டக்கர் அப்படினு ஒரு படம்.
கதை என்னமோ சுமார் ரகம் , நாயகன் பணக்காரன் ஆக ஆசை படுகிறான். அதற்கு அவன் திட்டமிடலை சிறப்பான திரைக்கதையால் காட்சி படுத்தியிருக்க வேண்டாமா ? மாறாக படு சொதப்பல் திரைக்கதை யால் , கதாநாயகனோடு
படம் பார்க்க வந்த நம்மையும் சிறிது புலம்ப வைத்து விடுகிறார் இயக்குனர்.
வில்லன்(#தீரன் படத்தின் ஓமா)
கதாபாத்திரம் மீது முதலில் பயம் வரும் என்று பார்த்தால் படம் செல்ல , செல்ல பரிதாபம் வருகிறது .யோகிபாபு காமெடிக்கு வில்லனுக்கு எப்படி எரிச்சல் வருகிறதோ அதே எரிச்சல் படம் பார்க்கும் நமக்கும்.
Feminist என கூறி தன்னை தானே கலாய்த்து கொள்ளும் கதாநாயகி நாயகனோடு சேர்ந்து சிகரெட் பிடிக்கிறாள் , மது குடிக்கிறாள் வேறு எதுவும் உருப்படியாக செய்யவில்லை.
சித்தார்த் பஞ்ச் டயலாக் பேசும் போதும் சரி , fight scenes சிரிப்பு தான் வருகிறது.
பொதுவாக எந்த படத்தையும் அதிகமாக நெகட்டிவ் விமர்சனம் செய்ய மாட்டேன் ஆனால் என்னையும் அந்த படம் இவ்வளவு ரொம்ப சுமரான படமும் இப்போ வருது என்று எழுத வைத்து விட்டீர்கள். சினிமாவில் logic பார்க்க கூடாது , இந்த படத்தை எப்படி பார்த்தாலும் நல்லா இல்லை. மொத்தத்தில் டக்கர் படம் டர்ர்ர்....
#Takkar #Netflix #Movietime
#டக்கர்
இவன்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக