Baba லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 நவம்பர், 2021

அண்ணாத்த திரைவிமர்சனம்

அண்ணன்-தங்கை பாசத்தை மையபடுத்தி வரும் தமிழ் படங்கள் பல , 

அதில் சில மணிமகுடமாக தமிழ் சினிமாவை அலங்கரிக்கும். அப்படி அலங்கரித்தாரா நம்  அண்ணாத்த.

எந்த எதிரிபார்ப்பும் இல்லாமல் சென்றதால் என்னவோ, ஏமாற்றம் அவ்வளவாக இல்லை. கதையின் நாயகன் காளையன் ஊரில் பெரிய தலைகட்டு, தாய் இல்லா தங்கையை வளர்க்கிறார் தாயாகவும் ,தந்தையாகவும்.  ஊரே மெச்சும் கல்யாணம் செய்ய துடிக்கிறார், அவரின் கனவு என்னவானது ?

அடி, தடி, ஆட்டம், பாட்டம், சிரிப்பு என காளையன் அதகளப்படுத்துகிறார் முதல் பாதியில்.

 பாசத்தை வெளிக்காட்டும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார் ரஜினி. 

முதல் பாதியில் வில்லனாக தன் பங்கை நிறைவாக செய்கிறார் பிரகாஷ் ராஜ். 

வசனங்கள் சில இடங்களில் உச்சு கொட்ட வைத்தாலும் பல இடங்களில் கூர்மையாக உள்ளது.

நியாயமும்,தைரியமும் இருந்தால் அந்த சாமியே பெண்ணுக்கு உதவுவார் என்கிறார் ரஜினி.

 கூறுவது ரஜினி என்பதாளா என்னவோ  பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது.

சூரி,குஷ்பு, மீனா , பாண்டியராஜன்,லிவிங்ஷ்டன் சத்யன், என அனைவரும் ரஜினியோடு வருவதால் சற்று சிரிக்கவும் வைக்கின்றனர்.வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகியாக அல்லாமல் கதையின் நாயகியாகவும் இரண்டாம் பாதி முழுவதும் வலம் வருகிறார் நயன் தாரா. 

"சார சார "  பாட்டு முணுமுணுக்க வைக்கிறது.

கீர்த்தி சுரேஷ் முதல் பாதி சிரித்தும், இரண்டாம் பாதி அழுதும் ஸ்கோர் செய்கிறார். நடிப்பில்.

இரண்டாம் பாதி முழுவதும் சண்டை காட்சிகள் வில்லன்கள் பலம் வேண்டும் தான் அதற்காக இவ்வளவு பலமா ? எவ்ளோ சண்டை காட்சிகள்.. காது கிழிகிறது.. இறுதியில் வில்லன்களை வதம் செய்து தங்கை கண்ணில் ஆனந்த கண்ணீர் வரவைக்கிறார் நம்ம அண்ணத்த.

தங்கை நினைக்கையில் அண்ணன் அருகில் இருப்பது போன்ற காட்சிகள்  அழகிய 

" ஹைகூ ".

இயக்குனர் சிவா விடமிருந்து இது போன்ற படங்கள் தான் கிடைக்கும், உலக சினிமாவை ரசிக்கும் ரசிகர்கள் ஒதுங்கி கொள்ளவும் உங்களுங்கான படம் இதுவல்ல.

 ரஜினி யை பிடித்தவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். குடும்பத்துடன் காணலாம் .

முதல் பாதி - Class

இரண்டாம் பாதி - Mass

A சென்டரை விட B & C சென்டர்களில் கலக்குவார் இந்த அண்ணாத்த.

கொசுறு : பாடம் பார்த்து விட்டு வெளியே வருகையில் குட்டி பையன் ஒருவன் நானும் என் தங்கையை அண்ணாத்த மாதிரி பார்த்துக்கொள்வேன் என்கிறான்.

இவண்

ராஜா.க

#Annaatthe #Rajini #Sun #Nayanthara

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

பாபாவும், சுதந்திர தினமும்

 இது போன்றதொரு சுதந்திர தினத்தில் காலை 6 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து ஒரு படையோடு புறப்பட்டு 7 மணிக்கெல்லாம் அருகில் உள்ள ஆத்தூர் க்கு சென்றாகிவிட்டோம்.

மூன்று ஆண்டுகள் இடைவெளி க்கு  பிறகு,   

மேலும் இது தான் கடைசி என்று ஒரு பேச்சு எதிர்பார்ப்பை மேலும் இரட்டிப்பாக்கியது. 

8 மணிக்கு முதல் காட்சி,

ஆத்தூர் பம்பையா திரை அரங்கம் முழுக்க படையப்பனின் படை !!! 

ஆம் இந்த முறை பாபா முத்திரை யுடன் பாபா, பாபா என்ற கூக்குரல் !!!

பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா ரஜினி யுடன் இணைகிறார், 

ரகுமான் இசை ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி யுடன் ரஜினி,

பூஜை போட்ட நாள் முதல் வெளிவரும் ஒவ்வொரு ஸ்டில் வேற லெவல் இருந்தது.

பாடல்களில் வழக்கமான அரசியல் வாடை 

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்" , 

"உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்,"

"கட்சிகளை பதவி களை நான் விரும்பமாட்டேன்,

காலத்தின் கட்டளை நான் மறுக்க மாட்டேன் "

என்று டாப் கியர் போட்டு ரசிகர்களின் BP யை ஏத்தியிருப்பார்

கவி பேரரசு.

படம் ரிலீஸ் நேரத்தில் பாமக கட்சி யுடன் மோதல் என பரபரப்பு க்கு பஞ்சம் இல்லாமல் ஆகஸ்ட் 15 ல் வெளியானது பாபா.

ரஜினியின்  அறிமுக காட்சி, ரகுமான் பின்னணி இசையில் பலத்த ஆரவாரம்.

 நொடி பொழுதில் ஆரவாரம் கலைந்தது ஆம் ரஜினி பூவ்வாவா  என்று டிப்புக்குமாரி  பாடலை பாடுவார் ரஜினியின் முதல் பாடல் செண்டிமெண்ட் பெரும்பாலும் spb தான் பதில் இந்த முறை சங்கர் மகாதேவன். 

ரஜினியின் பீடி பிடித்தல், சாராயம் குடித்தல், அந்த தலைப்பாகட்டு, பாபா கத்தி, பாபா counting, இப்போ ராமசாமி யிடம் பேசும் வசனம் என முதல் பாதி 

 நன்றாக தான் சென்றது.

இரண்டாம் பாதி  கொஞ்சம் இல்லை ரொம்ப மெதுவாக சென்றது இறுதியில் இமயமலை க்கு செல்லாமல் இங்கேயே இருப்பது போன்ற காட்சி. சுஜாதா தான் அன்னை செண்டிமெண்ட் வழக்கம் போல இந்த படமும் சுமார் ரகமே இதற்கு முன் (கொடி பறக்குது,உழைப்பாளி) 

படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு ரஜினி ரசிகர் குரல் , இந்த படம் ஓடாதது ஒரு வகையில் நல்லது தான் அப்போ தான் தலைவர் அடுத்த படம் நடிப்பார் என்று.

நினைவுகளுடன்

ராஜா.க

#Tamilcinema #Baba # IndependenceDay

#August #Rajini 