ஞாயிறு, 12 மார்ச், 2017

மாநில கட்சிகளுக்கு அடித்த எச்சரிக்கை மணியா ??

சமீபகாலமாக இந்தியாவில் உத்திரபிரதேசம்,பஞ்சாப், மணிப்பூர்,மகாராஷ்ட்ரா, கர்நாடகா,ஹரியானா மாநிலங்களில் அந்த மாநிலத்தின் பிராந்திய கட்சிகள் பெரும் பின்னடைவை சந்திந்து வருவதோடு ஆட்சியையும் பறி கொடுத்துள்ளது.

"கழுதையும் தேர்தலில் ஜெயிக்கும் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் நின்றால்.. "என்று இருமாப்புடன் இருந்தவர்கள்,"நான் படுத்து கொண்டே
ஜெயிப்பேன்.. "என்ற சொன்ன திரு.காமராஜ் அவர்களுக்கு எதிராக களம் கண்டார் முதறிஞர் ராஜாஜி.

1967 ல் தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தீய தீர வேண்டும்  என்ற ஒற்ற கொள்கையுடன்  காங்கிரஸ் க்கு எதிராக  18 கட்சிகள் துணையுடன் மெகா கூட்டணி அமைத்தார் திரு.ராஜாஜி.
திரு. அண்ணாதுரை பேச்சு, திரு.கருணாநிதியின் தேர்தல் வியூகம் ,MGR இன் புகழ் என எல்லாம் சேர்ந்து திமுக கூட்டணி 179 இடங்களிலிலும் திமுக 137 இடங்களில் அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் அமர்த்தியது.

சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக ஒரு தேசிய கட்சியை ஆட்சியிலிருந்து இறக்கி ஒரு மாநில கட்சி அரியனை ஏறி திமுக அச்சாரமிட்டது.
இதனை தொடர்ந்து   ஆந்திரா,மகாராஷ்ட்ரா,பஞ்சாப்,
கர்நாடகா,மணிப்பூர்,காஷ்மீர்,பீகார்,மேற்கு வங்கம்,உபி வரை மாநில காட்சிகள் கோலாச்சியது, இதனால்
இந்த மாநிலங்களில் மொழி,கலாச்சாரம் தனித்துவம் பெற்று விளங்கியது.

தேசிய கட்சிகளின் வளர்ச்சியால் பிராந்திய மொழிகளான மராத்தி,ஒடியா,அஸ்ஸாமி,பீகாரி,
ஹரியான்வி,மைதிலி புறக்கணிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அழிந்தே போனது அங்கேயெல்லாம் இந்தியே பிராதான மொழியாக்க முயற்சிக்கப்பட்டு அதில் பாதி வெற்றியும் பெற்றது.

 அண்ணாதுரை,கலைஞர்,ஜெயா,
மம்தா, பிரகாஷ் சிங் பாதல்,
பால் தாக்ரே,ஓமர் போன்ற வலுவான தலைவர்கள் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளததால் தங்கள் மாநில உரிமைகள் ஒரளவு காத்துவந்தனர்.

இதே போன்று இன்றைய  தலைவர்கள் தங்கள் மாநில கொள்கையையும், மாநில உரிமைகளையும் எப்படி தேசிய கட்சிகளிடமிருந்து பாதுகாக்க போகிறார்கள் இது மாநில  கட்சிகளுக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால்.

இந்தியா போன்ற பண்முகம் கொண்ட நாடுகளின் பெருமையே பல மொழி,பலதரப்பட்ட மக்கள், கலாச்சாரம் தான் இவற்றை பேணிக்காக்கும் கடமை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சம பங்குண்டு.

புதன், 8 மார்ச், 2017

மகளிர் தின வாழ்த்துக்கள்

நான்கு சுவரினுள் AC அறையில் அமர்ந்து
ஆண்களுக்கு நாங்கள் சமமானவர்கள் ஈடு இனையற்றவர்கள்
என்று வெட்டி பெண்ணியம்  பேசாமல் ,
பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்
சென்னை போன்ற நகரங்களில் எந்த முகவரியும் இன்றி
தான் படித்த படிபுக்கு ஏற்ற / ஏற்காத வேலையை தன் குடும்ப
சூழ்நிலை கருதி ஏற்று, பேருந்துகளிலும்,இரயில்களிலும்
படும் சிரமங்களை உள்ளுக்குள்ளேயே புழுங்கி கொண்டு,
அலுவலகத்தில் உள்ள அரசியல்களை அனுதினம் அனுசரித்து,
கவிதை,கற்பனை,காதல் என
இக்காலத்தில் பூக்கும் பூக்களை சூடாமல்
உதட்டில் மட்டும் புன்னகை சூட்டிக்கொண்டு,
 நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை விதைத்து
நடமாடும் பெண்களே,
நான் கண்ட வேலு நாச்சியார்களே
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
 🙏🏻🙏🏻🙏🏻
Happy Women's Day #HWD

சனி, 4 மார்ச், 2017

நான் ரசித்த டூயட்

ஒரு பாடலின் வெற்றிக்கு  இசை,பாடல் வரிகள்,பாடும் குரல் இந்த மூன்றும் இன்றியமையாதது இதில் ஒன்று சொதப்பினாலும் மற்ற இரண்டும் தன் மதிப்பிழந்துவிடுகிறது.

மேல் கூறிய மூன்றும் இணைந்த பாடல் டூயட் திரைப்படத்தில் இடம்பெறும் மெட்டு போடு பாடல்.

ரகுமானின் துள்ளலான இசையில் தன் trade mark நிறைய வாத்தியங்கள்  குறிப்பாக saxophone 🎷 இசையால் தனி கச்சேரியே  அரங்கேற்றியிருப்பார்.
இப்போது  headphone இல் கேட்பது போல் அல்லாமல் cassette உதவியால் இசை புயலை tapered cad உணர்ந்த தருணம்.
பாடல் வரிகளை சிதைக்காமல்
ரகுமானிசம் விளையாடிய காலம்.

மெட்டுக்கு ஏற்றார் போல் தன்
(வைர)முத்து களால் அலங்கரிதிருபார் கவிஞர். நீயா ? நானா ?
உன் மெட்டா , என் எழுத்துக்களா என்ற ரீதியில் ஆரோக்கியமான போட்டி அதில்
அழகாக  ஒளிந்திருக்கும்.
தமிழின் அழகு, பெருமை,  எதுகை,மோனையுடன் கூடிய
தன்னம்பிக்கை வரிகள் என தன் கொடியை பறக்க விட்டுருப்பார்.
"நம் பூமி மேல புது பார்வை கொள்க"
  "பாறைக்குள்
வேரை போல வெற்றி கொள்க"

இசையையும்,மெட்டையும் ஒரு சேர உள்வாங்கி குரலால் ஒரு தாயாக அப்பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார் திரு.பாலு (SPB). ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் முதல் முறை கேட்பது போல் உணர்வை தரும். காலையில் அலுவலகம் செல்கையில்  இந்த பாடலை கேட்கும் பொழுது ஒரு ஊக்கமும் , உற்சாகமும் தரும்.
அன்று முதல் இன்று வரை முணு முணுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

சனி, 4 பிப்ரவரி, 2017

போகன் என் பார்வையில்

சித்து விளையாட்டுக்களை
கலியுகத்திற்கு ஏற்றவாறு
உபயோகபடுத்தி சேட்டை செய்யும் சுகசுவாசியின் கதை.
அரவிந்த் சாமியின் அறிமுக காட்சியில்  ஆர்பார்க்கிறது இளைஞர்களின் பட்டாளம்.
ஆடல்,அடி தடி என்று வழக்கம் போல  மாமூல் (காவல்) நாயகனாக அறிமுகமாகிறார் "ஜெயம்" ரவி.
மப்பும்,உளரலுமாக நாயகி அறிமுகம் கலாசாரத்தீன் சீர்கேடு.
ரவி,ஹன்சிகா அறிமுகம்
ரசிக்கும் படியாகவும் அந்த பெண் பார்க்கும் காட்சி கல கல.
வங்கி கொள்ளை குற்றசாட்டில் கைதாகிறார் நரேன்.
தந்தையை காப்பாற்றும் தனையனாக அவதாறும் எடுக்கும் நாயகன் பிறகு நடக்கும் விறு விறு திரைக்கதை
முதல் பாதியை நகர்த்துகிறது.
இரண்டாம் பாதி ஆள் மாறாட்டம் அடி,தடி,பாடல் என்று
வழ வழ பாணியில் பயணித்தாலும் நாயகர்கள் அமர செய்கிறார்கள் இறுதி வரையில்.
தன் வசிய குரலாலும்,உடல் மொழியாலும் முதல் பாதியில் வில்லனாக இரண்டாம் பாதியில் ஹீரோ யிஸ செயல்களாலும் படம் முழுக்க தன் கொடி பறக்க விடுகிறார் அரவிந்த் சாமி.
நெகட்டிவ் கதாபாத்திரத்தில் உடல் அசைவுகளில் சிறுது தடுமாறுகிறார் ஜெயம் ரவி.
பெண்களை வெறும் கவர்ச்சியாக காட்டுவது சினிமாவின் சாபக்கேடு. இமானின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் படியும் பிண்ணணி இசை இம்சிக்கிறது.
இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளுக்கும்,வசனங்களுக்கும்  கத்திரி போட்டிருந்தால்  குடும்பத்துடன் ரசித்திருக்கலாம்.
இரண்டாவது முறையும் "தனி ஒருவன்" கூட்டணி  வென்றுள்ளது.

புதன், 25 ஜனவரி, 2017

தமிழ் மாணவர்களின் முழு வெற்றி

நம்மவர் திரைப்படத்தில் ஒரு காட்சியில் கமல் அவர்கள்
இந்த கல்லூரியை சுத்தம் செய்து விட்டிர்கள் எனில்
நாளை வரலாற்றை படித்தவர்கள் என்று அல்லாமல்,
வரலாற்றை படைத்தவர்கள் என்று பெயரும் வரும் என்பார்.
அதே போல் இன்றைய மாணவர்கள் தங்கள்
அறவழி போராட்டத்தால் உலகயே தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்து
ஏறுதழுவுதலின் மீதிருந்த தடை யை நீக்கி
புதிய வரலாற்றை படைத்து இருக்கிறார்கள் 🙏🏻🙏🏻
இது மிக சிறந்த எடுத்துக்காட்டு மாணவ சமுதாயத்திற்கு 👍🏻👍🏻.
உண்மையில் கமல் ஒரு திர்க்கத்தரிசி தான்,
இங்கே என் மாநில முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும்
என் நன்றியை பதிவு செய்கிறேன்
இந்த வெற்றியில் அவருக்கும் பங்குண்டு.
புதிய வரலாறு படைப்போம்,

வியாழன், 19 ஜனவரி, 2017

.
அலஙகாநல்லூர் " வாடி வாசல்" இன்று தமிழகம் மட்டுமல்லாமல் இந்த ஒட்டு மொத்த தேசத்தின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. அதோடு நில்லாமல்  தமிழக மக்கள் அனைவரையும்  ஒரே நேர் கோட்டில் ஒன்றினைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மூடி கிடக்கும்  இந்த கதவுகளை ஜன நாயகத்தின் அரணான சட்டமும்,மத்திய,மாநில அரசுகளும் திறந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த மக்களுக்கு வருடா வருடம் பொங்கல் பரிசாக மாற்றத்திற்கு பதிலாக  "ஏமாற்றத்தையே " பரிசாக கொடுத்தது.
"கேளுங்கள்  கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள்"  இந்த முறையும் தட்ட ஆரம்பித்தினர் ஆனால் இங்கே இந்த முறை தட்டுபவர்கள் இளைஞர்கள். "இளம் கன்று பயமறியாது "ஆதலால் என்னவோ இதன் சத்தம் பலமாகவே ஒலிக்கிறது. இந்த போராட்டம் பீட்டா என்ற தனியார் அமைப்புக்கு எதிரானது மட்டும் அல்ல மாறாக தங்கள் தனித்துவத்தையும்,கலாசாரத்தையும் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டோம் என்று உரக்க சொல்கிறார்கள் தமிழ் மக்கள் இந்த உலகத்திற்கு.
மத்திய / மாநில அரசுகள் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க தவறினால்   விளைவுகள் விபரீதமாக தான் செல்லும்.
இரவோடு இரவாக பண மதிப்பு நீக்குதல் (demonetisation) மூலம் 14 இலட்சம் கோடி மதிப்பு இழக்க வைக்கும் சர்வ வல்லமை கொண்ட அதிகாரம் நடுவன் (மோடி) அரசுக்கு உண்டெனில் அவசர சட்டம் மூலம் "ஏறு தழுவுதல் "அனுமதிக்க மறுப்பதேன் ? உங்கள் கூற்று படியே உச்சநீதி மன்ற மாண்பை கெடுக்கும்  செயல் என்றால், காவிரி நதி நீர் பங்கீட்டீல் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தீர்ப்பை மதிக்காமல் பாராளுமன்றம் மூலம் காலம் தாழ்த்தும் உங்கள் செயலை என்ன வென்று சொல்வது.நில ஆக்கிரமிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இழுக்கையில் நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டுவந்த பொழுது மாண்பு மீறப்படவில்லையா ???
"நாணல் போல வளைவது தான் சட்டம் ஆகுமா ? அதை வளைப்பதற்கு மத்திய வழக்கறிஞர் (Attorney general) பட்டம் வேணுமா என்றே எண்ண தோன்றுகிறது. அதிகாரம்  இருந்தும் சட்டசபையில் அவசர சட்டம் மூலம் ஏறுதழுவுதல் நிறைவேற்றமால் ஆட்சியை தக்கவைத்து கொள்ளவே முனைப்பு காட்டுகிறது மாநில அரசு,
தமிழ்கத்தில் என்ன நடந்தாலும் நமது மத்திய (மோடி) சர்கார்க்கு  எந்த பாதிப்பும் இல்லை என்பதால்  நடப்பதை வேடிக்கை மட்டும் பார்க்கிறது, இந்த வேடிக்கை குணம் மக்களுக்கும் ஏற்பட்டால் நாளை இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்தாகிவிடும் என்றே எண்ண தோன்றுகிறது.

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

மனதை மயக்கும் மார்கழி

அதிகாலை ஆதவன் ☀️ வரும் முன்,
கடிகாரம் உதவியுடன் துயில் கலைந்து, நீராடி நண்பர்கள் சகிதம் "பஜனை" மாமா வீட்டில் ஒன்று கூடுவோம். அவர்கள் வீட்டில் எங்களை இன் முகத்துடன் வரவேற்று டம்ளர் தததும்ப தததும்ப நுரையுடன் தரும் பில்டர் காபியை  ☕️️
ருசி கண்போம்.
பனி பொழியும் பொழுதில் பஜனை புறப்படும் "முருகா சரணம்!! சரணம் முருகா !! என்று "
எவ்வித பெரிய எதிர்பார்ப்பும் , கோரிக்கைகள் இல்லாமல்  இறைவனை பக்தியுடன் அழைத்த பருவம் அது. தொடரும் எங்களின்  பஜனை வீதிகளை கடந்து இறைவன் இல்லம்(கோவில்)நோக்கி முன்னேறும்  அங்கு இறை வழிபாடு முடித்த
கையில் சூடாக நெய் சாதமும் அதற்கு துணையாக துவையலும் பிரசாதமாக கிடைக்கும் அதை உண்டு கடற்கறையில் கால் நனைத்து,ஓடி,ஆடி, விளையாடி இன்புற்ற காலம்.
சுவையான நினைவுகளை அசைபோடுகின்றேன்.
நினைவுகள் தொடரும் ,, #மார்கழி !!!