சனி, 23 செப்டம்பர், 2017

மகளிர் மட்டும் விமர்சனம்

மூன்று பள்ளி தோழிகளின் நட்பு  சிறு தவறால் (அன்றைய காலகட்டத்தில்) பிரிய நேர்கிறது. பிரிந்த தோழிகள் மறுபடியும் இணைந்து ரெக்கை கட்டி பறப்பது தான் கதை.

இந்த மூன்று புள்ளிகளையும் இணைக்கும் கோடாக 
இளைய "நிலா" ஜோதிகா.

ஊர்வசி,பானுப்ரியா,சரண்யா மூவரும் தம் கதாபாத்திரம் உணர்ந்து நம் வீட்டில் உள்ள பெண்களை பிரதிபலிக்கின்றனர்
குறிப்பாக சேச்சியின் நடிப்பு (ஊர்வசி) நடிப்பு இராட்சசி தான் போங்க.

பள்ளி பருவத்தில் தோழிகள் அடிக்கும் லூட்டி அருமை, பெண்களுக்குள் இருக்கும் நட்பை காட்டிய விதம் படு எதார்த்தம். பழைய / புதிய காட்சிகளை காட்டிய விதம் எடிட்டருக்கு ஒரு சபாஷ்.

பானுப்ரியா வை அவர் கணவர்  நடத்தும் விதம் வடக்கிள் வசிக்கும் பெண்களின் நிலையை ஒளிவுமறைவின்றி காட்டியுள்ளனர். ஒரு காட்சியில் பானுப்ரியாவிடம்  
பாட்டி இனிமேல் வரமாட்டிங்களா ? எப்படி தப்பிச்சு போனிங்க என்று கேட்கும் பொழுது பலத்த கைத்தட்டல்

உன் சோகத்திற்கு தினமும் நீ குடிக்கற நான் என்ன செய்ய என்று சரண்யா கேட்கும் கேள்வி படு அழுத்தம்

இயல்பான தன் துரு துரு நடிப்பால் கவர்கிறார் ஜோதிகா. புரட்சிகரமான செயல்களை செய்கின்ற கதாபாத்திரமாகவே வாழ்கிறார்

பெண்கள் ஆண்களுக்கு அடிமையல்ல என்பதை அழுத்தமான காட்சிகளின் மூலம் எடுத்துரைத்த இயக்குனர் பிரம்மாவின் படைப்பு
 "மகளிர் மட்டும்"  

ஆண்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய பாடம்

புதன், 20 செப்டம்பர், 2017

தமிழக அரசு பயன்படுத்துமா ???

அதிமுக 18 MLA க்கள் இடை நீக்கம் தொடர்பான வழக்கில்
இன்று திரு.தினகரன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் திரு. துஷ்யந்த் துபே முன் வைத்த வாதங்கள் தமிழக அரசு வழக்கறிஞரை மெளன சாமியாக்கிவிட்டது.

வெகுஜனம் மனதில் எழுகின்ற கேள்வியை தான் கேட்டார்.

1)பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் OPS அணி அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள் அவர்களை ஏன் இடைநீக்கம் செய்ய வில்லை எண்ணிக்கை 12 ஆட்சிக்கு ஆபத்து வராது என்பதலா ?
2)முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று தான் கூறினார்கள் இதில் கட்சி தாவல் தடை சட்டம் எப்படி பொருந்தும் ?
3)கர்நாடகாவில் எதியூரப்பா மேல் மீதுருந்த அதிருப்தியிலிருந்த MLAக்கள் சபாநாயகர் இடைநீக்கம் செல்லாது என்ற தீர்ப்பை மேற்கொள்காட்டினார்.
Master stroke என்னனா?
இங்குள்ள ஆட்சியாளர்கள் டெல்லியில்  இருக்கும் ஒரு நபர் சொல்படி கேட்கிறார்கள் என்றார் பாருங்கள்

திருடனுக்கு தேள் கொட்டியது போல்
இதில் BJP குறை சொல்லாதீர்கள் என்று அரசு வழக்கறிஞர் பால் போல் பொங்கி விட்டார்.

Dushyant Dave வாதம் பேரறிஞர்
திரு.அண்ணாவின் சொற்களை நினைவு படுத்தியது.

" சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் மெழுகுவர்த்தி  என்று "

இருந்தாலும் கணம் நீதிபதி அவர்கள்  அக்டோபர் 5 வரை நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தடை விதித்துள்ளார்.

அதாவது 2 வாரம் தமிழக அரசுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்..

தமிழக அரசு பயன்படுத்துமா ?

#ChennaiHighCourt #DushyantDave 🎉🎉🎉

திங்கள், 18 செப்டம்பர், 2017

இந்திய பிரதமருக்கு

மதிப்பிற்குறிய இந்திய பிரதமருக்கு,

நாட்டின் முதல் குடிமகன் 
குடியரசு தலைவரின் அண்மை வாக்குமூலமான இந்தி பேச தெரியாத மக்களை சமமாக மதிக்க வேண்டும் என்ற கூற்று படி இக்கடிதத்தை தமிழில் படித்து மதிக்க வேண்டுகிறேன்.

இந்தியாவின் 7வது அதிகமாக மக்கள் தொகை கொண்ட மாநிலம் தமிழ்நாடு (7கோடி) இதை ஏன் மேற்கொள்காட்டுகிறேன் என்றால்  இந்த மாநிலத்திற்கு ஒரு நிரந்தர ஆளுநரே கிடையாது.

மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் பிறந்த உங்களுக்கு மகாத்மா கூறிய கருத்து ஒன்றை கூற விரும்புகின்றேன். இந்தியாவின்  அடிநாதம் என்பது உள்ளாட்சி அமைப்பு என்று கூறினார். அவ் உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தேர்தல் கமிஷனும் தேர்தலை தள்ளி வைத்து கொண்டே போகிறது

எங்களது மாநில முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா உடல் நலம் குன்றி கடந்த டிசம்பர் 5,2016 இயற்கை எய்தினார். ஒரு MLA இறந்த ஆறு மாத காலத்துக்குள் அத்தொகுதிக்கு இடை தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு கூறுகிறது. இந்த நாள் வரை அத்தொகுதி மக்கள் மக்கள் பிரதிநிதி இல்லாமலே இருக்கின்றர்.

சரி வென்ற தொகுதி MLA க்கள் தங்கள் ஆட்சியை காப்பாற்றி கொள்ள  ரிசார்ட்களில் தங்கி ஒய்வெடுக்கின்றர்
வருவாய் அளவில் 3வது இடத்தில் தன் பங்களிப்பை இந்தியாவிற்கு அளித்த  எம் மாநிலம் இன்று பொருளாதாரத்தில்  எந்த இடத்தில் உள்ளது என்பதே தெரியவில்லை

தங்களின் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஆதார் கார்டு,பண மதிப்பீடு நீக்கம்,சரக்கு சேவை வரி அனைத்திற்கும் ஒத்துழைத்த மக்கள் எம் மக்கள்

60 ஆண்டுகளாமாக தேசிய கட்சிகளை தவிர்த்து மாநில கட்சிகள் கோலாச்சிய எம் மாநிலத்திற்கு மத்திய அரசால்  கொடுக்க பட்ட தண்டனையா ? நான் மேற்கோள் காட்டிய பிரச்சனைகள் அனைத்தும்

என் தமிழ்நாடு எதற்கு வம்பு ?
என் தமிழகம் மறுபடியும் தலை நிமிறுமா ?

இப்படிக்கு
உங்களை போன்று நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கும் 
இந்தியன் 🙏🏻🙏🏻🙏🏻

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

எங்கே என் பழைய இந்தியா ??

எங்கே என் பழைய இந்தியா ??

வந்தாரை வாழ வைத்த என் இந்திய தேசம் இன்று ரோஹிங்யா இன மக்களை அனுமதிக்க மறுப்பது ஏன் ?

யார் இந்த் ரோஹிங்யா இன மக்கள் ?
மியான்மாரில் வசித்த சன்னி இன முஸ்லீம்களின் ஒரு பிரிவு.

புத்தரின் கொள்கைகளை கடுகளவு கூட புரிந்து கொள்ளாமல் அதற்கு நேரெதிரான வன்முறையை கையில் எடுத்த பெளத்தர்களின் வெறியாட்டத்தால் வீடு வாசல் இழந்து ,நடை பிணமாக நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்.

இஸ்லாமிய நாடுகள் சில கை விரிக்க சில ஆயிரம் நபர்களை அண்டை நாடான பங்களாதேஷ் ஏற்று கொண்டது.இதற்கு மேல் எங்களால் முடியாது என்று எல்லை கதவையும் மூடியாகிவிட்டது.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் திபெத்தியர்களையும்,பார்சிகளையும்   இரு கரம் கூப்பி  இன்முகத்துடன் வரவேற்ற  என் இந்தியா இன்று இம் மக்களை ஏற்க மறுத்ததுடன் வருபவர்களை நாடு கடத்துகின்றது. சட்டப்படி தான் எல்லாம் நடக்கின்றது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ
நீதித்துறைக்கு பதிலளித்து விட்டார்.

