ஒருவரின் இந்த விமர்சனம்தான் குபேரன் படம் பார்க்க எனக்குள் ஆர்வத்தை தூண்டியது.
இந்தக் கதைக்கு ஏன் நாகார்ஜுனா? ஏன் தனுஷ்?
எனக்குத் தோன்றியது — இந்த மாதிரி casting இருந்தால்தான் எல்லா மக்கள் கூடுவார்கள் போல.
1 லட்சம் கோடி ஹவளா, பணக்காரன், இதெல்லாம் ஒரு பெரிய ஹீரோவைக் கொண்டு செய்தால்தான் reach ஆகும்.
ஏன் அப்படி நினைக்கிறேன் தெரியுமா?
ஏனெனில், கிராமத்தை அழகாக காட்டிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, மிகவும் rich ஆக இந்தியாவின் No.1 பணக்காரர் வாழ்க்கையை பதிவு செய்த படம் தான் "கண்களால் கைது செய்".
பாடல்கள் — ரஹ்மான்
வசனம் — சுஜாதா
இயக்கம் — பாரதிராஜா
Making எல்லாமே சிறப்பாக இருந்தது.
ஒரே பிரச்சனை — நாயகன் & நாயகி புது முகங்கள்.
அதனால் தான் ஏதோ அந்த படம் ஹிட் ஆகவே இல்ல போல தோன்றுகிறது.
அந்த மாதிரி குபேரன் படமும் ஆகக்கூடாது என்ற எண்ணம் இயக்குநருக்குப் பக்காவா இருந்திருக்கிறது போல.
நாகார்ஜுனாவின் கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் depth கொடுத்திருக்கலாம்.
மற்றபடி, @dhanushkraja அளித்த அசுர நடிப்பு மூலம் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
படம் தொடக்கம் முதல் முடிவு வரை —
நமக்கே தோன்றும்: “10 ஆயிரம் கோடி தானே... அவனை விட்டுடலாமே?”
அந்த மனநிலையை இயக்குநர் சரியாகக் கையாண்டு,
“எனக்கு பணம் முக்கியமில்லை... அவன் என்னை அசிங்கப்படுத்திட்டான். அவனை கொல்லணும்!” —
என்று வில்லன் பேசும் வசனம் ரொம்ப impactful-ஆ இருக்கும்.
வில்லனிடம்,
“நீ திருந்தவேணும் னு நெனச்சேன்… திருந்தவே மாட்ட” —
என்று தனுஷ் சொல்லும் வசனம் ரொம்ப யதார்த்தமானது.
இயக்குநருக்குப் பெரிய 👏🏻👏🏻👏🏻.
இப்போது trending-இல் corporates தானே வில்லன்களாக வருகிறார்கள்.
அரசியல்வாதிகள் எல்லாம் எதுவும் இல்ல, அதைக் normalize பண்ண முயற்சி நிச்சயம் இருந்தது.
மொத்தத்தில் ஒரு சுவாரஸ்யமான கதையை சொல்ல இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார்.
முதல் பாதி வெற்றியும், இரண்டாம் பாதியை கொஞ்சம் “கத்திரி” போட்டு tight-cut பண்ணிருந்தால், இது ஒரு புதிர் ஹிட் ஆகியிருக்கும் —
இந்த குபேரன்.
இவன்
ராஜா க
#KuberaaReview
#குபேரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக