திங்கள், 21 ஆகஸ்ட், 2017

பிஜேபி அன்றும் / இன்றும்

பிஜேபி என்ற கட்சியின் மீதிருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இன்று அமாவாசையான நாள்.

பிஜேபி என்ற கட்டுக்கோப்பான கட்சியை திரு.வாஜ்பாயிக்கு முன் / பின் இரண்டு வகையாக பிரிக்கலாம். 

வாஜ்பாயின்  13 மாத கால ஆட்சியாகட்டும் அடுத்த 5 ஆண்டுகளாகட்டும் (1999-2004) சிறப்பாகவே ஆட்சி செய்தார் குறிப்பாக மாநில உரிமைகளில் பிராந்திய கட்சிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது உதாரணம் காஷ்மீர் மாநிலத்தை கையாண்ட விதம். 

ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ் அனைத்து மாநிலங்களிலும் ஒன்று ஆட்சியை பிடிக்க வேண்டும் இல்லை ஆட்சியில் இருப்பவர்களிடத்தில் கூட்டணி ஏற்படுத்துதல் இல்லை கட்சியையே கபளிகரம் செய்தல் சபீபத்திய உதாரணம் தமிழ்நாடு. 

மத்திய அரசு நடுவண் அரசு போல் அல்லாமல் அதிமுக இரு அணிகளுக்கும் இடையில் நாட்டாமை செய்து கொண்டிருக்கிறது. 
திருமதி.சசிகலா (நல்லவரோ / கெட்டவரோ ) 122 MLA க்கள் கையொப்பம் இட்ட கடிதத்தை வாங்க இதே ஆளுநர் எப்படியெல்லாம் நாள் கடத்தினார் என்பது காலம் அறியும். 
இன்று அதே ஆளுநர் காலையில் வருவாராம் மாலையில் அமைச்சரவை மாற்றமாம். மத்திய அரசுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று தன்னிலை விளக்கம் வேறு.. 

25 ஆண்டுகால கூட்டணி கட்சியான சிவசேனாவை நம்ப வைத்து கழுத்தறுத்தது. 

பீகாரில் ஐயக்கிய ஜனதாதளம் , கோவா,அருணாச்சல் பிரதேசம் என மேற்கொண்ட மாநிலங்களில் தோற்றும் ஆட்சியில் அமர்ந்திருப்பது ஜனநாயகத்திருக்கு விட்டிருக்கும் சவால். 

மக்களின் முடிவையோ, ஜனநாயக மான்பையோ காற்றில் பறக்க விட்டு விட்டு ஆட்சியில் அமர வேண்டும் என்ற ஒரே தாரக மந்திரம். அதிகாரம் என்ற கருவி உதவியுடன் வெற்றி என்னும் பரிசை எடுப்பதில் பிஜேபி வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் 

இதுவும் மாறும்....

திங்கள், 31 ஜூலை, 2017

எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே 👑

எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே  👑

மோடி அரசின்  சமீபத்திய பரிசுகளான
வரி ஏற்றம், சிலிண்டர் மாணியம் ரத்து, ரேஷன் பொருட்களுக்கு கடுமையான கெடுபிடி இதை அனைத்தையும் தாங்கி கொண்டு  வழக்கம் போல வலித்தாலும் சிரித்து கொண்டே தன் அடுத்த வேலைக்கு தயாராவது
"மிடில்க்ளாஸ் மாதவன்களே"..

நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் இந்த திட்டத்தை கடைபிடிப்பார்களே தவிர ஒரு போதும் ரத்து செய்ய மாட்டார்கள். இன்றைக்கு உள்ள பெரும்பாலான திட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட  பெருமை அவர்களுக்கே..

சிந்தாந்த ரீதியில் வேண்டுமானால் இந்த இரு கட்சிகளுக்கும் வேறுபாடு உண்டே தவிர பொருளாதார கொள்கையில் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளே !!!

இந்த பதிவை படிக்கும் என் நண்பர்களில் சிலர் நீ தான "மோடி மோடினு "கூவின என்று முணுமுணுப்பது கேட்கிறது..

ஆட்சி,அதிகாரத்திற்கு வரும் எவராவது மக்களுக்கு நல்ல திட்டம் திட்டி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மாட்டார்களா ?? என ஏங்கி கொண்டு கடைசியில் ஏமாற்றத்தை பரிசாக வாங்கி கொள்ளும் நாட்டின் குடிமகன்களின் நானும் ஒருவன்..

ஏழ்மையை ஒழிப்பேன்,
ஏழ்மையை ஒழிப்பேன்..
என உரக்க கூறியது
ஏழைகளை ஒழித்து விட்டால் ஏழ்மை ஒழிந்து விடும் என்ற உயர்ந்த சிந்தனை போலும்...

நாட்டை ஆளும் அரசன் கை விட்டதால் நாட்டில் உள்ள நாம் அனைவரும் மன்னர்களே !!! இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் கொள்கை

எது நம்மிடம் தேவைக்கு அதிகமாக உள்ளதோ அது பணமாக இருக்கட்டும்,அறிவாக இருக்கட்டும் அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வுற்று இருப்பதே !!!

இந்த கொள்கைக்கு சட்டமும் கிடையாது பின்பற்ற கூறி சட்டத்தின் காவலர்களும் கிடையாது நம் மனதும்,அறிவும் தான் நம்முள் உள்ள காவலர்கள் அவர்களை நம்மை தவிர யாராலும் ஏமாற்ற முடியாது.
ஏமாற்றுவதர்களுக்கு நாம்
அரசியல்(வியா)வாதிகள் அல்ல .....

புதன், 26 ஜூலை, 2017

நவீன இராமயணம்

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை,
நிரந்தர நண்பனும் இல்லை என்ற
 "புது மொழி" யை நிருபித்திருக்கிறார் திரு.நிதிஷ்குமார்.

ஆட்சி,அதிகாரம் மத்தியில் மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களிலும் "தாமரை" யை மலர வைக்கும் ஒற்றை இலக்குடன் வேகமாக நடந்து கொண்டிருக்கும் "பாஜக" வின் சாணக்கியர் திரு.அமித்ஷா விற்கு கிடைத்த அடுத்த வெற்றி.

மத்தியில் தனக்கு கிடைத்த அங்கிகார்த்தை மோடி (பாஜக) செவ்வனே பயன்படுத்தி கொள்கிறது CBI உட்பட.

 தன் சிந்தாந்தங்களுடன் ஒத்து போகும் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி எதிர்கட்சிகளின் பலத்தை "வாலி"யை போல் தனக்கு சாதகமாக்கி கொண்டு 
ராமர் களையும், சுக்கிரவர்களையும், அனுமன்களையும் சேர விடாமல்   நவீன இராமயணத்தை அரங்கேற்றி வருகிறது.

25 வருட கூட்டணியாம் சிவசேனா வை நட்டாற்றில் நிற்க விட்டு இன்று அவர்கள் தயவுடனே மகாராஷ்ட்ரா வில் ஆட்சியில் உள்ள பாஜக விற்கு நிதிஷ் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. 

நடக்கும் அரசியல் திருவிளையாட்டுகளை நாட்டின் மக்களை போன்று எதிர்கட்சியான காங்கிரஸ் வேடிக்கை பார்ப்பது தான் காலக்கொடுமை.

RSS நூற்றாண்டு வருடமான 2025 இல் தன் சிந்தாந்தமான ஓற்றை கட்சி ஆட்சி முறையை பாரதத்தில் நிலை நாட்டுமா ???

அலசுவோம் அரசியலை ....

செவ்வாய், 11 ஜூலை, 2017

அமர்நாத் யாத்ரையும் மத சார்பற்ற கட்சிகளின் அமைதியும்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை சென்று கொண்டிருந்த யாத்திரிகர்கள் மீது  தீவிரவாதிகள்  தாக்குதல் 9 பேர் பலி.

மோடியின்  ஆட்சியில் மனிதனின் சாப்பாடு  உரிமைக்காக கோலி சோடாவைப் போல் பொங்கும்  தலைவர்களின் தலை களை அம்மனித உயிர்களே பலியாகும் பொழுது ஆழ்ந்த நித்திரையில் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு வேளை யாத்ரிகர்கள் குஜராத், மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும்
மாநிலத்தை சேர்ந்த குடிமக்கள் என்பதலா ?

இல்லை

அவர்களுக்கு ஆறுதல் கூற BJP இருக்கிறது நமக்கெதற்கு வம்பு என்பதலா ?

இல்லை

மத்திய கிழக்கு நாடுகளுக்கு புனித பயணம் மேற்கொண்டால் தான் நாங்கள் உற்று நோக்குவோம்,உரக்க குரல் கொடுபோம் என்ற உயரிய சிந்தனையா ?

இந்தியாவின் பன்முக தன்மை  சிதையாமலும் ஜனநாயக நாடாக தலைநிமர வைக்க உதவுவது
மதசார்பற்ற பெரும்பான்மை மக்கள் இங்கு வசிப்பதால் தான். இக்கட்சிகளின் செயல்பாட்டால் அவர்களும் "மதம்" பிடித்த "யானை" கள் ஆகிவிட கூடாது என்பதே அனைவரின் விருப்பமும்.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் "மதசார்பற்ற" மக்களாக இருப்பதாலயே பிராந்திய கட்சிகளும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களும் சில மாநில ஆளுகின்றனர்.

இத் தாக்குதலுக்கு  கண்டனம் கூட தெரிவிக்காத காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,மற்றும் ஏனைய கட்சிகள் மத சார்பற்ற கட்சிகள் என்றால், BJP மதவாத கட்சியாகவே இருந்து விட்டு போகட்டும்.

இந்த கட்சிகளின் கொள்கைகளையும்,சிந்தாந்தங்களையும் மாற்றி கொள்ளாவிட்டால் பாஜக வின் விருப்பமான காங்கிரஸ் இல்லா "பாரதம்" விரைவில் உருவாவதே காலத்தின் கட்டாயம்.

வெள்ளி, 26 மே, 2017

மாட்டுகறியும் மனிதாபிமானமும்...

மாட்டுகறியும் மனிதாபிமானமும்...

நான் மாட்டு கறி சாப்பிட மாட்டேன் அதனால் மத்திய அரசின் முடிவை ஆதரிக்கிறேன் என்று நினைப்பவர்கள் இதற்கு மேல் இந்த பதிவை வாசிக்க வேண்டாம்.இது உங்களுக்கானதல்ல.

இந்தியாவின் அழகே பன்முக தன்மை கொண்ட மக்களும் அவர் தம் கலாச்சாரமும்,மொழிகளும் தான். இதை பேணி காத்து ஜன நாயகத்தை வளர செய்வது ஒரு ரகம்.

இவைகளை வைத்தே மக்களிக்கிடேயே பிரிவினையை ஏற்படுத்தி ஜன நாயகத்தை கொலை செய்ய துடிப்பது இரண்டாம் ரகம்.

நாட்டை ஆண்ட காங்கிரஸ் ஆகட்டும் இப்பொழுது ஆளுகின்ற பிஜேபி ஆகட்டும் தன் அதிகார பசிக்கேற்ப விரும்பிய உணவை உட்கொள்ளும்.

மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பான மாடு,ஒட்டகம் இவைகளை இறைச்சிக்காக விற்க கூடாது என்ற சட்டத்தால் பாதிக்கபடுவது பெரும்பான்மை மக்களா ? சிறுபான்மை மக்களா ?

ஒட்டகத்தின் மீது காட்டும் கரிசனத்தை புரிந்து கொண்டாலே இதில் உள்ள அரசியல் என்ன வென்று பளிச்சென்று பல்லை காட்டிவிடும்.

மக்களின் ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மூலதனமாக்கி அதில் குட்டையை குழப்பி  மற்றொரு பிரிவினைரை ஒன்றாக்கி வாக்கு வங்கி அரசியலை பல படுத்துவது தான் ஒரே குறிகோள் இன்றி உயிர்களின் மீது கரிசனம் எல்லாம் நகைச்சுவை பேச்சு தான்.

சரி இந்த சவாலை எதிர்கொள்வது எப்படி?

நம் குறைகளை எப்படி கோயில்களிலும்,தேவாலயங்களிலும்,தர்க்காக்களிலும் முறையிடுவோமோ அது போன்று ஜனநாயகத்தில் ஏற்படும்  குறைபாடுகளை முறையிட  மக்கள் ஏற வேண்டிய கோயில் நீதிமன்றமே.

நம் நாட்டில் அரசுக்கு எதிராகவும் நல்லது கெட்டதை எடுத்துரைக்கவும் நீதி துறையும்,நீதி அரசர்களும் இன்னமும் இருக்க தான் செய்கிறார்கள்.

ஜனநாயகத்திற்கு விடுத்த சவாலை ஜனநாயக ரீதியில் சென்று வென்று காட்டுவோம்.

இப்படிக்கு
இந்தியன்.

சனி, 6 மே, 2017

மகிழ்மதியும் அஸ்தினாபுரமும்...

மகிழ்மதியும் அஸ்தினாபுரமும்...

அஸ்தினபுர நகரத்தின் கட்டமைப்பு, மன்னர்கள்,நாட்டின் இராணுவ படை,மக்கள் இவைகளை படித்து இருக்கிறேன். அதை  கண்ணுக்கு விருந்தாக்கிய "கலை இயக்குனர்" சாபு சரீல் க்கு முதல் சபாஷ்.

கதை: பங்காளி சண்டை அரியனையில் அமர்வதற்கு, (மகாபாரதம்)தான்.
அந்த ஒரு வரி கதையை தனக்குரிய தனித்துவத்துடன்; திரைக்கதையை வேகமாகவும்,விவேகமாகவும் காட்சிகளை அமைத்து; ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன் திரைக்கதையால் வலிமை சேர்த்து,  ரசிகனை இறுதி வரை இருக்கையில் அமர வைத்த இயக்குனர்.
"இராஜ மெளலி" யே மகிழ்மதியின் சக்கரவர்த்தி.

கதா நாயகனின் வெற்றி தன்னை விட பலமுள்ள, அழுத்தமான தனக்கு நேரெதிரான எண்ணம் கொண்ட (வில்லனை) எதிரியை வெற்றி கொள்வதே; அப்படி ஒரு வாய்ப்பை நாயகனுக்கு நல்கிய
 "பல்வாள் தேவன்" ராணா வும் நாயகனே.(துரியோதனின் குணாதிசியம்).

அரசன் என்பவன் இப்படி தான் இருந்திருப்பான் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டாக தன்னை உடலளிவிலும்,மனதளவிலும் வடிவமைத்து  கொண்ட கதையின் நாயகன் பிரபாஸ். (அர்ச்சுனனை நினைவு கூறுகிறான்)

 "ராஜ மாதா"சிவகாமி தேவி,
"இளவரசி" தேவைசேனை
நெடு நாட்களுக்கு பிறகு சினிமாவில்  ஆண்களுக்கு நிகராக அல்ல,
அதற்கும் மேலான கதாபாத்திரத்தில்
"இரட்டை குழல்" துப்பாக்கியாக
வெடிக்கின்றனர்.

கட்டப்பா கதாபாத்திரம் பிதாமகர் பீஷ்மரைய நினைவுபடுத்துகிறது. அரசின் அடிமை. மனிதர் கலக்கியிருக்கிறார் தன் வழக்கமான நக்கல் பேச்சில்.

வீரம் கலந்த விவேகமான போர் கள காட்சிகள்,கார்க்கியின் வசனம்,கீரவாணியின் பிண்ணனி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.

பாடல்கள் மனதில் நிற்கவில்லை
தமிழ் கவிஞர்களுக்கும், தமிழ் வரிகளுக்கும் பஞ்சமா என்ன பாடல்களுக்கு ??கட்டப்பா கதாபாத்திரத்தை "நாய்" என்ற வார்த்தையை (பல முறை )தவிர்த்திருக்கலாம்.

திரைப்படம் முடிந்து எழுந்து செல்கையில் ரசிகனையும்
 "ஜெய் மகிழ்மதி" என கோஷம் போட வைத்துவிட்டான்.

இந்த "பாகுபலி ..."

புதன், 3 மே, 2017

இந்தியாவும் சகிப்புதன்மையும்

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் காரில் பயணிக்க நேர்ந்தது. 

சுங்க சாவடி நெருங்குகையில் ஒவ்வொரு வண்டியாக வரிசையாக நுழைவு கட்டணம் செலுத்தி கொண்டிருக்கையில் நண்பரின் வண்டியை தீடீரென்று மற்றொறு வண்டி முந்தி செல்ல முயன்றது.

நண்பருக்கு சிறிது கோபம் வந்தது; வரிசையாக சென்று கொண்டிருக்கையில் ஏன் இப்படி முந்த நினைக்கிறாய் என்று ? 

சிறிய வார்த்தை கல கலபிற்கு பின் எங்கள் பின்னே தான் அந்த வண்டியும் வந்தது; முந்த நினைத்த நபருக்கு 25-30 வயது இருக்கும். 

மிஞ்சி போனால் 2 முதல் 3 நிமிடம் தாமதமாகும் அதற்கு கூட பொறுமையில்லாமல் வேகமாக பயணிக்க நினைக்கிறோம். 

இப்பொழுதெல்லாம் பொறுமையின்மை, சகிப்பு தன்மை இதெல்லாம் குறைந்து கொண்டே போகிறது. இது போன்ற சம்பவம் நடிகர் அமீர்கானுக்கு நடந்து இருக்கலாம் அதனால் அவர்
 "சகிப்பு தன்மை" வார்த்தையை உபயோகத்திருக்கலாம். 

இந்த விஷயத்தை அவர் ஏதோ "மோடி" அரசை தான் குறை கூறுகிறார் என்று மீடியாக்கள் கூக்குரலிட , வழக்கம் போல "தேச பக்தாஸ் "பால் போல பொங்கியேவிட்டார்கள். 

இக்காலத்தில் யார் இந்தியாவை ஆண்டாலும், இது உண்மை தான் மக்களின் "சகிப்புதன்மை" குறைந்து விட்டது. 

இப்படிக்கு..

பொதுஜனம்