ஞாயிறு, 18 ஜூன், 2023

வேலையும் , காபியும்

 தினமும் ஒரு பக்கம் எழுத வேண்டும் என்ற சிறு கொள்கையை இன்று முதல் கடைபிடிக்க உள்ளதால் , என் முதல் ஓரு பக்க உரை.

இரவு முழுவதும் அலுவலகத்தில் இருந்து வேலை பார்த்தேன் , இங்கு தான் இரவு தவிர உலகில் எங்கோ ஒரு மூலையில் விடிந்திருக்கும்.ஒரு படியாக வேலையை சிறப்பாக செய்து முடித்தோம் என்கிற சிறு மகிழ்ச்சி யுடன் அலுவலக் கேண்டின் க்குள் சென்றேன்.

அதிகாலை என்பதால் என்னவோ கலர் , கலர் இருக்கைகள் எதில் வேண்டுமானாலும் அமர்ந்து கொள் என்கிற தொனியில் என்னை பார்த்து புன்முறுவல் பூத்தது. தானியங்கியை தொட்டு உயிர் கொடுத்தேன். பில்டர் காபி தானே வேண்டும் என்பது போல மெனுவில் காபி க்கு முதல் மரியாதை கொடுக்க பட்டிருந்தது.

ஆர்டர் செய்தேன் ,  payment செய்கையில் புதிய இந்தியாவின்  டிஜிட்டல் முறை "உன் வங்கி server temporary not available என்று " புத்திக்கு எட்டும் படி எடுத்துரைத்தது. வழக்கமாக செல்லும் உணவகம் அந்த உரிமையாளர் பழைய இந்தியா வின் மனிதர் தான் ஆதலால் தான் என்னவோ பிறகு பணம் கொடுங்கள் என்று கூறி. 

பழைய இந்தியா பாணியில் பேப்பரில் காபி என எழுதி கொடுத்தார். பணத்தோடு , சில மனிதர்களையும் சம்பாதித்து உள்ளோம் என்று என்னை நானே ஆசுவாசப்படுத்தி கொண்டே நுரை ததும்ப கொடுத்த காஃபி யை  பருகி என் வயிற்று க்கு 8 மணி நேரம் கழித்து வேலை கொடுத்தேன்.

பின் அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி டூவிலர் பயணத்தை தொடங்கினேன் ,என்னப்பா ராஜா நேற்று இரவே வருவாய் என்று நினைத்தேன் காலையில் தான் வருகிறாய் என்று டூவீலர் என்னை கிண்டலாக கேட்டது. சாவியால் அதற்கு உயிர் கொடுத்து அதன் காதுகளை என் கையால் பிடித்து முறுக்கினேன் , டேய் வழக்கமாக மெதுவாக தானே செல்வாய் இன்று ஏன் வேகம் என டூவீலர் கேட்டது போல உணர்ந்தேன். 

உள்ளுணர்வு பெரும்பாலும் சரியாக தான் சொல்லும் அதனால் மெதுவாக வே சென்றேன் , ஒரு கட்டத்தில் இரண்டு வினாடிகள் என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.

சின்ன பயம் தொற்றி கொண்டது ,இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறையவே உள்ளது இப்போதே tired ஆனால் எப்படி என்று நினைத்து கொண்டு , பிறகு சற்று சுதாரித்து  மிகவும் மெதுவாக சென்று ஒரு டீ கடையில் சற்று நிறுத்தி முகத்தை தண்ணீரால் துடைத்து மற்றோரு காபி யை குடித்து சற்று இளைப்பாறினேன். சில பல ரூபாய் நோட்டுக்கள் என்றோ என் Bag இல் இருந்தது உதவியது.

தம்பி அண்ணனை பத்திரமா வீடு கொண்டு சேர்த்து விடு என்று டூவீலர் கூறினேன். வா , வா பார்த்துக்கலாம் என்று கூறி கொண்டு சற்று உற்சாக மாக பயணப்பட்டேன். ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். 

தொடர்ந்து எழுதுவோம்.

இவன்

ராஜா.க

செவ்வாய், 6 ஜூன், 2023

கார்கில் போரும் , ஷாஜகான் பாடலும்

 கவிஞர் #வைரமுத்து விஜய் நடித்த #ஷாஜஹான் படத்தில் 

காதல் ஒரு தனி கட்சி  கொடியேத்து எத்து

காதல் ஒரு வாக்குறுதி  நிறைவேத்து எத்து என ஒரு

பாடலில் 

இப்படி ஒரு வரி எழுதியிருப்பார்.

கார்கிலை வெற்றி கொண்டது

நம் பாரத படை அல்லவா

மெய் காதலை வெற்றி கொள்வது எங்கள் காவலர் படை அல்லவா என்று எழுதியிருப்பார்.

1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் #இந்தியா வெற்றி பெற்றது.#ஷாஜகான் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். 

வரலாற்று நிகழ்வுகளை தன் பாடலில் மறக்காமல் சேர்பவர் எங்கள் கள்ளி காட்டு கவிஞர். #வைரமுத்து

புதன், 24 மே, 2023

இந்தியாவும் , செங்கோலும் ,

இந்த செங்கோல் க்கு அழகான வரலாறு உள்ளது.

இந்திய நாட்டை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி (பிரிட்டிஷ்) காரர்கள் இந்தியா விற்கு சுதந்திரம் அளிக்க ஒப்பு கொண்டனர்.

இந்தியாவில் அப்போதைய உயரிய பதவி வைசிராய் அந்த பதவிக்குரியவர் மவுண்ட் பேட்டன் பிரபு ,அவர் கேட்கிறார் ? என்ன முறை ?

எப்படி சுதந்திரத்தை கொடுப்பது என கேட்க ? பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு தெரியவில்லை. திரு.நேரு 

மூதறிஞர் ராஜாஜி யை அழைக்கிறார் , விஷயத்தை கூறி என்ன முறை என கேட்க. ராஜாஜி கூறுகிறார் , ஒரு நாடு வெற்றி பெற்று அரசன் பதவி ஏற்கிறான் , என்றால் அந்த நாட்டின் அரசனுக்கு செங்கோல்

வழங்க வேண்டும். 

பிரிட்டிஷ் நம் நாட்டை விட்டு செல்கிறார் சுதந்திரம் அடைந்த நம் நாட்டின் அரசனுக்கு  செங்கோலை கொடுக்க வேண்டும் அதற்கு அவர் தேர்வு செய்தது தமிழகத்தில் இருந்த  ஆதினங்கள் , திருபதிங்கங்கள் முழங்க 

ஆதினங்கள் செங்கோலை நேருவிடம் கொடுத்தனர்.

இந்த செய்தி யை பார்த்ததும் நான் மேற்கூரிய செய்தி நினைவு க்கு வந்தது. 

இந்த முறையும் தமிழ் நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் அழைக்கப்பட்டு அவர்கள் கையால் செங்கோலை கொடுத்து வரலாற்றை பதிவு செய்வார்கள் என நம்புவோம். 

#தமிழகம் #பாரதம் #ParliamentBuilding #Modi

சனி, 13 மே, 2023

Happy Mother's Day ❤️❤️

 என் அம்மா , என் முதல் ஆசிரியை 🙏🙏

எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை

மாற்றி ,

ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து கொண்டு அன்னையாகவும் , ஆசிரியையாகவும் மாறி , மாறி அவதாரம் எடுத்தவர்.

பக்தியையும் ,பள்ளி பாடத்தையும் , வெறும் புத்தத்தை வைத்து போதிக்காமல் 

தான் உணர்ந்த அனுபவங்களை வைத்து மனதில் பதிய வைத்தவர்.

 ஒரு உதவாக்கரையை

இன்று

ஒரு உதவும்கரை ஆக்கி

இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அம்மா விற்கு என்றும் 

அன்புள்ள மகன்/மாணவன்.

#HappyMothersDay 

#MothersDay2023

#அம்மா

ஞாயிறு, 7 மே, 2023

தியேட்டரும் , கொள்கையும்

 நண்பர் ஒருவர் ஆலோசனை படி

முடிந்த வரை #Digital payment பண்ண கூடாது என்ற கொள்கை முடிவோடு இருக்கையில் நம்மை சோதிக்க சில தருணங்கள் ஏற்படும். அப்படி தியேட்டரில் நடந்த சம்பவம்.

தேர்வு தொடங்கும் முன் தேர்வு அறைக்கு செல்லும் மாணவனை போல, தியேட்டர் க்கும் முந்தி செல்வது வழக்கம்.

அப்படி தியேட்டர் வாசலில் நிற்கையில் Bro counter இல் Gpay இல்லையாம். 

GF ஓட படம் பார்க்க வந்துருக்கேன் டிக்கெட் க்கு  ஒரு 300₹ cash கொடுங்க நான் gpay பண்ணறேன் please , 

Me : சரி டிக்கெட் 300₹ ஓகே. தியேட்டர் கேண்டின் interval snacks க்கு என்ன பண்ணுவீங்க ? Bro: அங்கேயும் கிடையதா ?

Me: இந்த ஏரியா க்கு புதிதா ? #தாம்பரம் MR தியேட்டர் டிஜிட்டல் payment கிடையாதுனு உலகத்துக்கே தெரியுமே , 

Bro: ஓ.. அப்போ ஒரு 500₹ கொடுங்க me: 200₹ snacks பத்துமா pop corn 80₹ அப்புறம் cool drinks ice cream,

Bro: அப்போ ஒரு 700₹

 அப்படி கேளு. என்று கேட்டு விட்டு  cash கொடுத்தேன்.

Cash கொடுத்த பிற்பாடு , 

me: அது சரி , counter cash னு சொன்னதும் , இத்தனை பேர் இருக்கும் போது நேரா எங்கிட்ட வந்து கேட்டிங்களே எப்படி ? உங்க terror face cut பார்க்கும் போதே தெரியது அண்ணே நீங்க cash வைச்சுரூபிங்கனு 🤔

Me: சேட்டை hmm போ படத்தை பாரு. மொமெண்ட் கிச்சானாலே read more ..

#cashless #digital #cash #India  #economy #theatre 

வியாழன், 4 மே, 2023

நம்பிக்கை !!

 நம்பிக்கை: 

வழக்கமாக செல்லும் டீ கடைக்கு சென்று காபி கேட்டேன். மாஸ்டர் இல்லாததால் கடையின் ஓனரே காபி போட்டு கொடுத்தார். காபியை குடித்து கொண்டே இருக்கையில் ஓனர் என்னிடம் பேச தொடங்கினார். கடையை அப்படி இழுத்து முடி விட்டு போகிடலாம் என நினைக்கிறேன் என்றார். என்னாச்சு ஓனர் என்றேன் ?

காலை முதல் வியாபாரமே இல்லை கடுப்பா இருக்கு சார் என்றார். அட விடுங்க ஓனர் எல்லாம் சரியாகிவிடும் என்றேன். என்ன செய்ய என்று தெரியவில்லை என்றார்.

அது ஒரு மாலை பொழுது. நான் ஒனரிடம் #கடவுள் நம்பிக்கை இருக்கா என்றேன் ? இருக்கு சார் என்றார். சரி , சாயங்காலம் நேரம் நீங்கள் கடையில் வைத்துள்ள #கடவுள் படம் முன் உள்ள விளக்கு ஏற்றி  , ஊது பத்தி , சாம்பிராணி கொளுத்தி வைத்து மனதார கடவுளை கும்பிடுங்கள் கண்டிப்பாக வியாபாரம் நடக்கும் என்றேன். 

எப்படி சார் என்றார் ? அட #நம்பிக்கை தான் நம்பி செய்து பாருங்கள் என்றேன். முதல் நாள் செய்தார் , குறுப்பிட்டு சொல்லும் படி வியாபாரம் நடந்ததாம். முறையே அதை தொடர்ந்து செய்துள்ளார் போலும் , ஓரு வாரம் கழித்து அந்த கடைக்கு சென்றேன்.

 சார் , கை யை கொடுங்க என்றார் ? என்னாச்சு என்றேன் , சார் நீங்கள் சொன்னதை முதலில் நம்பவில்லை இருந்தாலும் நம்பிக்கை யை கை விடாமல் செய்து வந்தேன் இப்போது சாயங்காலத்துக்கு மேல்

நல்லா வியாபாரம் நடக்குது சார் , ரொம்ப நன்றி சார் என்றார். ஓனர் "நாமெல்லாம் ஒரே கன்ட்ரி (country)

நமக்கு எதுக்கு நன்றி" என்று கூறி வழக்கமான காபியை குடித்தேன்.

எப்படி சார் உங்களுக்கு இதெல்லாம் தெரியது என்றார் ? நம்பிக்கை தான் ஓனர் , எங்க கடையில் வியாபாரம் இல்லை என்றால் இதை தான்

செய்ய சொன்னார் எனக்கு தெரிந்த ஒரு நல விரும்பி , அதையே தான் உங்களுக்கு பரிந்துரைத்தேன் அவ்வளவு தான். 

நம் உழைப்பு மேல் வைக்கும் நம்பிக்கை யை ஓரு கடவுள் (சக்தி)மீதும் வைத்தால் பலன் இரடிப்பாக கிடைக்கும் என்றேன். கடவுளை நம்பினோர் கைவிட படார். முற்றும்.

#நம்பிக்கை #கடவுள் #உழைப்பு

சனி, 29 ஏப்ரல், 2023

பொன்னியின் செல்வன் - Part 2 என் பார்வையில்

 பொதுவாக எந்த படத்துக்கு தியேட்டர் க்கு போய் சென்றாலும் எதிர்பார்ப்பு இல்லாமல் தான் செல்வேன். சென்ற வாரம் பார்த்த தெய்வ மச்சான் வரை இது தொடர்கிறது. ஆதலால் ஏமாற்றம் இருக்காது , படம் பார்த்துபிடித்து விட்டால் மகிழ்ச்சி பிடிக்கவில்லை என்றால் இப்படி எடுத்திருந்தால் நல்லா இருக்குமோ என்று எனக்குள்ளோ , நண்பர்களிடத்திலோ பேசி கொள்வேன்.

 இந்த வாரம் சென்று பார்த்த படம் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் part 2 #PS2 இந்த படத்தின் முதல் பாகம் பிடித்திருந்தது.காரணம் , அமரர் கல்கியின் எழுத்தில் இருந்த நாவலை நான் படிக்க வில்லை. 

காரணம் அவரின் பார்த்திபன் கனவு.படித்திருக்கிறேன் ,

நாவல் தொடக்கும் முதல் அவரின் எழுத்துக்கள் அவரின் கதாபாத்திரத்தோடு ஒன்ற செய்து  என்னை ஒரு கற்பனை உலகத்துக்கு அழைத்து செல்லும். பார்த்திபன் கனவு நாவல் அப்படி ஓரு அனுபவத்தை தந்தது.அந்த நாவலை  நான் படமாக பார்த்த போது (ஜெமினி கணேசன் தான் கதாநாயகன்) சற்று ஏமாற்றம்.

காரணம் என் கற்பனையில் விரிந்திருந்த காட்சிகளும் நான் திரையில் பார்த்த காட்சிகளும் ஏனோ ஒன்ற வில்லை. நாவலில் படித்த பார்த்திபன் வீரமும் திரையில் அமரர் ஜெமினியின் வீர செயல்கள் என்னை கவரவில்லை. அதனால் தான் என்னவோ பொன்னியின் செல்வன் படிக்கவில்லை.

ஓரு விதத்தில் அதுவும் 

நல்லதாக அமைந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் படமாக பார்க்கும் போது மனம் கவர்ந்த இருவர் ஆதித்த கரிகாலன் (விக்ரமும்) , குந்தவை யும் (த்ரிஷா). விக்ரம் என்னும் நடிகனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றாக நடிக்கும் கதாப்பாத்திரம்.அந்த கண்களில் வீரம் ,கோபம்,ஏமாற்றம் ,கண்ணீர் , பாசம் , காதல் என்று அனைத்தும் இருக்கும். 

இரண்டாவது  த்ரிஷா வின் அரசியல் முடிச்சுகளும் , இளவரசி க்கு உண்டான நடை , உடை பாவனைகளும் முதல் பாகத்தில் ரசிக்க செய்தது. இத்தனை கதாபாத்திரத்தை வைத்து தொய்வில்லாத திரைக்கதை யால் முதல் பாகம் ரசிக்கும் படி அமைந்தது.

இரண்டாவது பாகம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றதால் என்னவோ ஏமாற்றம் ஏதும் இல்லை. மணிரத்னம் துக்கு கை வந்த கலை காதல் காட்சிகள் தன் திரைப்படத்தில் பதிவு செய்வது. அவரின் முதல் படம் முதல் OK கண்மணி , காற்று வெளியிடை வரை இது தொடர்ந்தது.இந்த படமும் விதிவிலக்கல்ல.

இரண்டாம் பாகத்தில் விக்ரம் - ஐஸ்வர்யா இருவர் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க பட்டுள்ளது. அவர்களுக்கிடையே மலரும் காதல் , பிரிவு , கண்டிப்பாக கண்ணீர் க்கு guarantee. ஒருவரை மனதார காதலித்து அவர்களோடு வாழ முடியாதவர்கள் அவர்கள் மடியில் தான் இறப்பார்களாம். இரு காதல்கள்.

இதற்கு உதாரணமாக இபபடத்தில் காட்சி படுத்த பட்டுள்ளது. விக்ரம் ஐஸ்வர்யா மடியிலும் , 

ஐஸ்வர்யா வின் தாய் ஊமை ராணி அவரின் காதலன் மடியில் தன் உயிரை விடுகிறார்கள். தான் ஒரு கருவி என்பதை நந்தினி உணர்வது அந்த முடிச்சு அவிழ்வது இயக்குனர் சாமார்த்யம். வந்திய தேவன் - த்ரிஷா காதல் காட்சி

ரொமான்ஸ் overloaded ❤️.

 வந்தியதேவனுக்கு இரண்டாம் பாகத்தில் பெரிய வேலை இல்லை. த்ரிஷா விற்கும் அப்படியே ஆனால் அழகு புதுமையாக வலம் வருகிறார். பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி சிறப்பாக செய்துள்ளார்.அந்த யானை காட்சி எதிர்பாரத heroism செம..பாண்டிய மண்ணில் பிறந்து வளர்ந்ததால் என்னவோ

 பாண்டியர்களின் தோல்வியை ஏற்று கொள்ள முடியவில்லை.

 இன்னும் கொஞ்சம் போராடி இருக்கலாம் என்று தோன வைத்துவிட்டார் மணிரத்னம் 😀 ரகுமான் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் பலமாக சேர்த்திருக்கலாம். விக்ரம்-ஜெயம்ரவி-த்ரிஷா மூவரும் பேசி கொள்ளும் காட்சி அழகிய ஹைகூ ❤️❤️ குடும்பதுடன் கண்டுகளிக்கலாம்.

#ps2 #ps2review #ponnienselvan #manirathnam #rahman #aathithakarikalan #aiwarya #thrisha 