ஹிந்தி வெப் சீரிஸ் பெயர் நினைவில்லை , தமிழ் டப் பில் பார்த்தது. அதில் வரும் இரு (ஆண் , பெண்) கதாபாத்திரங்கள் நேரில் சந்திக்காமல் மொபைல் பேசி கொள்வார்கள்.
ஆண் மஹாராஷ்ட்ரா வை சேர்ந்தவர் தான் வேலைக்காக மும்பை வந்து வேலை செய்வார் அந்த பெண் மும்பை சேர்ந்தவர்.
அவர்கள் உரையாடலில் கவனிக்க வைத்தது. அவன் சொல்லுவான் இங்கே (மும்பை) சம்பாதித்து விட்டு ஊரில் போய் குடியேறிவிடுவேன் அதற்கு அந்த பெண் சொல்லுவார் மும்பை தன் பணத்தை வெளியே விடாது இங்கே சம்பாதித்த பணத்தை இங்கேயே தான் இருக்க செய்யும் என்பார். கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
சில பலரிடம் விசாரித்த போது அதில் 90% ஆம் என்றனர்.நன்கு தெரிந்தவரிடம் (மும்பை காரர்) இதை பற்றி கூறினேன் அவர் சிரித்து கொண்டே இதெலாம் யார் உனக்கு கூறியது என கேட்க இந்த webseries பற்றி கூறினேன். மேலும் சிரித்து கொண்டு உனக்கு உலகமே சினிமா தான் போல என கூறி அவர் ஒரு கதை கூறினார்.
அவர் பாட்டி அவருக்கு கூறியதாம் , அதாவது ஒவ்வொரு ஊரிலும் ஒரு தெய்வம் ஒரு பிரத்யேகமாக இருக்கும் அது போல #மும்பை க்கு மகாலஷ்மி யாம். அதனால் தான் அங்கு பணத்துக்கு பஞ்சமே வரதாம் , எத்தனை இயற்கை இடர்பாடுகள் (#மழை, #புயல்) வந்தாலும் எவ்வளவு #பணம் அழிந்தாலும் அதை விட பன் மடங்கு செல்வதை
லஷ்மி தேவி கொடுபாராரம்.
அந்த மும்பை மண்ணிற்கு. இந்த கதை யை கேட்டதும் சற்றே மெய்சிலிர்க்க வைத்து விட்டது. தமிழ்நாட்டிற்கு எப்படி வந்தாரை வாழவைக்கும்
சிங்கார சென்னை யோ அது போல மும்பை போல. ஆனால் சென்னை இங்குள்ள பணத்தை வெளியே செல்ல அனுமதிக்கும் போல ❤️❤️
#மும்பை #தெரிந்தகதைகள்
இவன்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக