ஒரு டான், தன்னோட குடும்பத்துக்காக தவறுகளை உணர்ந்து,
"இனி இந்த பாதை வேண்டாம்" என்று ஒதுங்கிக் கொள்கிறான்.
போலீஸ் சரண் அடைகிறான்.
17 வருட சிறை தண்டனைக்கு பிறகு,
தன் மகனை பார்க்க வருகிறான்.
இப்போது மகன் சிறையினுள்.
அவனை மீட்டானா?
இதுதான் கதை.
டான் ஆக AK — ஆடுகிறார், பாடுகிறார், சண்டை செய்கிறார், காமெடி செய்கிறார்.
படம் முழுவதும் தன் தோளில் சுமக்கிறார்.
பெரிய பெரிய gangster கள் AK பார்த்துட்டு மிரள்கிறார்கள்.
"வாலி படம் பார்த்துட்டயா?" என்று கேட்டுவிட்டு,
"அப்போ நீ பிறந்துறக்க கூட மாட்ட" என்று தன் மகன் வயது குட்டி gangster கிட்ட சண்டை செய்ய போகிறார்!
அர்ஜுன் தாஸ், தன்னோட ரோல் நல்லா பண்ணி இருக்கார் —
டான்ஸ், ஆடறார், love பண்ணறார், கத்தறார்.
மொத்தத்துல நல்ல நடிப்பு.
எப்படியும் Red Dragon (AK) தான் ஜெயிக்க போறார் என்று தெரிந்து விட்டதால்,
என்னவோ சுவராஸ்யம், ட்விஸ்ட் எல்லாம் இருந்தாலும்,
AK காக மட்டும் பார்க்கலாம்.
AK யோட எல்லா பழைய படங்களுக்கு references வருது.
சிம்ரன் entry Chil...
அந்த "புலி புலி"ன்னு ஒரு பாட்டுக்கு, தியேட்டர் ல எல்லாரும் கத்தறாங்க.
அந்த பாடகரும் கத்தறறாரு!
படம் முழுக்க "AK"ன்னு எத்தனை தடவை சொல்லறாங்கன்னு ஒரு போட்டி வைக்கலாம்.
அந்த அளவுக்கு fanboy டைரக்டர் direction பண்ணி இருக்கார்.
2.30 மணி நேரம், லாஜிக் எல்லாம் மூட்ட கட்டி வைச்சுட்டு,
AK யோட மேஜிக் ஷோக்கு போய்ட்டு வரலாம்!
#GoodBadUglyreview
#AjithKumar #GBUReview
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக