செவ்வாய், 4 செப்டம்பர், 2018

அம்மா வின் கரும்பலகை

என் முதல் ஆசிரியை என் அம்மா எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை
மாற்றி ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து அன்னையாகவும் ,  ஆசிரியையாகவும் மாறியவள்.

நர்சரி பள்ளி, தொடக்க பள்ளிகள் மீது பயம் களைந்து விருப்பத்துடன் பள்ளி செல்ல  காரணமானவர்கள் இருவர் திருமதி.செல்லம்மா , திருமதி.ஈஸ்வரி காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.

இப்படி தமிழில் சரளமாக கட்டுரைகள எழுத காரணமான எனது தமிழ் ஆசிரியியை (ஹேமாவதி) , அறிவியலில் ஆர்வம் ஏற்பட திருமதி. ஜானகி டீச்சர்.

வரலாற்றையும் , அரசியலையும் (civics ) வெறும் புத்தக பாடமாக போதிக்காமல் அதன் மேல் இன்று வரை ஈர்ப்பு குறையாமல் படிக்க உதவிய திருமதி.சாந்தா , வசந்தா டீச்சர்.

ஒரு உதவாக்கரையை
இன்று
ஒரு உதவும்கரை ஆக்கி
இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

September 5
Radhakrishnan Birthday
#TeachersDay 👩‍🏫  👨‍🏫

சனி, 1 செப்டம்பர், 2018

சுவாதியும்,ரோகினியும்

சுவாதியால் ரோகிணிக்கு என்ன பயன் ?

கடலில் உள்ள சிப்பி என்னாலும் முத்துக்களை தர இயலாது; சுவாதி நட்சத்திரதிர நாளில் தான் சிப்பி தன் வாயை பிளந்து மழை நீரை உட்கொண்டு முத்தாக மாறும்; ஆதலால் சுவாதிக்கு எப்போதும் தன்னால் தான் முத்து உருவாகும் என்ற பெருமை

அத்தோடு நிற்காமல் தன் தோழியான ரோகினியை பகடி செய்யும், உனக்குரியா நாளில் யாது ஒரு சிறப்பும் இல்லையே என்று. மன வருத்தம் அடைந்த ரோகினி பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்தாள்.

பெண்கள் தவம் புரிய கூடாது என்பதால், மனமுருகிய பெருமாள் ரோகினியிடம் எதற்காக என கேட்க  நடந்தை கூற பெருமாள் ஒரு வரம் அளித்தார். என் அடுத்த அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தில்  
முத்து கிருஷ்ணனாகரோகினி நட்சத்திரத்தில் அவதரிக்கிறேன் என்றார்

மகிழ்ச்சி அடைந்தாள்ரோகிணி” 
அனைவருக்கும் கோகுல அஷ்டமி நல்வாழ்த்துகள் 😊

இவண்

ராஜா கண்ணன் 

புதன், 29 ஆகஸ்ட், 2018

ஜெய் மோடி சர்கார்

ஒரே வருடத்தில் 15₹ பெட்ரோல் விலை ஏற்றம்; சர்வதேத சந்தையில் கச்சா எண்ணெய் சரிவு;

கேட்டால் மன்மோகன் ஆட்சியில் ஏறவில்லையா ? என்பார்கள் ; ஒவ்வொரு வருடதையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்; படித்த பொருளாதார மேதையின் நிர்வாகமும்;  ஏழைத்தாயின் மகனின் நிர்வாகமும்.

இத்தனைக்கும் 2009 இல் உலகளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது அதில் சுமாராக பாதிப்படைந்தது இந்தியாவே ;

மாதிரி ஆதார பூர்வமான தகவல்களை சங்கிகளிடம் காட்டினால், இந்தியா இந்துக்களுக்கே என்று பிதற்றல் வேறு;

பாஜக வின் ஒரே சாதனை காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகம் பரவாயில்லை என்று நம்மை சிந்திக்க வைத்தது..

ஜெய் மோடி சர்கார் 🎤 அது தாண்டா
அதே தான் 🙏🏻🙏🏻🙏🏻

பிராயிசித்தம் தேடும்
ராஜா.க

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

ஏழைத்தாயின் மகள்

கேன்சரால் பாதிக்க பட்ட அம்மாவை காப்பாற்றும் “ஏழைத்தாயின் மகள்” நயன் தாரா.

தன் அன்னையை எப்படி காப்பாற்றினார் என்பதை அழகாகவும்,அழுத்தமாகவும்,
சொல்லி கேன்சரோடு, நம்மையும் வென்று விட்டார் இயக்குனர் நெல்சன்..

வடிவேலு இல்லாமல் தவித்த
தமிழ் சினிமாவை யோகி பாபு தன் வசபடுத்தியுள்ளார்,மனிதன் அறிமுக காட்சியில் தியேட்டரில் பலத்த விசில் சத்தம்.

அனைத்து கதாபாத்திரங்களும் சிரிப்பை வரவைக்கிறது குறிப்பாக டோனி நடிப்பு குபிர் ரகம்.  

பந்தா இல்லாமல் பாவாடை சட்டையில் பாந்தமாக நடித்து கொள்ளை கொள்கிறார் நயன்
 என்ற  #KolamaavuKokila

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

PaayrPremaKadhal

படத்தின் தலைப்பே எதை பற்றி என்று  இருப்பதால் அது தான் கதையே..

தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அடித்து,துவைத்த சப்ஜெட் காதல். இன்றளவும் திரைப்படமாக வருவகிறதென்றால் அதில் மாற்றம் என்றதொரு காரணி இருப்பதால் தான்..

கால மாற்றதிற்கு ஏற்ப மாறபடுவதில் “காதல்” ஒன்றும் விதிவிலக்கல்ல;

மிடில் க்ளாஸ் குடும்பம் அம்மா,அப்பா வளர்ப்பில் அன்பான பையன் கதையின் நாயகன்,
ஹைக்ளாஸ் குடும்பம் அப்பா வளர்ப்பில் மகள் இவர்களுக்கிடையே காதல்.. கைகூடியதா ?

Live In relationship மையமாக வைத்து  வந்திருக்கும் மற்றொரு தமிழ்படம். வழக்காமன தமிழ் சினிமாவில் கதாநாயகி செய்வதை இதில் கதாநாயகன் கன கச்சிதமாக செய்கிறான் (அழுவது ) முதற்
கொண்டு.

அவன் மேல் பரிதாபம் வருகிறது ஆனால் அவன் கேள்விகளுக்கு
கதாநாயகி அளிக்கும் பதில் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர முற்படுகிறார் இயக்குனர். இறுதியில் சுபமாக முடிகிறது.

ரைசா பின்னி பெடல் எடுக்கிறார். ஹரிஸ் நடிப்பு செம,நம்மில் ஒருவனாகவே இருக்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் இசையில் கேட்கும் படி பாடல் ஆனால் எதற்கு இத்தனை பாடல்கள் ?

எனக்கு கலாச்சாரம்  தான் முக்கியம் ஆண் என்றால் இப்படி பெண் தான் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறுபவர்களா ? தயவு
செய்து விலகி கொள்ளுங்கள் உங்களுக்கான படம் இல்லை இது.

இந்த கலாச்சாரம், கசமுசா எல்லாம் 5 வருட ஆட்சி மாற்றம் போல் மாறி கொண்டே இருக்கும், என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம்.

அந்த காலத்தில் இயக்குனர் பாலசந்தர் தன் திரைப்படங்களில் கடினமான கதை களத்தை தன் திரைக்கதையால் இலகுவாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்;அப்பொழுதும் கலாச்சார பேர்வழிகள் அவரை தூற்றுவார்களாம்;

இயக்குனர் இளன் தான் நினைத்ததில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சி படுத்தி இருக்கிறார் இறுதி காட்சி வரை.

ப்யார்,ப்ரேமா,காதலுடன்

ஞாயிறு, 29 ஜூலை, 2018

சாப்பிட போலாம் வாங்க

சாப்பிட போலாம் வாங்க

இந்த ஹோட்டலை பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது. இந்த ஹோட்டலை பற்றி FB இல் வீடியோவெல்லாம் வந்துள்ளது. சரி,ஒரு நாள் சென்று விடுவோம் என நினைத்திருந்தேன்.

அதற்கு ஏற்றாற் போல் காலம் அமைந்தது. சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் இரவு நேரங்களில் சாப்பாடு (meals) கிடைப்பது அரிது.இங்கு மதியம்,இரவு இரண்டு நேரங்களிலும் சாப்பாடு தான். எனக்கு இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிட மிகவும் பிடிக்கும்.

Google map உதவியுடன் அந்த இடத்திற்கும் சென்றாயிற்று
நன்றாக பசித்தது. ஹோட்டலினுள் நுழைந்தேன். சார் 7.30 PM மணிக்கு தான் ஆரம்பமாகும் 10 நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள் சூடான சாப்பாடு ரெடியாகிவிடும் என்றார் கனிவாக. உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்று மனதிற்குள் கூறிகொண்டேன்.

ஹோட்டலினுள் சிறு பூஜையெல்லாம் நடந்திருந்தது,சாம்பிராணி மணம் கமழ சரியான நேரத்தில் உள்ளே நுழைந்தோம். Limited meals 70₹ நெய் வேண்டும் என்றால் மேலும் 5₹ என்று அறிவிப்பு பலகை கூறியது. நெய் இல்லாமல் தான் நம்மால் சாப்பிட முடியாதே என்று இரண்டு டோக்கன்களை பெற்று கொண்டேன்.

வரிசையாக table இருந்தது ஒரு வரிசையில் தான் உட்கார வேண்டுமாம் (எங்கள் ஊர் பஜனை மடம் ஞாபகம்  தான் வந்தது). அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்லீப்பர் செல்கள்  போல் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை,இரண்டு வரிசை நிரம்பி ஆயிற்று.

சாதம்,ஒரு பொறியல்,ஒரு கூட்டு,
பருப்பு பொடி,நெய் அதை வைத்து முதல் ரவுண்டு, பிறகு சாம்பார் முறையே 
ரசம்,மோர் என்று மூன்று ரவுண்டு அப்பளம், ஊறுகாய் சகிதம் ஒரு full கட்டு. மனதும்,வயிறும் முழு திருப்தி.
சாப்பாடு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு  அட்சய பாத்திரம்.

உபரி தகவல் எப்போதும் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு இந்த சாப்பாடு வித்யாசமாகவும்,நன்றாகவும் இருக்கும்.என்றைக்காவது ஹோட்டலில் சாப்பிடனும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து கொள்ளவும்
(வீட்டு சாப்பாடு போல் உள்ளதால்

நன்றி மீண்டும் வருக 🙏🏻🙏🏻🙏🏻 என்றது 
காசி விநாயகா மெஸ்
திருவல்லிக்கேணி 

சுவையுடன்

ராஜா.

வெள்ளி, 13 ஜூலை, 2018

கள்ளி காட்டு கள்வரே !!!

முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசிவெற்றி
முதல் காதலில் தோற்றவனுக்கு அது 
தான் கடைசிதோல்வி

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின்அழகு
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின்அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

உந்தன் தமிழ் வரிகளால் எங்களை கடத்திய கள்ளரே !!! 
வேல் கம்பை விட கூர்மையானது உங்கள் பேனா (வின்) முனை..

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்,
தேசப்பற்று என அனைத்தையும் உங்கள்வைரவரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக.. 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர்வைரமுத்து 