ட நண்பர்கள் —
அதுவே எங்களுக்குள் இருந்த புரிதல்!
அந்த understanding, அந்த தருணத்தில் வெளிப்பட்டது.
சம்பவம் 2: A Section Class – Opposition Walkout!
8வது செமஸ்டர் என்றால், வகுப்புகள் குறைவா இருக்கும்.
வரும் மாணவர்களும் குறைவா இருப்பதால், A & B section மாணவர்கள் ஒன்றாக அமர்ந்திருப்போம்.
அந்த situation-ல் A section பேராசிரியர் class எடுத்தார்.
எங்களை பார்த்து,
"இது A section class… மற்றவர்கள் விருப்பமிருந்தால் இருக்கலாம்" என்றார்.
அதற்குப் பிறகு, அதே வார்த்தைகள், இரண்டாவது முறை பேராசிரியரிடமிருந்தும்.
அதற்கும் பரவாயில்லைன்னு இருந்தோம்.
ஆனா மூன்றாவது முறையும் அதே மாதிரி பேச ,
சிறிதும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்.
அவன் திரும்பிப் பார்ப்பதற்குள், நானும் , டேவிட்டும் எழுந்தோம்.
மூவரும் ஒரே சமயம்
opposition leader's போல class-லிருந்து வெளியேறினோம்!
எங்களை பார்த்து B பிரிவின் பெண்களும் வெளியேறினாங்க –
அந்த சின்ன scene, unforgettable and Mass 🔥😀
இந்த மாதிரியான "புரிதல்" நண்பர்களுக்குள்ள இருந்தால்,
நிறைய பிரச்சனைகள் இல்லாம , வாழ்க்கை இனிமையாகவும், அழகாகவும் செல்லும்.
Happy Friendship Day!
புரிதலுடன்,
ராஜா. க
#FriendshipDay2025
#FriendshipDay
#friendship