இந்தியாவின் அழகே பன்முகதன்மை கொண்ட மக்களை அரைவணைத்து சென்று ஜன நாயகத்தை பூத்து குலுங்க செய்வதே.

மத வெறியர்களால் அனைத்தையும் இழந்து நிற்கதியாக வரும் மக்களை இந்த நாடாவது (கடவுள்) காப்பாற்றாதா என்று ஏக்கத்துடன் வருபவர்களை திருப்பி அனுப்புவதான் அறமா ? இது தான் ராஜநியதி யா ?

நம் பாரத தேசம் என்று புகழ் போற்றுவோம் ? என்பது இப்பொழுது வெறும் பாடல் வரிகளே..

நம் போன்ற மக்களை வரவேற்கும் நாடு இந்தியா என்று ரோஹிங்யா மக்கள் நினைத்திருப்பார்கள் போலும்  அவர்களுக்கு தெரியவில்லை நாம் இருப்பது
" புதிய இந்தியாவில் "  என்று

இப்படிக்கு
 புதிய இந்தியன் 😭😭😭

திங்கள், 4 செப்டம்பர், 2017

என் ஆசிரியர்கள் 🙏🏻🙏🏻🙏🏻

என் முதல் ஆசிரியை என் அம்மா எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை  
மாற்றி ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து அன்னையாகவும்ஆசிரியையாகவும் மாறியவர்கள்.

நர்சரி பள்ளி தொடக்க பள்ளிகள் மீது பயம் களைந்து விருப்பத்துடன் பள்ளி செல்ல  காரணமானவர்கள் இருவர் திருமதி.செல்லம்மா , திருமதி.ஈஸ்வரி காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.  

இப்படி தமிழில் சரளமாக கட்டுரைகள எழுத காரணமான எனது தமிழ் ஆசிரியியை (ஹேமாவதி) , அறிவியலில் ஆர்வம் ஏற்பட திருமதி. ஜானகி டீச்சர்

வரலாற்றையும் , அரசியலையும் (civics ) வெறும் புத்தக பாடமாக போதிக்காமல் அதன் மேல் இன்று வரை ஈர்ப்பு குறையாமல் படிக்க உதவிய திருமதி.சாந்தா , வசந்தா டீச்சர்

ஒரு உதவாக்கரையை 
இன்று 
ஒரு உதவும்கரை ஆக்கி 
இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

September 5  
Radhakrishnan Birthday 

#TeachersDay 👩‍🏫  👨‍🏫 

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

சல்லிகளும் சல்லாபங்களும்...

சல்லிகளும் சல்லாபங்களும்..

சாமியார்கள் என்று சொன்னால்
Anti-Indian என்று ஆக்கிவிடுவார்கள் சில ஆர்வ கோளாறுகள். உங்களை பக்தாஸ் என்று சொல்லி அந்த வார்த்தையை சாமியார்கள் பெண்மையை கலங்கபடுத்துவது போல் கலங்க வைக்க விரும்பவில்லை.

இந்து மதத்தில் மட்டும் தான் இது போன்று நடக்கிறதா ? மற்ற பாதிரியார்களும்,மத குருமார்களும் பரிசுத்தமானவர்களா ?
பெண்ணின் அனுமதியின்றி அவளை தொட நினைக்கும் எந்த ஆடவனும் அவள் கணவன் உட்பட எவனும் தண்டனைக்கு உட்பட்டவர்களே.

80% இந்துக்கள் மக்கள் வாழும் நாட்டில் அந்த சமயத்தை சேர்ந்தவர்கள் எதாவது நல்லது செய்தாலும் தவறுகள் செய்தாலும் அது பெரியதாக காட்டப்படுவதும்,விமர்சிக்கபடுவதும் இயல்பே..

15 வயது பெண்ணை (2002 இல்) கற்பழித்தற்காக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கபட்டு தண்டனைக்காக காத்திருக்கிறார் ஹரியானாவை சேர்ந்த ராம்-ரஹீம் என்ற சாமியா(ரோ)??

