சனி, 8 ஜூலை, 2023

Good Night Movie Review

 சினிமா தொடங்கிய காலம் முதல் இன்று வரை சினிமாவை அதிகம் ஆக்கிரமித்தது காதல் கதையும் , பழி வாங்கும் கதையும். இதில் பழிவாங்கும் கதையில் கூட காதல் கண்டிப்பாக இருக்கும். அப்படி பட்ட இன்றியமையாத  ஒன்று காதல். 


எத்தனை வருடங்கள் ஆனாலும் காலையில் எழுந்து பல் துலக்குவது ஓரு வழக்கமோ ,  சலிப்பு தான் ஆனாலும் அதை தவறாமல் செய்வது போல   திரைபடங்களில் காதல் கதையை பதிவு செய்வதும் இன்றியமையாதது. ஆனால் அதை காலமாற்றத்திற்கு ஏற்ப கொடுப்பதில் தான் ஒரு இயக்குனருக்கு வெற்றி கிடைக்கும். 


இதற்கு முந்திய காதல் படங்களில் கடைசி காட்சி வரை காதல் செய்து கல்யாணம் தான் கிளைமேக்ஸ். இப்போது  கல்யாணத்திற்கு பிறகு அந்த காதல் என்னவாயிற்று என்பதை அழுத்தமாக கூறிய படங்கள் அலைபாயுதே முதல் ராஜாராணி வரை வெற்றி படங்களான வரலாறு உண்டு. 


IT company யில் வேலை செய்யும் கதாநாயகன் , Audit கம்பெனி யில் வேலை செய்யும் கதாநாயகி. தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை காதலிக்க முயலும் நாயகனுக்கு  அவன் குறட்டை யால் காதல் break up. தனக்கு ராசியில்லை என்பதை குற்ற உணர்ச்சியாக கருதும் நாயகி இவர்கள் இருவரும் சந்தித்து ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். 


திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரின் குறைகள் அவர்கள் வாழ்க்கையை எப்படி புறட்டி போட்டது என்பதை வலுவான திரைக்கதை யால் அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிய வைக்கிறார் இயக்குனர். 


மோகன் கதாபாத்திரத்தில் மணிகண்டன் இன்றைய IT ஊழியரை கண் முன் நிறுத்துகிறார் , தன் ஆங்கில பிரச்சினை யால் தன்  Boss இடம் கூனி குறுகும் காட்சி யாகட்டும் தன் தங்கையே தன் அவமானப்படுத்தும் போது அந்த கோபத்தை தன் மனைவி இடத்தில் பொங்கி எழும் காட்சியிலும் மிக எதார்த்தம். 



அப்பாவி பெண்னை கண் முன்னே நிறுத்தும் அனுவாக மீதா ரகுநாத் பாந்தமான நடிப்பில் நமக்கு ஒரு அனு மனைவி யாக கிடைக்க மாட்டாளா என சிறுது ஏங்க வைக்கிறாள். மோகனின் மாமாவாக ரமேஷ் திலக் கின் நடிப்பு , ஒரு சிறந்த குணச்சித்திர நடிகரை இவ்வளவு நாள் இந்த சினிமா உபயோகப்படுத்த வில்லையோ என நினைக்க தோன்றுகிறது. 



மோகனின் அம்மா அனுவிடம் ஏதாவது விசேஷம் உண்டா என கேட்பதற்கு அனுவின் பதில் 

கல கல.மோகனின் அம்மா , தங்கை ,அக்கா என் அனைவரும் மிக இயல்பாக நடித்துள்ளனர். 

காதல் கதையில் குடும்ப கதையையும் பதிவு செய்து வெற்றி பெற்றுள்ளார் படத்தின் இயக்குனர் வினாயாக் சந்திரசேகரன்.


Good Night !! 


இவன்

ராஜா.க


#Goodnight #Tamilmovie #Manikandan 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக