Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 நவம்பர், 2021

அண்ணாத்த திரைவிமர்சனம்

அண்ணன்-தங்கை பாசத்தை மையபடுத்தி வரும் தமிழ் படங்கள் பல , 

அதில் சில மணிமகுடமாக தமிழ் சினிமாவை அலங்கரிக்கும். அப்படி அலங்கரித்தாரா நம்  அண்ணாத்த.

எந்த எதிரிபார்ப்பும் இல்லாமல் சென்றதால் என்னவோ, ஏமாற்றம் அவ்வளவாக இல்லை. கதையின் நாயகன் காளையன் ஊரில் பெரிய தலைகட்டு, தாய் இல்லா தங்கையை வளர்க்கிறார் தாயாகவும் ,தந்தையாகவும்.  ஊரே மெச்சும் கல்யாணம் செய்ய துடிக்கிறார், அவரின் கனவு என்னவானது ?

அடி, தடி, ஆட்டம், பாட்டம், சிரிப்பு என காளையன் அதகளப்படுத்துகிறார் முதல் பாதியில்.

 பாசத்தை வெளிக்காட்டும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார் ரஜினி. 

முதல் பாதியில் வில்லனாக தன் பங்கை நிறைவாக செய்கிறார் பிரகாஷ் ராஜ். 

வசனங்கள் சில இடங்களில் உச்சு கொட்ட வைத்தாலும் பல இடங்களில் கூர்மையாக உள்ளது.

நியாயமும்,தைரியமும் இருந்தால் அந்த சாமியே பெண்ணுக்கு உதவுவார் என்கிறார் ரஜினி.

 கூறுவது ரஜினி என்பதாளா என்னவோ  பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது.

சூரி,குஷ்பு, மீனா , பாண்டியராஜன்,லிவிங்ஷ்டன் சத்யன், என அனைவரும் ரஜினியோடு வருவதால் சற்று சிரிக்கவும் வைக்கின்றனர்.வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகியாக அல்லாமல் கதையின் நாயகியாகவும் இரண்டாம் பாதி முழுவதும் வலம் வருகிறார் நயன் தாரா. 

"சார சார "  பாட்டு முணுமுணுக்க வைக்கிறது.

கீர்த்தி சுரேஷ் முதல் பாதி சிரித்தும், இரண்டாம் பாதி அழுதும் ஸ்கோர் செய்கிறார். நடிப்பில்.

இரண்டாம் பாதி முழுவதும் சண்டை காட்சிகள் வில்லன்கள் பலம் வேண்டும் தான் அதற்காக இவ்வளவு பலமா ? எவ்ளோ சண்டை காட்சிகள்.. காது கிழிகிறது.. இறுதியில் வில்லன்களை வதம் செய்து தங்கை கண்ணில் ஆனந்த கண்ணீர் வரவைக்கிறார் நம்ம அண்ணத்த.

தங்கை நினைக்கையில் அண்ணன் அருகில் இருப்பது போன்ற காட்சிகள்  அழகிய 

" ஹைகூ ".

இயக்குனர் சிவா விடமிருந்து இது போன்ற படங்கள் தான் கிடைக்கும், உலக சினிமாவை ரசிக்கும் ரசிகர்கள் ஒதுங்கி கொள்ளவும் உங்களுங்கான படம் இதுவல்ல.

 ரஜினி யை பிடித்தவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். குடும்பத்துடன் காணலாம் .

முதல் பாதி - Class

இரண்டாம் பாதி - Mass

A சென்டரை விட B & C சென்டர்களில் கலக்குவார் இந்த அண்ணாத்த.

கொசுறு : பாடம் பார்த்து விட்டு வெளியே வருகையில் குட்டி பையன் ஒருவன் நானும் என் தங்கையை அண்ணாத்த மாதிரி பார்த்துக்கொள்வேன் என்கிறான்.

இவண்

ராஜா.க

#Annaatthe #Rajini #Sun #Nayanthara

வியாழன், 28 அக்டோபர், 2021

Oh மணப்பெண்ணே

 செம ஜாலியா , ஜில்லுனு ஒரு காதல் கதையோடு வந்திருக்கிற படம் தான்

"ஓ மணப்பெண்ணே "

OTT வெளியீடு Hot Star 

நான் பொண்ணு, 

நான் பையன்,

நாயகன், நாயகி இருவரும் சந்திக்கும்  முதல் காட்சி அழகிய ஹைக்கூ. 

கதாநாயகன் ஹரீஷ் கல்யாண் 2K kid நடிக்கல , வாழ்ந்திருக்கார். நடிப்பு மிக யதார்த்தம் , அவர் கூடவே வரும் நண்பன் பல இடங்களில் சிரிப்பை வர வைக்கிறார்.

Engineering முடிச்சு அரியர்ஸ் எடுத்து வேலைக்கு முயற்சி செய்யும் நாயகன்.

மகன் வேலையை நம்பி தான் குடும்பம் இல்லை  ஆனாலும் மகனை வறுத்தெடுக்கும் Elite அப்பா வாக வேணு அரவிந்த், நடிப்பும் செம.

MBA கோல்டு மேடலிஸ்ட் வெளிநாடு செல்ல துடிக்கும் கதாநாயகி பிரியா பவானி சங்கர். இல்லை, இல்லை கல்யாணத்தை முடித்து தன் கடமையை நிறைவேற்ற துடிக்கும் நாயகியின் அப்பா.

இந்த இருவருக்குமான காதல் கை கூடியதா ??

காதல், Breakup, youtube channel, own business என பெரும்பாலான 2K kid's வாழ்க்கை, கனவுகளை திரையில் அழகான  திரைக்கதை யால் கோர்த்து ஜாலியாக ஒரு படம்.

நாயகனுக்கும் , நாயகிக்கும் காதல் காட்சிகள் இல்லாமல் காதல் வருவது தான் திரைக்கதையின் வெற்றி 

அதற்கு இயக்குனர் கார்த்திக் சுந்தர் க்கு ஒரு சபாஷ்.

2K kid இருந்திருக்க மாட்டோமா என 90's kid சற்று பொறாமை பட வைத்துள்ளது இந்த படம். பாடல்கள் கேட்கும் ரகம் !!!

இவண்

ராஜா.க

#ohmanapenne #reviews #movie #tamilmovie