குற்றம் நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது அதுவும் CBI சிறப்பு (special )நீதிமன்றம் இன்னும் உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்றால் அந்த பெண்ணின் பேரன் தீர்ப்புக்காக காத்திருக்காமல் வெட்கி தலை குணிந்து நிற்பான். இதிலிருந்தே தெரிகிறது நம் நீதிதுறையின் கட்டமைப்பு..

இதற்கு விடிவுகாலம் எப்பொழுது ? யார் தருவார் அதை ?
இரண்டாம் கேள்விக்கு விடை உள்ளது.
நீ தான் அதற்கு விடிவு தர வேண்டும். எப்படி ?
நம்மை விட இவர் உயர்ந்தவர் என்று உன்னை அடிமையாக நினைக்காதே, இவர் நம்மை விட தாழ்ந்தவர் என்று அவரை அடிமையாக்க நினைக்காதே.

இதற்கு படிப்பு மட்டும் போதாது நற்பண்பும் , பகுத்தறிவும் இன்றியமையாதது. நமக்கு எழும் பிரச்சனையை முடிந்தளவு நாமே முயன்ற அளவுக்கு முயற்சி செய்து முடிவுக்கு கொண்டு வருவது சால சிறந்தது இல்லையா முன்னோர்களிடம் கலந்துரையாடு,நட்புகளை உருவாக்கி கொள் கண்டிப்பாக விடை கிடைக்கிறதோ இல்லையோ மனம் ஒரு தெளிவு கிடைக்கும்.

அதை விடுத்து இந்த மாதிரி சல்லிகளிடம் சாமியா(ரோ) ரிடம் சிக்கினால் உன் வாழ்க்கை சின்ன பின்னமாவதோடு உன் சுற்றுவட்டமும் கலங்கப்படும்.

சிந்திப்போம்.....

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

பிஜேபி அன்றும் / இன்றும்

பிஜேபி என்ற கட்சியின் மீதிருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இன்று அமாவாசையான நாள்.

பிஜேபி என்ற கட்டுக்கோப்பான கட்சியை திரு.வாஜ்பாயிக்கு முன் / பின் இரண்டு வகையாக பிரிக்கலாம்

வாஜ்பாயின்  13 மாத கால ஆட்சியாகட்டும் அடுத்த 5 ஆண்டுகளாகட்டும் (1999-2004) சிறப்பாகவே ஆட்சி செய்தார் குறிப்பாக மாநில உரிமைகளில் பிராந்திய கட்சிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது உதாரணம் காஷ்மீர் மாநிலத்தை கையாண்ட விதம்

ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ் அனைத்து மாநிலங்களிலும் ஒன்று ஆட்சியை பிடிக்க வேண்டும் இல்லை ஆட்சியில் இருப்பவர்களிடத்தில் கூட்டணி ஏற்படுத்துதல் இல்லை கட்சியையே கபளிகரம் செய்தல் சபீபத்திய உதாரணம் தமிழ்நாடு

மத்திய அரசு நடுவண் அரசு போல் அல்லாமல் அதிமுக இரு அணிகளுக்கும் இடையில் நாட்டாமை செய்து கொண்டிருக்கிறது
திருமதி.சசிகலா (நல்லவரோ / கெட்டவரோ ) 122 MLA க்கள் கையொப்பம் இட்ட கடிதத்தை வாங்க இதே ஆளுநர் எப்படியெல்லாம் நாள் கடத்தினார் என்பது காலம் அறியும்
இன்று அதே ஆளுநர் காலையில் வருவாராம் மாலையில் அமைச்சரவை மாற்றமாம். மத்திய அரசுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று தன்னிலை விளக்கம் வேறு.. 

25 ஆண்டுகால கூட்டணி கட்சியான சிவசேனாவை நம்ப வைத்து கழுத்தறுத்தது

பீகாரில் ஐயக்கிய ஜனதாதளம் , கோவா,அருணாச்சல் பிரதேசம் என மேற்கொண்ட மாநிலங்களில் தோற்றும் ஆட்சியில் அமர்ந்திருப்பது ஜனநாயகத்திருக்கு விட்டிருக்கும் சவால்

மக்களின் முடிவையோ, ஜனநாயக மான்பையோ காற்றில் பறக்க விட்டு விட்டு ஆட்சியில் அமர வேண்டும் என்ற ஒரே தாரக மந்திரம். அதிகாரம் என்ற கருவி உதவியுடன் வெற்றி என்னும் பரிசை எடுப்பதில் பிஜேபி வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் 

இதுவும் மாறும்....