செப்டம்பர் 5 – ஆசிரியர்களுக்கு வணக்கம்
"ஒரு நல்ல ஆசிரியர் ஆயிரம் வாழ்வுகளை ஒளிரச் செய்ய முடியும்."
இன்று டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள். அவரின் நினைவாக, இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. #TeachersDay 👩🏫👨🏫
என் வாழ்க்கையில் ஆசான்கள் பலர் இருந்தாலும், என் முதல் ஆசிரியை – என் அம்மா.
எங்கள் வீட்டுக் கதவு தான் கரும்பலகை. ஒரு குவளை சாதம் கையில் வைத்து அன்னையாகவும், ஆசிரியையாகவும் மாறியவர்.
பள்ளி வாழ்க்கையின் தொடக்கத்தில், நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளி செல்லும் பயத்தை களைந்து, விருப்பத்துடன் பள்ளி செல்ல வழிவகுத்தவர்கள் – திருமதி. செல்லம்மா மற்றும் திருமதி. ஈஸ்வரி.
இவர்களுக்கு நான் வாழ்நாளெல்லாம் நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
தமிழில் சுலபமாகவும், சரளமாகவும் கட்டுரைகள் எழுதத் தூண்டியவர் – என் தமிழ் ஆசிரியை திருமதி. ஹேமாவதி.
அதேபோல், அறிவியலில் ஆர்வம் ஏற்படச் செய்தவர் – திருமதி. ஜானகி டீச்சர்.
வரலாற்றையும், அரசியலையும் வெறும் பாடப்புத்தகத்தில் இருக்கும் பாடங்களாக மட்டுமே அல்லாமல், வாழ்க்கை முழுவதும் ஈர்ப்புடன் கற்றுக்கொள்ள உதவியவர்கள் – திருமதி. சாந்தா மற்றும் திருமதி. வசந்தா.
கல்லூரியில் எனக்கு என்றும் உற்சாகம் தந்தவர் Professor ராஜ மன்னார்.
என் பெயரை எடுத்துக் கொண்டு, "இவர் ஒருநாள் பெரிய ஆள் ஆகுவார்" என்று வகுப்பில் பலமுறை கூறிய அந்த நம்பிக்கை இன்னும் எனக்கு ஊக்கமாக உள்ளது.
இதே கல்லூரி காலத்தில், என் நண்பன் டேவிட்.
கிளாஸ் முடிந்த பிறகும், அவன் தான் என்னை நிறைய கற்றுக் கொடுத்தான். அவன் எடுத்துக் கொடுத்த லெக்சர்ஸ் தான், எனக்கு degree வெற்றிகரமாக முடிக்க காரணமாயிற்று.
அதற்குப் பிறகு, நான் IT துறையில் சேர்ந்தபோது, என் முதல் டீம் லீட் டாஸ்.
அவர் வேலை மட்டும் இல்லாமல், work culture, discipline, personal–professional balance எல்லாத்தையும் கற்றுத் தந்தார்.
ஒரு உதவாக்கரையை இன்று உதவும்கரையாக மாற்றி,
இச்சமூகத்தில் என்னை ஒரு பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும் 🙏🏻🙏🏻🙏🏻
---
✨ நிறைவாக…
"அறிவை கற்றுத்தருபவர் ஆசிரியர்;
அறிவை வாழ்வில் பயன்படுத்தச் செய்வவர் மாமுனிவர்."
என் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு ஆசிரியரும் இந்த இரண்டையும் செய்தவர்கள்.
அவர்களுக்கு என்றும் என் மனமார்ந்த வணக்கம்.
#TeachersDay #SarvepalliRadhakrishnan #Gratitude #RespectTeachers #MyFirstTeacher #ThankYouTeachers #LifeLessons #Tribute
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக