ஞாயிறு, 19 மார்ச், 2023

முதல் அனுபவம் !!

 இது போன்றதொரு பிரதோஷ நாளில் குலசேகர பட்டினத்தில் உள்ள அறம் வளர்த்த நாயகி (சிவன் கோயில்) தரிசனம் செய்ய வாய்ப்பு நல்கியது. 


பெரும்பாலும்  கோயில்களுக்கு வேட்டி , சட்டை யில் செல்வது வழக்கம். அன்றும் அதே உடையில் சென்று இருந்தேன். பிரதோஷம் அன்று சிவ பெருமான் அம்பாள் சகிதம் சப்பரத்தில் (சிவிலி யில்) பிரகாரம் சுற்றுவது வழக்கம் அந்த கோயிலில்.


அன்று கோயிலில் மிக குறைந்த நபர்கள் வந்து இருந்தனர். சிவிலி தூக்க ஆட்கள் பற்றாக்குறை போல என்னை பார்த்து விட்டு தம்பி நீங்க தூக்குகிறார்களா என கேட்க ? சற்று தயக்கத்துடன் ஒத்துக்கொண்டேன்.அந்த உடைக்கு (வேஸ்டி ) நன்றி சொல்லணும். 


முதன் முறை இது போன்ற அனுபவம்.ஒரு வழியாக மூன்று முறை பிரகாரம் சுற்றினோம் மூன்றாவது சுற்றில் சற்று வலி இருந்தது. வெளி காட்டி கொள்ளாமல் சப்பரத்தை இறக்கி வைத்தோம். 


முடிவில் தம்பி தேவாரம் பாடி முடித்து விடுங்க என்று கூற , அண்ணே என்று இழுத்தேன் தம்பி இந்தாங்க  இப்போது யாரும் மனப்பாடமா படிக்கிறார்கள் இந்தாங்க புத்தகம்

 என்று  படிக்க சொன்னார்.அவர் தான் வழக்கமா படிப்பார் போலும் அடுத்த தலைமுறை அவர் வழி கொடுத்தது மகிழ்ச்சி தந்தது.

குலசேக்ரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி க்கு நன்றி 🙏🙏🙏


#குலசை #குலசேகரன்பட்டினம்

#சிவன் #கோயில் #பிரதோஷம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக